SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரத்த அழுத்தம் சோதிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

2018-01-02@ 14:19:37

நன்றி குங்குமம் தோழி

எனது தோழி ஒருத்திக்கு அதிக ரத்த அழுத்த நோய் இருந்தது. இதற்கு டாக்டர் ஒரு மாத்திரையை காலை 10 மணிக்கு சாப்பிட கொடுத்ததுடன் தினமும்  காலையில் BP பார்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். தினமும்  கிளினிக்குக்குச் சென்று பார்ப்பது கஷ்டமாக இருந்ததால், தோழி ‘DBPM’-ஐ  வாங்கினார். Digital Blood Pressure Monitor என்பதுதான் ‘DBPM’. பிரபல  நிறுவன தயாரிப்பு இது. தினமும் அதனை வைத்து BP பார்த்து குறித்துக்  கொண்டார்.

அடுத்த முறை டாக்டரிடம் சென்று அவரை காட்டியபோது டாக்டர்,  ‘பரவாயில்லையே, நல்லா குறைஞ்சிருக்கே’ என மாத்திரையின் டோசேஜை குறைத்தார். தோழி அதனை தினமும் சாப்பிட்டதுடன் BP-யும் பார்த்து வந்தார். அடுத்த முறை  டாக்டர் தன்னுடைய BP கருவி மூலம் தோழியை சோதித்தார். அது அதிக BP காட்டியது. சந்தேகம் ஏற்பட்டு தோழியின் ‘DBPM’-ஐ எடுத்து வரச் சொன்னபோது  அது குறைவாக காட்டியது. அதிர்ந்து போன டாக்டர், பழைய மாத்திரையை மறுபடியும்  சாப்பிடச் சொன்னார்.

அத்துடன் மறக்காமல் கிளினிக் வந்து அடிக்கடி நிஜ BP-ஐ  செக்கப் செய்து கொள்ளவும் சொன்னார். இதய நோய், சர்க்கரை நோய்க்காரர்கள்,  சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பம் சார்ந்த ஹைபர் டென்ஷன் உள்ளவர்கள் வீட்டிலேயே ‘DBPM’-ஐ வைத்து BP-ஐ சோதித்து வருகிறார்கள். இது பற்றி அமெரிக்க பல்கலைக்கழக (அல்பர்டர்) பேராசிரியர் டாக்டர் பட்வால்,  வீடுகளில் பயன்படும் DBPM மீட்டர் ரீடிங்குகள் 70 சதவிகிதம் குறைத்துக் காட்டுவதாக கண்டுபிடித்தார்.

ஆக, தோழியரே... நீங்கள் ‘DBPM’ மூலம் உங்களை  வீட்டில் சோதித்துக் கொண்டாலும், அவ்வப்போது கிளினிக் சென்று நர்ஸ் அல்லது  டாக்டரிடம் ‘DBPM’ காட்டியது சரிதானா என BP கருவி மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.BP-ஐ அளக்கும் கருவிக்குப் பெயர்  Sphygmo-manometer (ஸ்பிக்மோ-மானா மீட்டர்) அல்லது சுருக்கமாக BP மீட்டர்  (ரத்த அழுத்த மீட்டர்) என்பதாகும். கிளினிக்குகள், டாக்டர்களின் BP மீட்டரை அடிக்கடி புதுப்பித்து சரி செய்து வைத்திருப்பர். ஆக, அதனை நம்பி சோதிக்கலாம்.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tokyo_olympic_2020

  டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

 • kandhan_savadi11

  கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

 • LosAngelesSuperMarketshot

  லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

 • boataccident_19dead

  பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

 • intel_beer_fes

  சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்