SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

40 வயசுக்கு மேலே அழகா தெரிவது எப்படி?

2017-11-27@ 14:07:21

இன்னும் ஆறு மாதங்களில் என்னுடைய வயது நாற்பதை எட்டி விடுகிறது. பெண்களைப் பொறுத்தவரை குழந்தை பிறந்தபிறகு, அவர்கள் அவ்வளவாக தங்கள் உடல் கட்டுக் கோப்பிலும், அழகுத் தோற்றத்திலும் போதிய கவனம் செலுத்துவதில்லை. நாற்பதுக்கு பிறகும் பொலிவாக தெரிவது எப்படி?
- சுமதி, நாவலூரஇது ஒரே ஒரு சுமதியின் பிரச்சினை மட்டுமல்ல. உலகெங்கும் வாழும் நடுத்தர வயதை எட்டிய ஒவ்வொரு பெண்ணின் அந்தரங்கமான மனக்கவலையும்கூட.

‘‘பொதுவா அழகா இருக்கணும்னு க்ரீம்களை தான் பயன்படுத்துவோம். சித்தா, ஆயுர்வேத அழகு நிலையங்கள் கூட க்ரீமை பரிந்துரைக்கறாங்க. ஆனா, முகப்பூச்சு இல்லாமயே கூட அழகாக முடியும்...’’ என்கிறார் நாராயணன், எக்ஸ்கோட் நிறுவனத்தின் தலைவர். இவர், அழகுக்கும் நம் மரபணுக்களுக்கும் கூட தொடர்பிருக்கிறது என்கிறார்.

‘‘இன்னைக்கு எல்லாருமே மோசமான சுற்றுப்புறச் சூழல்லதான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். வாகனங்கலேருந்து வெளியாகிற தூசு, புகை, குடிப்பழக்கம், மனஅழுத்தம்னு நம்ம சருமம் முதுமையான தோற்றத்தைத் தர நிறைய காரணிகள் இருக்கு. இது எல்லாத்தையும் விட முறையற்ற உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியின்மையும் தான் முதுமைக்கு வாசலை திறந்துவிடுது. எதுவெல்லாம் சாப்பிடக் கூடாதோ அதையெல்லாம் தான் விரும்பிச் சாப்பிடறோம். அதனாலதான் முகத்துல சுருக்கம் விழுது. நம்ம முகத்துல இருக்கிற தசைகள் எல்லாமே எலாஸ்டிக் தன்மை கொண்டதுதான். அதுல பாதிப்பு வர்றப்ப நிச்சயமா, சுருக்கம், கண்களுக்கு கீழ கருவளையம் உருவாகும். அதனாலதான் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும்னு பெரியவங்க சொல்றாங்க. இது மட்டும் தான் முக தசைகளை ஆரோக்கியமாவும், புத்துணர்ச்சியோடவும் வைச்சிருக்கும்.

இதுக்கு பதிலா மனஅழுத்தம், கோபம்னு இருந்தா முதுமையை நாமே வெத்தலை பாக்கு வைச்சு வரவேற்கிற மாதிரி ஆகும். இதெல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயங்கள்தான். இதுபோக இன்னொரு விஷயம் இருக்கு. அதுதான் மரபணுக்கள் கொண்டு நமக்கு ஏன் முதுமை ஏற்படுதுன்னு கண்டறியறது. இதன் மூலம் நிச்சயம் நாற்பது வயசுக்கு மேலயும் இளமையா இருக்கமுடியும். நம்ம எச்சில் வைத்தே மரபணுசோதனை செய்யலாம். அதன் மூலம் என்ன காரணத்துக்காக முதுமை ஏற்படுதுன்னு கண்டுபிடிக்கலாம். பிறகு உணவுப்பழக்கம் மற்றும் என்ன மாதிரியான உடற்பயிற்சி தேவைன்னு கண்டறியலாம். இந்த வழிமுறைகள் நபருக்கு நபர் மாறும். பெண்களை பொறுத்தவரை 25 வயசுக்கு மேல கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள்ள முதுமை தோன்ற ஆரம்பிக்கும். இது 40 வயசுக்கு மேல வெளிப்படையா தெரியும். ஆனா, இப்ப இருக்கிற லைஃப்ஸ்டைல்ல 30 வயசுக்கு மேலயே வெளிப்படையா சுருக்கங்கள் தெரிய ஆரம்பிச்சிடுது.

