SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதவிடாய் தாமதமாக சில காரணங்கள்..

2017-11-16@ 15:00:01

பெரும்பாலான பெண்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் மாதவிடாய் கோளாறு என்பது அதிகம் காணப்படுகிறது. பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது, ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

1 சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது செவிலியர்களிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ஓய்வு பெற செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

2 திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பது பற்றிய ஆலோசனை பெறலாம்.

3 பகல் நேர பணி, இரவு நேர பணி என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே நேரத்தில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் பணி நேரத்தை மாற்றுவது நல்லது.

4 தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது செவிலியரிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.

5 உணவுமுறை மாற்றத்தாலும் சில நேரங்களில் மாதவிடாய் கோளாறு, தள்ளி போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உணவில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை போன்றவையும், இதை ஏற்படுத்தும். எனவே முடிந்த வரை இவற்றை தவிர்ப்பது சிறந்தது.

எதனால் ஏற்பட்டாலும் மாதவிடாய் கோளாறு என்பது பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது. இதனால் குழந்தை பேரு தள்ளிப் போகும் அபாயமும் உள்ளது. இது உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்து, உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இவற்றிற்கு முடிந்தவற்றை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமான ஒன்றாகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்