SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டவுட் கார்னர்

2017-12-21@ 15:31:03

நன்றி குங்குமம் தோழி

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தாகம் ஏற்படுவது ஏன்?
- எஸ்.லெட்சுமி,
திருநெல்வேலி.
பதிலளிக்கிறார் சர்க்கரை மற்றும் நாளமில்லா சுரப்பி மருத்துவர் ராம்குமார்...

“Pancreas என்கிற நாளமில்லா சுரப்பியிலிருந்து இன்சுலின் என்கிற ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. நமது உடலில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றும் பணியை இன்சுலின் மேற்கொள்கிறது. இது சரியாக உற்பத்தி ஆகாவிட்டாலோ அல்லது சரியாக வேலை செய்யாவிட்டாலோ ரத்தத்தில் உள்ள சர்க்கரை உறுப்புகளுக்கு செல்லாமல் ரத்தத்திலேயே தேங்கி விடும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இதனைத்தான் நாம் நீரிழிவு நோய் என்று கூறுகிறோம். இதில் இரண்டு வகைகள் உண்டு. இன்சுலின் சரியாக உற்பத்தி ஆகவில்லையென்றால் அதை முதல் வகை நீரிழிவு நோய் (Type 1 Diabetes) என்கிறோம். இன்சுலின் உற்பத்தியாகி அது சரியாக வேலை செய்யாவிட்டால் அது இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes)  என்கிறோம். நீரிழிவு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் தேங்கியிருக்கும் சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறும்.

இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை பாலி யூரியா என்கிறோம். அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்தும் குறைந்து போய் விடுகிறது. இதனால் நாக்கு வறண்டு, அதிக அளவில் தாகம் ஏற்படுகிறது. இதை Polydipsia என்கிறோம். சர்க்கரை வெளியேறுவதால் உடலுக்கு சக்தி பற்றாக்குறை ஏற்படுவதன் காரணமாக பசியும் அதிக அளவில் ஏற்படும். அதனை Polyphagia என்கிறோம்.’’

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்