SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடை மட்டுமா அழகு?

2018-04-20@ 13:04:41

நன்றி குங்குமம் தோழி

கிட்ஸ் ஜுவல்லரி

பெரியவர்களுக்கு மட்டுமல்ல கைக்குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் சிறுமிகள் வரை அனைவருக்கும் இப்பொழுது   தனியே கிட்ஸ் ஜுவல்லரி என்கிற பெயரில் அழகழகான நகைகள் அற்புதமான டிசைன்களில் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு விதவிதமான உடைகள் மட்டுமல்ல, அழகழகான ஆபரணங்களையும் அணிவித்துப் பார்ப்பதில்தான்   எத்தனை மகிழ்ச்சி நமக்கு.நம் வீட்டு குட்டி இளவரசிகளை கண்களைக் கொள்ளை கொள்ளும் விதத்தில், அழகாய்   அவர்களை அலங்கரித்துப் பார்ப்பதிலும்தான் நாம் எவ்வளவு குதூகலம் அடைகிறோம். அதுவும் பிறந்தது பெண்   குழந்தையாக இருந்துவிட்டால் போதும், உடை மட்டுமல்ல, உடைக்கேற்ற ஆபரணங்களையும் குழந்தைக்காகப் பார்த்துப்   பார்த்து வாங்கி, வாங்கியவற்றை அணிவித்து, நம் வீட்டு மழலைகளை மேலும் அழகாக்கிப் பார்ப்பதில் பெற்றோருக்கு   மட்டுமல்ல, குழந்தைகளைக் காணும் அனைவருக்கும் பரவசம்தான்.

திருமண நிகழ்ச்சியோ, நம் இல்லங்களில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளோ, பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும்   குழந்தைகள் வரை அவர்களுக்கான அனைத்துவிதமான ஆபரணங்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் நமக்கு   அலைச்சலும் மிச்சம். அப்படியான ஒரு வசதியுடன், குழந்தைகளுக்கான தனிப் பிரிவு ஒன்றினை, ‘யங் ஒன் கலெக்   ஷன்’ என்ற பெயரில் ஒரு தனிப் பிரிவாகவே என்.ஏ.சி ஜுவல்லர்ஸ் உருவாக்கி இருக்கிறது.

கண்ணைக் கவரும் வடிவங்களிலான லைட் வெயிட்டட் ஜுவல்லரியில் துவங்கி, அழகாக வடிவமைக்கப்பட்ட   தனித்துவம் வாய்ந்த ஆபரணங்களுடன் கோல்ட் செட், ப்ளாட்டினம் செட், டைமண்ட் செட் என எல்லாவற்றிலும்   விதவிதமான அழகழகான செட் நகைகளை மிகக் குறைந்த விலையில் துவங்கி தேவைக்கு ஏற்ற எடைகளிலும்   விற்பனைக்கு உள்ளன.

பிறந்த குழந்தைகளுக்கான பாலாடை, கையில் கட்டும் திருஷ்டிமணி, கால் கொலுசு, தண்டை, சின்ன செயின், இடுப்பு   செயின், ஒட்டியாணம், நெக் செயின், பென்டன்ட் சிம்பிள் நெக்லஸ், தோடு, பிரேஸ்லெட், விரல்களில் அணியும்   மோதிரம், அங்கி, நெத்திச்சுட்டி, அத்துடன் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் சில்வர் பவுல், கோல்ட் பவுல்,   குழந்தைக்கு விளையாட்டு காட்ட கிளுகிளுப்பை, பவுடர் டப்பா, சோப்பு டப்பா, பொட்டு அச்சு வரை எல்லாமும் ஒரே   இடத்தில் கிடைக்கிறது.

திருமண நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளுக்கும் அணிவித்து அழகுபார்க்கும் செட் நகையாக நெக்லஸ், ஆரம், ஒட்டியாணம்,   கடியம் (வங்கி), வளையல், நெத்திச்சுட்டி, ஜடை பில்லை என அனைத்தும் ஒரே இடத்தில்  கிடைக்கும்.குழந்தைகளுக்கான செட் நகைகளிலும், கை வேலைப்பாடுகளால் உருவாக்கப்பட்ட டெம்பிள் ஜுவல்லரி  ஆபரண  நகைகள் கிடைக்கிறது. கடவுள்களின் உருவங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தகைய  ஆபரணங்கள் நகாஸ்  வேலைப்பாடு என அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க டிரெடிஷனல் மாடலாகும். இவை  தவிர்த்து, சாதாரண  பார்ட்டிவேர் உடைகளுக்கேற்ற லைட் வெயிட்டட்  ஜுவல்லரிகளும் நம் வீட்டு குட்டீஸ்களுக்கு  கிடைக்கின்றன.        

- மகேஸ்வரி
படங்கள் : ஏ.டி. தமிழ்வாணன்
மாடல்: நன்மதி கதிர்
ஒப்பனை: ஃபாத்திமா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

 • bangladeshfire

  வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்