SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனிக்காலத்துக்கான ஹாட் டிப்ஸ்...

2018-02-06@ 15:20:41

நன்றி குங்குமம் தோழி

பனிக்காற்று உடலில் உள்ள ஈரத்தை உறிஞ்சி உலரவிடும் காலம் இது. கேசத்தில் தொடங்கி இதழ்கள், விரல் நகங்கள் என எல்லா இடத்தையும் வறட்சி தொற்றிக் கொள்ளும். உடலில் இருந்து தானாக வெளிப்படும் எண்ணெய்ப்பசை, ஈரப்பதம் குறைந்து பனிக்கால வறட்சி ஏற்படுகின்றது. ஈரப்பதம் மற்றும் எண்ணெய்ப் பசையை தரும் சுரப்பிகள் குளிர்காலத்தில் மந்தமாகி விடுவதே இந்த வறட்சிக்கு காரணம் என்கின்றனர் சரும நிபுணர்கள். பனிக்காலத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆலோசனை அளிக்கிறார் அழகுக்கலை நிபுணர் மேகா.

‘‘பனிக்காலத்தில் உடலில் ஈரப் பதத்தைப் பாதுகாக்க நீங்கள் சாப் பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதே போல உடல் வெப்பத்தை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சிகள் அவசியம். குளிர் காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்பதற்காக குறைந்தளவு தண்ணீர் மட்டும் குடிப்பது தோல் வறட்சியை அதிகரிக்கச் செய்யும். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். தேங்காய், வாழைப்பழம், பட்டர் ஃபுரூட் ஆகியவை உடலுக்கு அதிகளவில் ஈரப்பதத்தை அளிக்கிறது. இவற்றை ஃபிரஷ்ஷாக சாப்பிடலாம். இளநீர், மோர் ஆகியவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தலையின் தோல் பகுதியில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

வாரம் இரண்டு முறை தலைக்கு குளிப்பது அவசியம்.  பொடுகுத் தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.  பாதங்களில் இறந்த செல்களை அகற்ற ஸ்கிரப் உபயோகிக்கலாம். பனிக்காலத்தில் உடல் சூட்டைப் பாதுகாக்க சூடாகவே உண்ண வேண்டும். சரும வறட்சியைப் போக்க குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்யலாம். கடுகு எண்ணெய், நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம். கேசம் மற்றும் தோல் பகுதியில் இருக்கும் ஈரத்தன்மை போக்கும் சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாட்டைக் குறைத்து கடலை மாவு, பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம். வாரம் இரண்டு முறை தலைக்குக் குளிக்கும் போது அது எண்ணெய்க்குளியலாக இருப்பது நல்லது.

உதடுகளை பாதுகாக்க தூங்கும் முன் வெண்ணெய் அல்லது பாலாடைக் கட்டி தடவலாம். பகல் நேரங்களில் உதடுகளுக்கான கிரீம் பயன்படுத்தலாம். பனிக்கால பாத வெடிப்பைத் தடுக்க பாதங்களில் எலுமிச்சை தேய்த்து சுத்தம் செய்யலாம். குளிக்கும் முன்பாக எலுமிச்சையை பாதங்களில் தேய்த்து சில நிமிடங்கள் ஊற விட்டுக் குளிப்பது வெடிப்பைக் கட்டுப்படுத்தும். வெளியில் செல்லும்போது கைகள் மற்றும் கால் பகுதிகளில் மாய்ஸ்சரைசர் கிரீம் தடவிக் கொள்ளலாம். இரவில் பாதங்களை சுத்தம் செய்து மாய்ஸ்சரைசர் தடவி சாக்ஸ் போட்டுக் கொண்டு தூங்கலாம். பனிக்காலத்தில் இரவில் குளிர், பகலில் வெயில் என சருமத்தை வாட்டி வதைக்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினருக்கு தோல் வறட்சி உண்டாகும். மேலும் வெயிலில் அதிகம் பயணிப்பவர்களின் சருமம் நிறம் மாறும். வறண்ட சருமம் உள்ளவர்கள் வாழைப்பழம், பட்டர் ஃபுரூட் ஆகியவற்றை பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடலாம். எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் புதினா, தக்காளி ஆகியவற்றை பயன்டுத்தி ஃபேஸ் பேக்காகப் போடலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் இழந்த ஈரத்தன்மையை மீட்டுத் தரும். இயற்கையான நிறத்தை மீட்டுத்தரும். தோல் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். தினமும் தேங்காயை அப்படியே சாப்பிடலாம். அதிலிருந்து உடலுக்கு அதிகளவு மாய்ஸ்சரைசர் கிடைக்கிறது. அவரவர் தோலின் தன்மைக்கு ஏற்ப இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பனிக்காலப் பிரச்னைகளில் இருந்து உடலையும், அழகையும் பாதுகாக்கலாம்’’ என்கிறார் மேகா.

- யாழ் ஸ்ரீதேவி 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்