SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டவுட் கார்னர்

2017-11-21@ 16:41:12

நன்றி குங்குமம் தோழி

எனது பணிச்சூழல் காரணமாக பெரும்பாலான நாட்களில் காலை உணவைத் தவிர்க்க நேரிடுகிறது. ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதால் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடுமா?
- சங்கீதா, சத்தியமங்கலம்.

பதிலளிக்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் எம்.ராதா...

இரைப்பையில் அமிலம் சுரக்கும் தன்மை அதிகாலை நேரத்தில் அதிகமாக இருக்கும். நாம் சாப்பிடும் உணவு அந்த அமிலத்தை நீர்த்துப் போகச் செய்து விடும். ஆனால் நாம் சாப்பிடவில்லை யென்றால் அந்த அமிலம் இரைப்பையின் சுவர்களில்பட்டு அரிக்க ஆரம்பித்து விடும். இதனால் இரைப்பையில் புண்கள் ஏற்பட்டு அது அல்சராக மாறி விடும். அல்சர் ஏற்பட்ட பின் நாம் உட்கொள்ளும் உணவு அந்தப் புண்களின் மீது படும்போதெல்லாம் வலியும் வாந்தியும் ஏற்படும். இதனால் தேவையான அளவு உணவை உட்கொள்ள முடியாது.

இதன் காரணமாக அல்சர் மேலும் அதிகமாகும். அதன் விளைவாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும். நாள்பட்ட அல்சர் உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சலும், உணவு விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். நீரிழிவு, இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கு ஆளானவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிடுவது மிக மிக முக்கியம். சரியான நேரத்தில் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும்போது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். நாம் உட் கொள்ளும் உணவு 4 முதல் 6 மணி நேரத்தில் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் சென்று விடும்.

அதன் பின்னர் இரைப்பை காலியாகி விடும். ஆகவேதான் நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சரியான நேரத்தில் சாப்பாடுதான் சாப்பிட வேண்டும் என்றில்லை பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சாப்பிடலாம். குறிப்பாக காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. ஏனென்றால் காலையில் சாப்பிடும் உணவு மூளைக்குத் தேவையான க்ளுகோஸைக் கொடுத்து அன்றைய நாளுக்கான சுறுசுறுப்பை அளிக்கிறது. என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்ல சரியான நேரத்தில் மூன்று வேளைகளும் சாப்பிட வேண்டும் என்பது மிக முக்கியம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்