SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2018-04-16@ 15:35:42

ஒரு பானையில் மணலைப் போட்டு, அதில் எலுமிச்சைப் பழங்களை புதைத்து வைத்தால் பழங்கள் கெடாது இருக்கும். தேங்காய் துண்டுகளை தயிரில் போட்டு வைத்தால், தயிர் ஒரு வாரம் வரை கெடாது இருக்கும்.
- கஸ்தூரி கதிர்வேல், வேலூர்.

கண்ணாடி எதுவும் சிதறி உடைந்து விட்டால் சாண உருண்டைகளை ஒற்றி எடுப்பார்கள் பழைய காலத்தில்! இப்போது சாணிக்கு எங்கே போவது? கோதுமை மாவு உருண்டையால் சுத்தமாக ஒற்றி எடுக்கலாமே.
- ஜே.சி.ஜெரினாகாந்த், ஒக்கியம் துரைப்பாக்கம்.

புதிதாக முறம் வாங்கியவுடன் செம்பருத்தி இலைகளை அரைத்துப் பூசி விட்டால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடும்.
- ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.

வெண்டைக்காயை நறுக்கியதும் ஒரு நியூஸ்பேப்பரில் போட்டு, பேப்பரால் மூடிவிட்டு அரை மணி நேரத்துக்குப் பின் அதில் பொரியல் செய்தால் குழகுழப்பு இருக்காது. இனிப்பு வகைகளை அவனில் சூடு பண்ணலாம். ஆனால் இனிப்பு வகைகளில் சில்வர் பாயில் இருந்தால் அவனில் சூடேற்றக் கூடாது. வாழைக்காய், மாங்காய், முருங்கைக்காய்களை குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால் மூன்று நாட்களானாலும் புதிது போல் இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-19.

வடாம் மாவில் கடைசியாக கொஞ்சம் இருக்கும்போது அதில் போர்ன்விட்டா அல்லது பூஸ்ட் 3 டீஸ்பூன் போட்டு தண்ணீரில் நன்றாக கரைத்து மாவில் சேர்த்துப் பிறகு வடாம் பிழிந்தால் சாக்லெட் மணத்துடன் வித்தியாசமான கலரில் வடாம் தயார்.

நேந்திரங்காய் சிப்ஸ் வறுக்கும்போது ஒரு மஞ்சளையும் இடித்து சேருங்கள். சிப்ஸுக்கு நல்ல நிறம் கிடைக்கும். பீட்ரூட்டை தேவையான அளவுக்கு துண்டு துண்டாக்கி உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும். தண்ணீரை நன்றாக வடிகட்டி ஒரு நாள் முழுக்க வெயிலில் காய வையுங்கள். பிறகு வழக்கமாக ஊறுகாய் செய்வதைப் போல செய்தால் சுவையாக இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

காலை உணவிற்குப் பின் நூடுல்ஸ் மீதம் இருந்தால் அதனுடன் சில பச்சைக் காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து சாலட் தயாரிக்கலாம்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

ஒவ்வொரு முறை கேஸை (Gas) அணைக்கும் போது ஸ்விட்சுடன், ரெகுலேட்டரையும் அணைத்து விட்டால் கேஸ் 1 வாரம் வரை கூட வரும். கேஸ் மிச்சமாகும். கிச்சனில் கேஸ் அடுப்பிற்கு மேல் சிறிய ஸ்டாண்டோ, ஷெல்ஃபோ மாட்டுவதை தவிர்க்கவும். சாமான்கள் ஏதாவது தேவைப்பட்டால் எடுக்கும் போது தவறலாம். எரியும்போது அவைகளை எடுப்பதால் தீப்பற்றும் அபாயம் உண்டு.
- ஆர். சகுந்தலா, சென்னை-33.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்