SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிப்ஸ்...டிப்ஸ்...

2018-05-17@ 18:04:24

நன்றி குங்குமம் தோழி

* கோவைக்காயை சமைத்தால் சிலர் சாப்பிட மாட்டார்கள். கோவைக்காயை வில்லைகளாக நறுக்கி தயிர்,  உப்பு போட்டு நன்றாக கலக்கி காயவைத்து வத்தல் செய்து பொரித்து கொடுத்தால் போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவார்கள்.

* பூண்டு ஊறுகாய் தயாரிக்கும் போது சிறிதளவு பூண்டை விழுதாக அரைத்து சேர்த்து செய்தால் நல்ல  மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
- உ.சுல்தானா, ராமநாதபுரம்.

* முட்டை ஆம்லெட் செய்யும்போது முட்டையை ஊற்றி அதில் சிறிது கேசரிப் பவுடரை சேர்த்தால் ஆம்லெட் பார்க்க மிகவும் நன்றாக இருக்கும்.
- நா.கற்பகம், வேலூர்.

* உளுந்து வடை செய்யும்போது அரைத்து எடுத்துள்ள மாவில் 1 பிடி கோதுமை மாவு சேர்த்து பிசைந்து  செய்தால் வடை பூ போல இருப்பதுடன் எண்ணெயும் குறைவாக தேவைப்படும். அதே போல் அதிரசம் செய்யும்போது  அரிசி மாவுடன் 1 பிடி கோதுமை மாவு சேர்த்து மாவை நன்றாக கிளறி செய்தாலும் அதிரசம் மெத்தென்றும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
- சு. கண்ணகி, மிட்டூர்.

* மாங்காய் தொக்கு செய்வதற்கு முழு மாங்காயைக் குக்கரில் வேகவைத்து தோலுரிக்கவும். எண்ணெயை  காயவைத்து கடுகு, காரப்பொடி தாளித்து மாங்காய் விழுதை போட்டு கிளறினால் அல்வா மாதிரி வரும். சுவையாகவும்  இருக்கும்.
- இல.வள்ளிமயில், திருநகர்.

* வடாம் போட்டு வைத்துள்ள டப்பாவில் பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் வடாம் பெருங்காய  வாசனையுடன் இருக்கும்.

* காலை சமைத்த சாதம் இரவு கொஞ்சம் கட்டியாக இருந்தால் கரண்டி காம்பினால் நன்கு கிளறி, நடு  சாதத்தில் துளை போட்டு கால் கப் நீர் விட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்த பின் எடுத்தால் சாதம் பொல  பொலவென்று புதிதாக வடித்தது போல் இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

* மாலட்டு பிடிக்கும் பொழுது நன்கு வறுத்த வெள்ளை எள்ளையும் சேர்த்து பிடித்தால் மாலட்டு நன்கு  மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

* இட்லி மாவு மீந்து போய் புளித்து போயிருந்தால் அதனைக் கொட்டி விடாமல் எவர்சில்வர் பாத்திரங்களை  தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாகும்.
- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

* கோதுமை மாவை சலித்த பிறகு அதில் வரும் தவிட்டை வெளியே கொட்டி விடாமல் வைத்திருந்து,  அதனுடன் பாத்திரம் தேய்க்கும் சோப் பவுடரைக் கலந்து பாத்திரங்கள் தேய்த்தால் ‘பளிச்’ என்று பாத்திரங்கள்  சுத்தமாக காணப்படும்.
- கஸ்தூரி கதிர்வேல், வேலூர்.

* மாங்காய் தொக்கு, இஞ்சி தொக்கு என எந்த தொக்கு செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சைப்  பழச்சாற்றை பிழிந்தால் தொக்கு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
- ஆர். கீதா, திருவான்மியூர்.

* ஃபில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையை  போட்டால் துளை அடைத்துக் கொள்ளாது டிக்காஷன் ஒரே சீராக இறங்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* இட்லி, தோசை மாவை அரைத்து வைத்தால் புளித்து பொங்கி விடும். அவ்வாறு பொங்காமல் இருக்க  வாழைத்தண்டை மாவின் நடுப்பகுதியில் வைத்து விடவும். வாழைத்தண்டு உயரத்திற்கு மேல் மாவு பொங்கி வராது.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்