பொதுவா செல்கள் தினந்தோறும் இறக்குது, அதுக்குப் பதிலா புதிய செல்கள் பிறக்குதுன்னு நமக்குத் தெரியும். இந்த புதிய செல் உருவாகிறது எப்ப தாமதமாகுதோ அப்ப வெளிப்படையா முதுமை தெரியும்.  அழகு நிலையத்துக்கு போய் வெளிப்படையான மாற்றத்தை ஓரளவு மறைக்கலாம். ஆனா, உட்புறம் ஏற்படுகிற மாற்றத்துக்கு என்ன செய்யறது? உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும்தான் இதுக்கு தீர்வு.ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் - கொலாஜன். இந்த இரண்டுலயும் மாற்றம் ஏற்படறப்ப முதுமை தெரியும். நம்ம உடம்புல போதுமான அளவுக்கு ஃபிரீராடிகல்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் சுரக்கலைனா ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் ஏற்படும். ஃபிரீராடிகல்ஸ் அதிகமாக சுரந்தா அது ஆன்டி ஆக்சிடென்ட்சை பாதிக்கும். சருமத்துல ஏற்படற சுருக்கங்களை கொலாஜென், பாதுகாக்கும். இது ஒவ்வொரு நாளும் உடையும். புதுசு புதுசா உற்பத்தியாகும். இதுல மாற்றம் ஏற்பட்டா முகத்துல சுருக்கம், கண்களுக்கு கீழ கருவளையம் ஏற்படும். இதையெல்லாம் மரபணுசோதனைலதான் கண்டறியமுடியும்.

பொதுவா நம்ம சருமத்துக்கு புரதம், வைட்டமின், மினரல்கள் அவசியம். சராசரி அளவுல இதை நம்ம உணவுல சேர்த்துகிட்டா போதும். அதுபோக நிறைய தண்ணீர் குடிக்கணும். நம்ம உடம்புல 75% தண்ணீர் தான் இருக்கு. உடல்ல இருக்கிற நச்சுத்தன்மையை போக்கவும், சருமம் பளபளப்பா மின்னவும் தண்ணீர் அவசியம். மத்த பொருட்களை விட பால்ல கால்சியம் குறைவுதான். ஆனாலும் தினமும் பால் குடிக்க சொல்றோம். குறைந்த அளவுல கால்சியம் இருந்தாலும் அதை முழுமையா உடம்புக்கு சேர்க்கிறது பால்தான்.

வேகாத, பாதி வெந்த, முழுமையான  வெந்த உணவுகள்னு மூணு வகையா நம் சமையலை பிரிக்கலாம். இந்த மூணுமே நமக்கு அவசியம். சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்ச் பழங்கள்ல வைட்டமின் சி இருக்கு. இதையெல்லாம் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் பிழிஞ்சு, தேன் கலந்து குடிக்கலாம். பேரீச்சம் பழத்துலயும், தேன்லயும் இரும்புச்சத்து இருக்கு. இதை வைட்டமின் சி கொண்ட பழங்களோட சாப்பிட்டா, முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.

கார்போஹைட்ரேட்டை குறைச்சு, புரதசத்து அதிகமிருக்கிற உணவுகளை சாப்பிடலாம். முக்கியமா நேரம் தவறாம சாப்பிடணும். இதையெல்லாம் செய்தாலே நாம இளமையா இருக்கலாம்...’’ என்று சொல்லும் நாராயணன், சருமத்தின் வெளிப்புறங்களை பாதுகாப்பதும் அவசியம் என்கிறார்.
‘‘அதனாலதான் ஒவ்வொருத்தரோட சருமத்துக்கு ஏற்ற க்ரீமை பரிந்துரைக்கிறோம். இதுக்காகவே சென்னைல இருக்கிற எல்லா பியூட்டிபார்லரோடயும் இணைந்து செயல்படறோம். மரபணு சோதனைக்கு பிறகு, என்ன வகையான க்ரீம் தேவைனு ஆய்வு செய்வோம். அதேபோல உடற்பயிற்சியையும் பரிந்துரைக்கிறோம். தினமும் அரைமணி நேரமாவது எக்சர்சைஸ் செய்யணும். முகச்சருமத்துக்கும் சின்னச் சின்ன மசாஜ் செய்யலாம்...’’
படம் 1ல் குறிப்பிட்டிருப்பது போல் கண் ஓரங்களில் உள்ள தசைகளை மேலே இழுத்து பின்பு மெதுவாக விடவேண்டும். இதை தினமும் ஐந்து முறை செய்யலாம். இதனால் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையமும், சுருக்கமும் நீங்கும்.

படம் 2ல் இருப்பது போல நெற்றிப்பகுதியில் உள்ள தசைகளையும் சுறுக்கி விரிவாக்கும் போது அந்தப் பகுதியில் உள்ள சுருக்கம் மறையும்.
‘‘இதே மாதிரி முகத்தோட ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மசாஜ் இருக்கு. இதையும் தினமும் செய்யணும். அப்புறம் பாருங்க... எவ்வளவுவயசானாலும், அதை விட இருபது வயசு குறைச்சலாத்தான் தெரிவீங்க...’’ என்றார் நாராயணன்.
தொகுப்பு : ப்ரியா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2018

  22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்