SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது முதலுதவி...

2017-12-05@ 16:42:24

நன்றி குங்குமம் தோழி

நல்ல பாம்பு கடிக்கு...

வாழை மரத்தை அரிவாளால் அடியில் ஒரு வெட்டு, நுனியில் ஒரு வெட்டுப் போட்டு துண்டத்தை எடுத்து வாருங்கள். பட்டையாக உரித்து மண் சட்டியில் அல்லது பீங்கான் கோப்பையில் சாறு பிழியுங்கள். கால்படி சாற்றை கடிபட்டவருக்கு உடனே கொடுங்கள். உங்களுக்குச் செய்திவர நேரம் ஆகிவிட்டாலும், வாழைமரம் கொண்டுவர நேரம் ஆகிவிட்டாலும் கடிபட்டவரின் பல்  கிட்டி விடும். வாழைப்பட்டை சாறை குடிக்க முடியாது. ஆகவே குறடால் பல்லை விலக்கி மருந்தை விடாதீர்கள்.

இதைவிட அறியாமை வேறில்லை. பல்லை விலக்கினாலும் தொண்டையை விலக்க முடியாது. பாம்பு கடிபட்டவரின் பற்கள் கிட்டியிருந்தால் சில வாழைப்பட்டைகளை முதலில் உரித்து கீழே பாயாக விரித்து அதன்மேல் அவரை படுக்க வைத்துவிடுங்கள். பிறகு சாறு பிழியுங்கள். சாறு பிழியவும் அவர் வாய் திறக்கவும் நேரம் சரியாக இருக்கும். பிறகு சாறை குடிப்பார். எழுந்து நடக்கவும் முடியும். இந்த சஞ்சீவிச்சாறு நல்ல பாம்பு கடிக்கு 10க்கு 10ம், பிற பாம்பு கடிகளுக்கு 10க்கு 7ம் உயிர் கொடுத்து குணப்படுத்தி வந்திருக்கிறது.

விஷம் ஏறாமல் இருக்க...

பாம்பு, நட்டுவாக்கலி, தேள், சிலந்தி முதலிய எது கடித்தாலும் உடனே பெருமருந்து வேரை வாயில் அடக்கிக் கொள்ளுங்கள். இச்சிகிச்சையால் விஷம் ஏறாது. பிறகு விஷக்கடிக்கு சிகிச்சை செய்து
கொள்ளுங்கள்.

பாம்பு கடிக்கு: பெரியா நங்கை இலையை அரைத்து சிறு சுண்டைக்காய் அளவு சாப்பிட, உடனே குணம் தெரியும். அன்று முழுதும் உப்பில்லா பத்தியம் இருந்து தீரவேண்டும்.

நட்டுவாக்கலி கடிக்கு: நட்டுவாக்கலி கடித்துவிட்டால் பயப்பட வேண்டியதில்லை. உடனே ஒரு கொப்பரைத் தேங்காயை மென்று தின்னச் செய்யுங்கள். பல்லில்லா குழந்தைகளாகவோ, வயது முதிர்ந்த பெரியவர்களாகவோ இருந்தால், தேங்காய்ப்பாலைப் பிழிந்து குடிக்கச் செய்யுங்கள். நிமிடக் கணக்கில் குணம் தெரியும்.

தேள் கடிக்கு: நாயுருவி வேரைப் பச்சையாக மென்று, சாற்றை மட்டும் உட்கொள்ள, உடனே நெறி இறங்கும்.

நாய் கடிக்கு: கடிச்சா செடிப்பட்டையை நசுக்கி வைத்துக் கடித்த இடத்தில் கட்டினால் அதன் நச்சு நீங்கிவிடும்.

சிலந்தி கடிக்கு: ஆடாதொடை மூலிகையைப் பச்சை மஞ்சளுடனும் மிளகுடனும் அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட உடனே குணமாகும்.

குறிப்பு: இவையெல்லாம் முதலுதவிதான் என்பதை மறக்க வேண்டாம்.  மருத்துவமனை இல்லாத கிராமத்துப் பகுதிகளில் இந்த முதலுதவியை செய்துவிட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். இக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அருகில் இல்லையென்றால் அவற்றைத் தேடி நேரத்தை வீணடிக்காமல் மருத்துவமனையை நாடுவது மிகவும் அவசியம்.

- எஸ்.நிரஞ்சனி, முகலிவாக்கம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்