SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹை ஹீல்ஸ் ஹையா... ஹையோவா...

2017-12-21@ 15:29:54

நன்றி குங்குமம் தோழி

‘யார் ஹை ஹீல்ஸை கண்டுபிடித்தார் என்று தெரியாது. ஆனால், பெண்கள் அனைவரும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்!’ மறைந்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோவின் வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பது பெண்களுக்கு மட்டுமே விளங்கும். அந்த அளவுக்கு ஃபேஷன், சினிமா, மாடலிங், ஏன் - வளர்ந்து வரும் நாகரிகப் பெண்ணுலகுக்கு ஹை ஹீல்ஸ் அவ்வளவு முக்கியம். ரைட். ஹை ஹீல் போட வேண்டும் என முடிவாகிவிட்டது. அதற்காக அதை அப்படியே அணிந்து நடக்க முடியாது. சில பாதுகாப்புகள் மற்றும் விதிமுறைகளுடன் அதை பயன்படுத்துவதே நல்லது.

ஓகே. ஹை ஹீல் எப்படி பயன்படுத்த வேண்டும்? டிப்ஸ் மற்றும் விதிமுறைகளை அடுக்குகிறார் பிரியா மணிகண்டன் (Fashion Show choreographer & Director). “வசதிதான் முக்கியம். எவ்வளவு உயரம் வேணும்கிறது உங்க விருப்பம். ஆனா, நம்ம கால் எப்படிப்பட்டது, நம்ம உடல் எப்படிப்பட்டதுனு அடிப்படையா தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம். நம்ம கால்களோட சரியான அளவை தெரிஞ்சிகிட்டு ஹை ஹீல் தேர்வு செய்யணும். சாதாரண செருப்புகளுக்கு இது மாதிரியான தேர்வு அவசியமில்ல. ஆனா, ஹை ஹீல் வேற. இது சின்னதாவும் இருக்கக் கூடாது, பெரிதாவும் இருக்கக் கூடாது.

இன்னொண்ணு, ஹை ஹீல் உடல் எடையைப் பொருத்தது. ஒல்லியான பெண்களுக்கு எந்தவித ரூல்ஸும் கிடையாது. அதுவே பருமனான பெண்கள்னா முடிந்தவரை பிளாட்ஃபார்ம் ஹீல்ஸ், அல்லது ஹீல் அடர்த்தியான செருப்புகளை பயன்படுத்துறதே நல்லது. ஃபேஷன் உலகத்துல பெரும்பாலும் கருப்பு அல்லது வெள்ளை நிற உடைகள்தான். முடிஞ்சவரைக்கும் செருப்பு கலரை சேஞ்ஜ் பண்ணி ஆக்ஸசரீஸை மேட்ச் செஞ்சா வித்தியாசம் காட்டலாம். செருப்பு என்ன கலர்ல அணியறோமோ அந்த கலர்ல குறைந்த பட்சம் ஹேண்ட்பேக் அல்லது பர்ஸ் இருக்கணும்.

சம்பந்தமே இல்லாம ஷூ கலர் மட்டும் தனியா போட்டுக்கிட்டா அது ஃபேஷன் விதிமுறை மீறல். ஸ்டில்டோஸ், பம்ப்ஸ், பிளாட்ஃபார்ம், கட் ஹீல்ஸ், ஓபன் டோ... இப்படி நிறைய ஹை ஹீல் வெரைட்டிஸ் உண்டு. எதை வேணும்னாலும் தேர்வு செய்துக்கலாம். ஆனா, நல்ல பிராண்ட்ல வாங்கணும். செலவு செஞ்சாதான் அழகும், பாதுகாப்பும் கொடுக்கும், கிடைக்கும்...’’ என்ற பிரியா மணிகண்டன், நடைக்கும்  ஹீல்ஸுக்கும் தொடர்பிருப்பதாக சொல்கிறார். “ஃபேஷன் ஷோக்களையே எடுத்துக்குங்க. சாதாரண ஃபிளாட் செருப்புபோட்டு நடக்கற அதே மாடல் ஹை ஹீல் போட்டதுமே ஒரு ஸ்டைலை காட்டுவாங்க.

