SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2018-04-26@ 15:29:30

முறுக்கு செய்யும்போது பச்சைமிளகாயை அரைத்து சேர்த்தால் முறுக்கு வெண்மையாக பார்க்க அழகாக இருக்கும். சாமை அரிசியுடன் வேர்க்கடலையைப் பொடி செய்து சேர்த்து முறுக்கு செய்தால் சுவையாக இருக்கும்.
- சு.கண்ணகி, மிட்டூர்.

ரெடிமேட் ஷர்ட் வாங்கினால் அதன் உள்ளே ஒரு ஸ்பாஞ்ச் வைத்து மடித்திருப்பார்கள். அதனை தூக்கி எறியாமல் வெங்காயம் வைக்கும் பிளாஸ்டிக் கூடையில் ஸ்பாஞ்ச் வைத்து அதன் மேல் வெங்காயம், உருளைக்கிழங்கு அல்லது சேப்பங்கிழங்கு என எல்லாவற்றையும் வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும். ஈரப்பதத்தை ஸ்பாஞ்ச் இழுத்து விடும்.
- ரேவதி வாசுதேவன், தஞ்சாவூர்.

ஆப்பம் செய்வதற்கு முதல் நாள் மாவில் தேங்காய் நீரை கலந்து வைத்தால் ஆப்பம் பூவாக இருக்கும். பருப்பை வேகவைக்கும் போது அதில் சிறிது நெய் விட்டால் சீக்கிரம் வெந்து விடும். வாசனையும் கூடும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

கோதுமையை நன்கு கழுவி பின்னர் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் உலர்த்தி மெஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான ருசி மிகுந்த சப்பாத்தி கிடைக்கும். கிழங்குகள் சீக்கிரம் வேக பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து வேக வைத்தால் எளிதில் வெந்து விடும்.
- வி.இராஜேஸ்வரி, தேனி.

அதிரசம் செய்யும்போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழத்தையும் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். மாலட்டு பிடிக்கும் பொழுது நன்கு வறுத்த எள்ளையும் சேர்த்து பிடித்தால் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

தேங்காய் எண்ணெயை அதிக நாள் வைத்திருந்தால் காறல் வாடை வரும். சிறிது கற்பூரத்தைப் பொடி செய்து எண்ணெயில் போட்டு வைத்தால் காறல் வராது. மணமாகவும் இருக்கும்.
- எஸ்.வள்ளிசேகர், அத்திப்பட்டு.

சிக்கன் துண்டுகளுடன் தயிர், பூண்டு, இஞ்சி, கலர் பவுடர், எலுமிச்சைச்சாறு கலந்து 1 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு எண்ணெய், மிளகாய்த்தூள் கலந்து 10 நிமிடம் லேசாக வேகவைக்கவும். சிக்கனை தனியே எடுத்து ஆறியதும் சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சிக்கன் ரோஸ்ட் ரெடி.
- பொ.ஜெனிட்டா, மேட்டுப்பாளையம்.

ஃபுரூட் சாலட்டில் சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொண்டால் அதிக சுவையுடன் இரும்பு சத்தும் அதிகரிக்கும்.
- கவிதா சரவணன், திருச்சி.

முட்டைகோஸைத் துருவி நன்கு வதக்கி மிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார்.
- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

சேப்பங்கிழங்கை குக் கரிலோ, தண்ணீரிலோ இட்டு வேகவைத்தால் பதம் தவறிப் போய் ‘கொழ கொழ’ வென்றாகி விட வாய்ப்புண்டு. அதனால் இட்லித் தட்டில் வைத்து வேகவைத்து எடுத்தால் அருமையாக இருக்கும்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-97.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

 • singaporeasianmodi

  சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

 • crowd_thiruchendhuru11

  சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்