SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பதினஞ்சு வயசுலே பரு பிரச்சினை!

2018-06-11@ 14:30:26

எனக்கு 15 வயது ஆகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுகிறேன். ஒரு பரு மறைந்தாலும்கூட முகத்தில் தழும்பு ஏற்படுத்தி விடுகிறது. பல யோசனைகளும் பிரயோஜனப்படவில்லை. நீங்க ஏதாவது சொல்லுங்க ஆன்ட்டி...
- நித்யா, திருநெல்வேலி.

“டீனேஜ் பருவத்தில் பரு தொல்லை சகஜம்தான். பருவை கிள்ளினாலோ, அழுத்தினாலோ அதுதான் கரும்புள்ளியாகிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்குதான் பருப்பிரச்சினை அதிகம்” என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.“சருமத்தில் எண்ணெய் சுரப்பி அதிகம் சுரக்கும் போது அது சருமத்தில் பேக்டீரியல் இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தும். அதனால், எண்ணெய் சருமம் உள்ளவர்கள், அவ்வப்போது முகத்தை ஃபேஸ்வாஷ் செய்ய வேண்டும். சோப் பயன்படுத்த தேவையில்லை. வேம்பு மற்றும் எலுமிச்சை தன்மை கொண்ட ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம். இது முகத்தில் பருக்கள் தோன்றாமல், எண்ணெய் பசையை குறைத்து சருமத்தில்
அதிகம் எண்ணெய் தங்காமல் பாதுகாக்கும்.

சிலருக்கு முகத்தில் சின்ன பரு வந்தாலும் அதை கையால் கிள்ளி விட்டுவிடுவார்கள். கை நகம் தான் இதற்கு முதல் எதிரி. பருக்களை கிள்ளும் போது, அது மற்ற இடங்களில் பரவுவது மட்டும் இல்லாமல், கரும்புள்ளியாகவும் மாறும். அதனால் கிள்ளாமல், ஃபேஸ்வாஷ் கொண்டு கழுவி வந்தாலே சரியாகிவிடும். முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய, சந்தனம் இரண்டு டீஸ்பூன் (சந்தன கட்டையில் உரசியது), வெள்ளரிக்காய் சாறு 3 டீஸ்பூன் குழைத்து பருக்கள் உள்ள இடத்தில் பத்து போடலாம். எண்ணெய் பசையும் குறையும்.

முல்தானி மெட்டி ஒரு டீஸ்பூன், பன்னீர் மற்றும் தேன் தலா 1/2 டீஸ்பூன், 5 சொட்டு எலுமிச்சை சாறு இதனை பேஸ்ட் போல கலந்து முகத்தில் தடவி காய்ந்த பிறகு கழுவலாம். இதனை வாரத்தில் மூன்று முறை செய்து வரலாம். முல்தானி மெட்டி என்பது ஒரு வகையான களிமண் என்பதால் அதற்கு எண்ணெய் பசை எடுக்கக்
கூடிய தன்மையுண்டு. மேலும் சின்னச் சின்ன பருக்களையும் நீக்கும். தவிர அழகுக்கலை நிபுணரிடம் சென்று ஹைபிரீக்வென்சி (highfrequency) சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் தலையில் உள்ள பொடுகு மட்டுமில்லாமல் பரு மற்றும் கரும்புள்ளிப் பிரச்னையும் நீங்கும்” என்றார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

தொகுப்பு : ப்ரியா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

 • northkorea_southkore

  வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

 • americatoday_flood123

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

 • pakistan_vehicls12345

  பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

 • jawa_studentelection123

  ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்