SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீரியட்ஸ் இனி ஈஸி !

2018-02-14@ 14:18:44

நன்றி குங்குமம் டாக்டர்

வாழ்க்கையின் கொடுமையான நாட்கள் எவை எனப்பெண்களிடம் கேட்டுப் பாருங்கள். மாதத்தின் அந்த 3 நாட்களைக் குறிப்பிடுவார்கள் பலரும்.

இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி, மனத்தளவிலும் உடலளவிலும் தளரச் செய்து, எதிலும் விருப்பமின்றி, எரிச்சலைக் கூட்டும் அந்த நாட்களின் அவதிகள் சொல்லி மாளாதவை. எனக்கு மட்டும்தான் இப்படியா என்கிற கேள்வி உள்ள பெண்களுக்குக் குழப்பங்கள் நீக்கும்  வழிகளைச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.

பிஎம்எஸ் எனப்படுகிற Premenstrual Syndrome வயது வித்தியாசம் இல்லாமல் அனேகப் பெண்களுக்கும் இருக்கிறது. மாதவிடாய்க்கு முன்பான சில நாட்களிலேயே உடலளவில் அசௌகரியங்களை உணர்வார்கள். அதைவிடக் கொடுமையாக மனத்தளவில் மாற்றங்களை உணர்வார்கள். தொடர்ந்து ஒவ்வொரு மாதவிலக்குக்கு முன்பும் இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் அவர்கள் பிஎம்எஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.

முதல் கட்டமாக அந்த அறிகுறிகள் ஆரம்பிக்கும்போதே உடற்பயிற்சிகள் செய்வது, உணவில் உப்பின் அளவைக் குறைப்பது, கஃபைன் அதிகமுள்ள காபி மற்றும் கோலா பானங்களைத் தவிர்ப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். ஒருவேளை இவற்றை எல்லாம் செய்தும் நிலைமை மாறவில்லை என்றால் மருத்துவரிடம் ஆலோசனைகள் பெறலாம்.

‘போன மாசம் இவ்வளவு ரத்தப் போக்கு இல்லையே... இந்த மாசம் மட்டும் ஏன்?’ என்கிற குழப்பங்களைத் தவிருங்கள். மாதவிலக்கின் அளவானது மாதா மாதம் வேறுபடலாம். சில முறை அதிகமாகவும் சில முறை குறைவாகவும் ரத்தப்போக்கு இருப்பது பிரச்னைக்குரியதில்லை. ஆனால், வெளியேறும் ரத்தமானது கட்டிகளாக இருந்தால் மட்டும் மருத்துவ ஆலோசனை அவசியம்.

திடீரென ஒரு மாதம் மாதவிலக்கே வராமல் போனாலும் பயப்படத் தேவையில்லை. நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்பில்லை என உறுதியாக நம்பினால் அது குறித்த கவலையைத் தவிருங்கள். பூப்பெய்திய புதிதில் சில மாதங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது இயல்புதான். அவர்களுக்கு அந்த சுழற்சி ஒரு வருடத்துக்குப் பிறகுதான் சரியாகும்.

மற்ற பெண்களுக்கு அதிக உடற்பயிற்சி, அதீத மன அழுத்தம், உடல்நலமின்மை போன்ற காரணங்களால் திடீரென மாதவிலக்கு வராமல் போகலாம். அதேபோல திடீரென அளவுக்கதிகமாக எடை கூடினாலோ, குறைந்தாலோகூட மாதவிலக்கு சுழற்சி மாறுபடும்.
மாதவிலக்கின் போதான ரத்தப் போக்கு சராசரியானதா அல்லது அதிக அளவிலானதா என்பது பற்றிய குழப்பமும் பல பெண்களுக்கு உண்டு.

ஒருநாளைக்கு பத்துக்கும் மேலான நாப்கின்கள் உபயோகித்தாலோ அல்லது ஒருமணி நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அது ஆபத்தானது என அறியலாம்.3 முதல் 5 நாட்கள் வரை மாதவிலக்கு நீடிப்பது இயல்பானது.

சிலருக்கு 2 நாட்களிலும் நின்றுபோகலாம். வேறு சிலருக்கு 7 நாட்கள் வரை தொடரலாம். 2 நாட்
களில் நின்றாலோ, 7 நாட்கள் வரை இருந்தாலோ கவலை வேண்டாம். 7 நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்தால் மட்டும் மருத்துவரைப் பார்க்கலாம்.

மாதவிலக்கு நாட்களில் உறவு

கொள்வதால் கர்ப்பம் தரிக்காது என நினைக்க வேண்டாம். அரிதாக சிலருக்கு ரத்தப்போக்கு இருக்கும்போதுகூட கர்ப்பம் தரிக்கலாம். எனவே, கண்மூடித்தனமான விஷயங்களை நம்பி சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். தவிர அந்த நாட்களில் உறவு கொள்வது ஆரோக்கியக் கேடு என்பதையும் மறக்க வேண்டாம்.

உயிரே போகும் அளவுக்கு ஏற்படுகிற வயிறு, இடுப்பு மற்றும் உடல்வலிகள்தான் பலருக்கும் வேதனையே. இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ஓரளவு பலன் தரும். தாங்க முடியாத வலி என்றால் மருத்துவரைக் கலந்தாலோசித்து வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்ளலாம்.  வலியுள்ள இடங்களில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதும் இதமளிக்கும்.

அந்த நாட்களில் மட்டும் மனநிலை மோசமாவதேன் என்று சிலர் நினைக்கலாம். உடலில் நீர்ச்சத்து சேர்ந்து உடலே வீங்கினது போல மாறும். அது ஒருவித அசவுகரியத்தைத் தரும். உப்பு சேர்த்த உணவுகளைக் குறைப்பதும் ஓரளவு உதவும்.

எல்லாவற்றையும் தாண்டி ஹார்மோன்களின் மாற்றங்களும் மனநிலையைப் பெரிதும் பாதிப்பதுதான் காரணம். ஐஸ்கிரீம், சாக்லெட், சிப்ஸ் போன்ற உணவுகளின் மீதான தேடல் சிலருக்கு அதிகரிக்கும். இனிப்பாக எதையாவது சாப்பிடத் தோன்றும். இனிப்புக்குப் பதில் பழங்களையும் சாக்லெட், ஐஸ்கிரீமுக்குப் பதில் நட்ஸ் போன்ற நல்ல கொழுப்புள்ள உணவுகளையும் சாப்பிடலாம்.

- ராஜி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi_bahvan_bang

  வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

 • proteststerliteissue

  சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

 • LibyaCarbombAttack

  லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 • Libyacarbomb7

  லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

 • 26-05-2018

  26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்