SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உங்களுக்கு தையல் தெரியுமா?

2018-04-18@ 13:43:24

நன்றி குங்குமம் தோழி

*தையல் மிஷினை மாதமொருமுறை எண்ணெய் போட்டு துடைக்க வேண்டியது அவசியம். எண்ணெய் போடும் முன்  இயந்திரத்தில் உள்ள நூல், அழுக்கு,  தூசிகளை பிரஷ் கொண்டு எடுத்து விட வேண்டும்.

*தையல் மிஷின் டிராயரில் ஒரு பின்குஷனில் சில குண்டூசிகள், ஊசிகள் குத்தி வைத்தால் தேவைப்படும் போது  எடுத்துக் கொள்ளலாம்.

*ஒரு காந்தத் துண்டினையும் வைத்திருந்தால் ஊசிகள் எங்கு கிடந்தாலும் எடுத்து விடலாம்.

*தடிமனான துணிகளை தைப்பதற்கு முன்பு ஊசியில் சிறிது சோப்பு தடவினால் ஊசிகள் உடையாமல் இருக்கும்.

*ஊசிகளின் முனை மழுங்கி விட்டால் உப்புத் தாளில் பல முறை குத்தி எடுத்தால் கூர்மையாகி விடும்.
 
*கத்தரிக்கோல் மழுங்கி விட்டால் உப்புக் காகிதத்தை கத்தரியால் கத்தரித்தால் கூர்மையாகி விடும்.
 
*தையல் மிஷின் பெல்ட் நீளமாக இருந்தால் குளிர்ந்த நீரில் அதை அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு வெயிலில்  காயவைத்தால் சரியாகி விடும்.
 
*ஊசிகள் வைக்கும் டப்பாவில் சிறிது ஸ்டீல்உல்லை நிரப்பி வைத்தால் ஊசிகள் துருப்பிடிக்காது.
 
*பிளாஸ்டிக் ஷீட் போன்றவற்றைத் தைக்கும்முன் அதன் மேல் மெழுகு தடவிய காகிதத்தை வைத்துத் தைத்து விட்டு  பிறகு அந்தக் காகிதத்தைக் கிழித்து விட்டால் பிளாஸ்டிக் ஷீட் கிழியாது.
 
*ஜிப் வைத்துத் தைப்பதற்கு முன் செலோஃபென் டேப் கொண்டு ஒட்டி விட்டு பிறகு எளிதாக தைக்கலாம்.
 
*தையல் மிஷினை சுத்தப்படுத்த டர்பன்டைன் ஆயிலைப் பயன்படுத்தலாம். எண்ணெய் போட்ட பின்பு ஒரு துணியில்  சிறிது நேரம் தைத்து விட்டு பின்பு உறையினால் மூடி வைக்க வேண்டும்.
 
*தைக்கும் போது கையை ஒரு சிறிய குஷன் தலையணை மேல் வைத்துக் கொண்டு தைத்தால் வலிக்காது.  அவ்வப்போது மரம், செடிகளைப் பார்க்க வேண்டும், பார்வையைத் திருப்ப வேண்டும். இப்படிச் செய்தால் கண்கள்  களைப்படையாது.
 
*தையல் மிஷினைப் பயன்படுத்தாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது. அவ்வப்போது தைக்க வேண்டும்.
 
 - ஆர்.ஜெயலெட்சுமி,
திருநெல்வேலி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்