SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமாரா தாய்ப்பால் வங்கி

2018-03-14@ 15:04:51

நன்றி குங்குமம் தோழி

பெங்களூரின் கொதிக்க வைத்து பின் குளிர வைத்து பதப்படுத்தப்பட்ட ஒரே தாய்ப்பால் வங்கி அமாரா. இது 2017ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி துவக்கப்பட்டது. டாக்டர் ஸ்ரீகாந்த் மனிகாந்தி மற்றும் டாக்டர் அன்கித் ஸ்ரீவத்சவா இதை தொடங்கியவர்கள். டாக்டர் ஸ்ரீகாந்த் மனிகாந்தி புதிதாக பிறக்கும் குழந்தைகள் சார்ந்த பிரிவின் தலைமை டாக்டர். போர்டீஸ் லா பீமீயூன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்களில் ஒருவர்.

ஆரம்ப காலத்திலிருந்து சமீப காலம் வரை இவர்கள் 50,000 மில்லிலிட்டர் தாய்ப்பாலை சேகரித்து பதப்படுத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். இவற்றில் 34,450 மில்லிலிட்டர் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. இது 17 குழந்தைகளை காப்பாற்றி சகஜமாக வாழ வைத்துள்ளது. இந்த 50 லிட்டர் பாலை 20 தாய்மார்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். டெல்லியிலும் தாய்ப்பால் வங்கி உண்டு. சரி, இவர்கள் இந்த பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை யார் யாருக்கு தருகிறார்கள்?

சில குழந்தைகளுக்கு பசும்பால் ஒத்துக் கொள்வதில்லை. அந்த குழந்தைகளுக்கு தருகின்றனர். 32 வாரங்களுக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு அவை எடை 1.5 கிலோவுக்கு குறைவாக இருக்குமானால் கொடுக்கிறார்கள். சில குழந்தைகள் 26, 28, 30 வாரங்களிலேயே பிறந்து விடும். தாய்ப்பால் போதாத நிலையில் வழங்கப்படுகிறது. 17 குழந்தைகள் இந்த பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை குடித்து தேறின அல்லவா! அவற்றில் இரண்டு ஜோடியினருக்கு தலா 3 குழந்தைகள் பிறந்து, தாய்ப்பால் கொடுக்க இயலாத சூழல் எழுந்தபோது, இந்த தாய்ப்பால் வழங்கப்பட்டது.

ஸ்வேதா மற்றும் அன்னப்பா காமத் ஆகிய இருவருமே ஆராய்ச்சி டாக்டர்கள்.இந்த ஜோடிக்கு ஒரே பிரசவத்தில் வேதா, மந்த்ரா மற்றும் ஸ்லோக் என்ற மூன்று குழந்தைகள் பிறந்த போது  அவை தலா 1½ கிலோ எடை இருந்தன. இந்த மூன்று குழந்தைகளுக்கும் முதல் இரண்டு நாள் தாய்ப்பால் கொடுத்த ஸ்வேதாவால், மூன்றாவது நாளிலிருந்து தருவது கஷ்டமானது. இந்த மூன்று குழந்தைகளுக்கும் தினமும் தலா 250 மி.லி பால் தர வேண்டும். அது இயலாத நிலை எழுந்த போது, மருத்துவமனையின் உதவியை நாடினர். மருத்துவமனை, ‘அமாரா’வை கை காட்டியது.

முதலில் வாங்க தயங்கினாலும், பிறகு வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் குழந்தைகள் தேறின. இப்படி மொத்த தேவையில் ஒரு பகுதியை வாங்கி ஒரு மாதம் தந்த போது மூன்று குழந்தைகளும் நார்மல் குழந்தைகளாகி விட்டன என்கிறார் காமத். இதே போல் சையத் அஜீஸ் அலாமன் மற்றும் அவருடைய மனை விக்கும் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெங்களூர், இந்திராகாந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த்தில் பிறந்த போது, அவர்கள் அடுத்த 15 நாட்களுக்கு ‘அமாரா’வின் உதவியை நாடி பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை வாங்கிக் கொடுத்து அவற்றை நார்மல்
குழந்தைகளாக மாற்றினர்.

சமீபத்தில் 26 வாரத்தில் பிறந்த ஒரு புதுக் குழந்தைக்கு கூடுதலாக குடலில் 3 தொற்றுகள் ஏற்பட்ட போது உடனே அதற்கு தாய்ப்பால் வழங்கப்பட்டு பிழைத்தது. அமாரா ‘வாடகை தாய்மார்கள்’, தாய்ப்பால் கேட்டால் தருவதில்லை. தற்போது சிறப்பாக வளர்ந்து வரும் இந்த தாய்ப்பால் வங்கிக்கு தேவை கேட்டு தினசரி 3-4 போன்களாவது வருகின்றன.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்