SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொந்த அனுபவம்

2018-03-21@ 15:02:01

நன்றி குங்குமம் தோழி

‘மா’ கதையைப் படித்தேன். அக்கதையைப்போல் உலகத்தில் யாருக்கும் நடக்காமல் இல்லை. ஏன் என்றால், அதற்கு நானே உதாரணம். என் பெயர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எனக்கு அப்பா, அம்மா இல்லை. மாமா, பாட்டி வளர்ப்பு, தமிழ்ப் பொண்ணான நான் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு ஆண் நண்பரோடு ஓர் ஈர்ப்பு, வீட்டில் ஒரு பக்கம் பிரச்சனை, எங்கள் அத்தை ‘‘அவள ஏன் படிக்க வைக்கிற, அவங்க அப்பா ஊருக்கு அனுப்பிவிடு’ என்கிறார்.

எனக்கோ படிக்கணும், அவனுடன் பழகியதும் நான் படிக்க வைக்கிறேன் எனச் சொன்னான். என் வயதையும் அவன் வயதையும் நான் மறந்தே போனேன். எனக்கு 13, அவனுக்கு 23 வயது. போலித் திருமணம். கோவிலில், போட்டோ எடுத்தும் ஏனோ கேமராவில் பதியவில்லை. 5 மாதம் இருந்தேன். அந்த சிறுவயதிலே மிகுந்த அடி, உதை, கொடுமை.

நான் இருந்தால் மாமாவுக்கு பிரச்சனை வருகிறதென இவனுடன் வந்தால், இவனோ காமவெறியன், அய்யோ அடி, உதை தாங்கும் உடம்பா என் உடம்பு? 3 மாதம் கர்ப்பம். வயதோ 13½. நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் என்னை விட்டுவிட்டான். நான் என் மாமா வீட்டிற்கு முன் நிற்கிறேன். மாமாவும், பாட்டியும் ஏதும் பேசவில்லை. எப்படியோ ஏற்றுக்கொண்டார்கள். ஒரு வழியாக கர்ப்பம் கலைக்கப்பட்டது. மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றளவும் யாரேனும் என்னிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னால் தன்னாலே சிரிப்பு வருகிறது. தொண்டு நிறுவனத்தின் நிதியுதவி பெற்று +2 முடித்து, கல்லூரியில் விஸ்காம் முடித்தேன். எனக்கு நடனமும், ஓவியமும் தெரியுமென்பதால் சிறுசிறு வகுப்புகள் நடத்தி வருகிறேன். எம்.ஏ.சைக்காலஜி முடித்தேன். வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். ஒரு விஷயம் சொல்லவேண்டும். நிதி உதவி கிடைப்பதற்கு முன் தொண்டு இல்லம் ஒன்றில் வளர்ந்த பெண் நான். அந்த இல்லம் இல்லையெனில் கண்டிப்பாக நான் இல்லை.

- ஒரு வாசகி 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்