SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுருள்முடி தொல்லை! ஹேர் ஸ்டைலிங் டிப்ஸ்

2018-03-09@ 15:37:34

சிறு வயதிலிருந்தே எனக்கு சுருள்முடி. தலை வாறும்போது ஒவ்வொரு முறையும் சிக்கலால் அவதிப்படுவேன். தலைமுடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்ளலாம் என்று ஆசை. அவ்வாறு செய்வதால் வேறு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? ஸ்ட்ரெய்ட்னிங் செய்வதால் இருந்தால் கலரிங் செய்யவேண்டும் என்று தோழி ஒருவர் சொல்கிறார். அது தேவையா? நான் கொஞ்சம் மாநிறம்தான். கலரிங் செய்வதாக இருந்தால் என்ன நிறத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

“இந்த காலத்தில் பேஷன் என்பது உடைகளில் மட்டும் இல்லை. தலைமுடியும் இந்த காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அதனாலேயே சிகை அலங்கார நிபுணர்களும், உலக ஃபேஷன் டிரண்டுக்கு ஏற்ப சிகை அங்காரத்தில் தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்கிறார் சிகை அலங்கார நிபுணரான நஜீப்.“வெளிநாடுகளில் இருக்கிற ஹேர் ஸ்டைல் ரொம்ப சுலபமானது. அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்வது மிகவும் எளிது. அவர்களின் சருமம் மற்றும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு வித்தியாசமான நிறங்களில் கலரிங் செய்வது பார்க்க நன்றாக இருக்கும்.

ஆனால் -நம்மைப் பொறுத்தவரை அதை சரியாக அமைக்கிறது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. ஒவ்வொருத்தரோட சருமம், முக அமைப்பு பிளஸ் கூந்தலின் நிலையை பொறுத்து தான் அமைக்க வேண்டும். நம்முடைய முடி அலை அலையா இருக்கும். முடியில் அதிகமான வளைவு இருக்கும். அதனாலேயே பார்க்க அடர்த்தியாக இருக்கும்.இதுவே வெளிநாட்டு பெண்களுக்கு கருப்பர்களை தவிர பார்த–்தீங்கன்னா வளைவு நெளிவு இருக்காது. நீளமாகவும் நேராகவும் இருக்கும். முடியின் நிறமும் செம்பட்டையா இருக்கும். நம்மூர் பெரும்பாலன பெண்களுக்கு கருமை அல்லது பிரவுன் நிறத்தில் தான் முடி இருக்கும்.முடி வளைவா இருந்தால் அதை

ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்வது இந்த காலத்து ஃபேஷனாக உள்ளது. இதன் மூலம் முடிகளில் உள்ள வளைவுகளை நேராக்கலாம். அதன் பிறகு கலரிங் செய்யலாம். பார்க்க அழகாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் போல் எல்லா நிறத்திலும் கலரிங் செய்ய முடியாது. நம்ம சரும நிறம் மற்றும் முக அமைப்புக்கு ஏற்ப தான் கலரிங் செய்ய வேண்டும். பிரவுன், பிரவுன் சார்ந்த நிறங்கள், சிவப்புலேயே அடர்ந்த நிறம், தேன் போன்ற நிறங்களில் கலரிங் செய்தால் பார்க்க அழகாக இருக்கும். சருமத்திற்கு ஏற்ப மட்டும் இல்லை முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்வது அவசியம். வட்ட வடிவ முகத்துக்கு சுருள் சுருளான முடிகள் பார்க்க அழகாக இருக்கும். சதுர முகத்திற்கு காது பக்கம் முடிகள் விழுறா மாதிரி இருக்க வேண்டும். இதய வடிவ முகத்துக்கு தோள்பட்டை வரை முடி இருக்கலாம். மொத்தத்தில் கலரிங் செய்யும் போது ஒருவருடைய சரும நிறம், முடியின் அமைப்பு மற்றும் நிறம் பார்த்து கலரிங் செய்ய வேண்டும்.

ஸ்ட்ரெய்ட்னிங் மற்றும் கலரிங் செய்யும் போது அனுபவம் உள்ள நிபுணர்களிடம் செய்வது நல்லது. அதேபோல் நல்ல தரமான பிரபலமான அழகு நிலையத்தில் சென்று செய்து கொள்ள வேண்டும். சிலருக்கு ஸ்ட்ரெய்ட்னிங் செய்வதால் முடி கொட்டும் வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப முடியினை பராமரிக்க வேண்டும். ஸ்ட்ரெய்ட்னிங் மற்றும் கலரிங் செய்யும் போது அதற்கான சிறப்பு பராமரிப்பு அவசியம். அதை நிபுணர்களின் ஆலோசனைப் படிபின்பற்ற வேண்டும். இல்லை என்றால் முடி வலுவிழந்து காணப்படும்.

கலரிங் செய்த பிறகு 72 மணி நேரம் வரை தலைக்கு ஷாம்பூ போடக்கூடாது. அப்போது தான் நிறம் முடியில் தங்கும். சல்பேட் அல்லாத ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். இது எல்லா ஷாம்பூக்களிலும் இருக்கும். இது ஷாம்புவில் நுரையை ஏற்படுத்தும். இந்த ரசாயணம் உள்ள ஷாம்பூவை பயன்
படுத்தினால் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணைப் பசை மற்றும் ஈரத்தன்மையை அகற்றுவதால், கலரிங் முடியில் தங்காது.
அதேபோல் கலரிங் செய்து இருக்கும் போது சூடான தண்ணீரில் குளிக்க கூடாது. மிதமான சூடு இருந்தால் போதும். வாரத்தில் இரண்டு முறைக்கு மேல் தலைக் குளிக்க கூடாது. எப்போதும் தலைக் குளித்த பிறகு கண்டிஷ்னர் பயன்படுத்துவதை அவசியமாக கொள்ள வேண்டும். அவ்வப்போது தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையை மசாஜ் செய்வது நல்லது.

இது முடியை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். வாரம் ஒரு முறை அவாக்காடோ பழம், முட்டை மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெய்யை கலந்து முடியில் தடவி காய்ந்ததும் ஷாம்பூ போட்டு குளிக்கலாம்.கலரிங் செய்த பிறகு அதில் ஆல்கஹால் அடங்கிய அழகு சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. ஹேர் டிரையர் கொண்டும் முடியை காயவைக்கூடாது. இதன் மூலம் கலரிங் நிறம் மங்கி போகும் வாய்ப்புள்ளது. அதேபோல் மருத்துவ குணம் கொண்ட ஷாம்பூக்களையும் (பொடுகு சம்மந்தப்பட்ட ஷாம்பூக்கள்) பயன்படுத்தக்கூடாது. வெளியே செல்லும் போது நேரடியாக வெயிலில் முடி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் முடியினை துப்பட்டாவால் கட்டிக் கொள்ளலாம்” என்றும் டிப்ஸ்களை வாரி வழங்கினார் நஜீப்.

தொகுப்பு : ப்ரியா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்