அந்தளவுக்கு ஹை ஹீல்ஸுக்கும் நம்ம உடல் மொழிக்கும் தொடர்பிருக்கு. ஹை ஹீல்ஸ் போட்டதுமே தானா நம்ம உடல் நிமிர்ந்து நடக்கும். பெருமிதமான பார்வை, நான் யாருக்கும் குறைஞ்சவ இல்லைங்கற தோரணை வரும். நடைல ஒரு நேர்த்தி கிடைக்கும். நிச்சயம் வலி இருக்கும். அதைப் பொறுத்துக்கிட்டு ஒரு ஷார்ப் லுக் கொடுப்பாங்க...’’ என கண்சிமிட்டுகிறார் பிரியா. ஓகே. மருத்துவரீதியான டிப்ஸ் என்னென்ன? அள்ளிக்குங்க என கொட்டுகிறார் ஆர்த்தோ சர்ஜனான டாக்டர் ஆறுமுகம். “என்னைக் கேட்டா ஹை ஹீல்ஸே போடக் கூடாதுனுதான் சொல்வேன்.

ஆனாலும் ஃபேஷன் அதை ஏத்துக்காதே..! ஸோ, சில டிப்ஸ் மட்டும். ஹை ஹீல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கிற அல்லது நடக்கற நேரங்களை குறைங்க. ஹை ஹீல்ஸ் போடறதால பாதவலி, முதுகு எலும்போட வடிவத்துல மாற்றம், மூட்டுக்குப் பின்புறம் வீக்கம், வலி... எல்லாம் உண்டாகும். அதனால உடல் வாகு என்னவோ அதைப் புரிஞ்சிகிட்டு அதிகம் வலிக்காத அளவுக்கு பயன்படுத்தணும். ஒவ்வொருமுறை ஹீல்ஸை கழட்டின பிறகும் பாதத்தை அப்படியே விடாம கொஞ்சம் அசைச்சு, விரல்களை மடக்கி பயிற்சி கொடுங்க.

பாதத்துக்குனு ரோலர் பால் இருக்கு. அதைப் பயன்படுத்தி கால்களை உருட்டுங்க. கால் மூட்டுக்கு சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். முதுகை கொஞ்சம் பின்பக்கம் வளைச்சு, நிமிர்த்தி பயிற்சி எடுத்துக்கலாம். அதிக நேரம் ஹீல்ஸ் போட்டுக்கிற பெண்கள் வென்னீர்ல அடிக்கடி கால்களை வெச்சு ரிலாக்ஸ் செய்யறது நல்லது. இதெல்லாம் செய்தாலும் கூட எங்க அட்வைஸ் நோ ஹை ஹீல்ஸ்தான்!” திட்டவட்டமாகச் சொல்கிறார் டாக்டர் ஆறுமுகம்.

ஹிஸ்டரி

ஃபேஷன்களின் முன்னோடியான எகிப்தியர்கள்தான் ஹை ஹீல்ஸை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள்தான் கொஞ்சம் உயரமான, பின்புறம் சற்றே தூக்கிப் பிடித்த வகையான காலணிகளை முதன்முதலில் பயன்படுத்தியுள்ளனர். 1700களில் பேரரசர் 14ம் லூயி இந்த ஹீல் வைக்கப்பட்ட ஷூக்களை அதிகம் விரும்பி அணிந்திருக்கிறார்.

அவரைத் தவிர அந்நாட்டிலும் சரி வீட்டிலும் சரி யாருக்கும் ஹீல் செருப்புகள் அணிய அனுமதி இல்லையாம். அவரைக் காட்டிலும் யாரும் உயரமாக இருப்பதை மன்னர் விரும்பவில்லை. அவரைப் பின்பற்றி ஆண்கள் பலரும் கூட ஹீல்ஸ் அணிந்திருக்கிறார்கள். காலம் செல்லச் செல்லத்தான் இது பெண்களுக்கான ஃபேஷனாகமுழுவதுமாக மாறிவிட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்