SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளிர்காலத்தை சமாளிக்க...

2018-02-28@ 15:03:53

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி


மழை மற்றும் குளிர்காலத்துடன் இணைந்து வருவது சளி. சளியை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக சில முயற்சிகளை செய்து அதனை விரட்டி விடலாம். பொதுவாக குளிர்காலம் நமது ஆரோக்கியத்துக்கு கேடு. அதுவும் உடம்பில் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கு ரொம்பவே கேடு. இருப்பது போதாதென்று, எதிர்ப்பு சக்தி குறைவால் தொற்று வியாதிகளை கூடுதலாகக் கொண்டுவந்து சேர்க்கும்.

ஆக... நாம் நமது உடலை குளிர்காலத்தில் சளி மற்றும் புதிய தொற்று வியாதிகள் தொல்லை இல்லாமல் இருக்க, எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பாட்டி வைத்தியம் எனக்கூறுவதுபோல் உலகம் முழுவதும், வைத்தியங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தி சளி மற்றும் கூடுதல் வியாதிகளிலிருந்து தப்புவோம்.

1) ஹாட் டூடுல்ஸ்: இது உலகம் முழுவதும் 1700-ம் ஆண்டுகளிலிருந்தே புழக்கத்தில் உள்ளது. பிராந்தி, தேன் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து சூடுபடுத்தி கலக்கி, குடிப்பதுதான் ஹாட் டூடுல்ஸ்.  பிராந்தி தூக்கத்தை தரும். தேன் தொண்டையை ஆசுவாசப்படுத்தும். எலுமிச்சம்பழம் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘சி’-யைத் தருகிறது. அத்துடன் எலுமிச்சைச் சாறு மூக்கின் மூச்சுக்குழாய்களில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். பிராந்தி பயன்படுத்தாமல், எலுமிச்சைச் சாறு, தேன் கலவையை சூடாக்கி அதனை சாப்பிட்டும் சளியை குறைக்கலாம்.

2) சூப்: இறைச்சி வெந்த சாற்றை, நறுமணமூட்டி சாப்பிட்டால் சளிக்கு ரொம்ப நல்லது. இது கிரேக்கர்களின் பாட்டி வைத்தியம். இறைச்சி சார்ந்த எலும்பினுள் உள்ள எசன்ஸ் அல்லது வீட்டுப்பறவைகளான கோழி, வாத்து ஆகியவற்றின் எலும்பின் உள்ளே உள்ள எசன்ஸ் ஆகியவற்றை கொதிக்க வைத்து அந்த ரசத்தையும் சாப்பிடலாம். இவற்றினுள் உள்ள எசன்ஸில் வைட்டமின் மற்றும் கனிமப் பொருட்கள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

இதில் உள்ள கெலட்டின் மற்றும் கொலிஜென் உடலுக்கு ஊட்டச்சத்தை தரும். இவற்றுடன் மஞ்சள் தூள், லவங்கப்பட்டை சேர்த்து மேலும் மெருகேற்றலாம். கூடுதலாக இஞ்சியும் சேர்த்தால் நல்லது. நெல்லிக்காயில் ஜூஸ் எடுத்து தண்ணீர் கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் வைட்டமின் ‘சி’ கூடும். மற்ற பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மற்றும் ஸ்டிரா பெர்ரியையும் உடலுக்கு ஒத்துக்கொண்டால் சாப்பிடலாம்.

3) பூண்டு பிளவுகள்: குளிர்காலத்தில் பூண்டு நமது உடலுக்கு மிகவும் நல்லது. பூண்டு மற்றும் வெங்காயத்தை தொண்டையில் அடக்கிக்கொண்டால் சளிக்கு நல்லது என ஒரு பாட்டி வைத்தியம் உண்டு. இந்த சிரமத்தை தவிர்க்க சாப்பாட்டில் பூண்டை சேர்ப்பது நல்லது. பூண்டு தொத்து வியாதிகளை, ஃப்ளு உட்பட அண்ட விடாது. பூண்டு, மஞ்சள், லவங்கப்பட்டை, எலுமிச்சைச்சாறு, தேன் ஆகியவற்றை தினமும் சமையலில் இணைத்து சாப்பிட்டாலே போதும். உடலில் எளிதாக எதிர்ப்பு சக்தி கூடிவிடும்.

4) புதிய காற்றை சுவாசியுங்கள்: முன்பெல்லாம், வியாதியஸ்தர்களை, ஒரு மணி நேரம் வெளியில் அழைத்துச்செல்வார்கள். உடலில் வைட்டமின் `D’ படத்தான் இந்த ஏற்பாடு. இதற்கு வியாதியை விரட்டி, உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டும் திறன் உண்டு. தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது வெயில் நம்மீது படவேண்டும். அதுவும் இயலாதவர்கள் வைட்டமின் D மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனையை பெற்று சாப்பிட வேண்டும். இதன்மூலம் மனஅழுத்தம் குறையும். எலும்பு, இணைப்புகள் மற்றும் இருதய ஆரோக்கியம் கூடும்.

5) தடுப்புகள்: பல சமயங்களில் சளியை வரவழைக்க நாமே காரணமாய் இருக்கிறோம் என்பதை உணருவதில்லை. உதாரணமாக வெளியே குளிர் தெரிந்தால், வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். ரொம்ப அவசியமானால் மட்டுமே குளித்தால் போதும். சிறு சளி இருந்தாலும், ஒருநாள் குளிக்காமல் இருந்தாலே சளியை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். குளிர்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை, கூட இருப்பவர்களுக்காக சாப்பிடாமல், நாசுக்காக ஒதுக்கி விடுவதின் மூலமும், சளி வராமல் தப்பலாம்.

6) உடற்பயிற்சி: அந்தக் கால தாய்மார்கள், சமையலறைகளில் அடுப்பு சூட்டில் வேலை செய்வார்கள். இந்த சூடு... தொற்று வியாதிகளை விரட்டும் திறன் கொண்டது. கிராமங்களில் பெரும்பாலான பெண்கள் வயலில் வேலை செய்வர். இதன்மூலம் இயற்கைக் காற்று, வைட்டமின்-D உடற்பயிற்சியுடன் கூடுதலாக கிடைத்துவிடும். உடல் பாதித்தாலும், இவை கொடுத்த தெம்பில் சீக்கிரம் எழுந்து பழையபடி வேலை செய்ய ஆரம்பித்து
விடுவார்கள்.

7) இவற்றை கடைபிடிக்கவும்: வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதின் மூலம் சளியையும், தொற்றத் துடிக்கும்  வியாதிகளையும் விரட்டி விடமுடியும். தண்ணீருக்கு நமது உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் திறன் உண்டு. ஆக வெதுவெது வெந்நீரை குடிப்பதின் மூலமே சளியை விரட்டிவிட முடியும்!

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்