SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டிலிருந்தே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகலாம்

2017-11-10@ 15:16:22

நன்றி குங்குமம் தோழி

- தோ.திருத்துவராஜ்


இந்திய ஆட்சிப் பணி என்று சொல்லப்படும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தங்களது நிர்வாகத் திறமையால் இன்று பல பெண்கள் சாதனைப் படைத்து வருகின்றனர். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அகாடமிகள் சென்னை போன்ற பெரு நகர்ப்புறங்களில்தான் இருக்கின்றன. அதனால் வசதிப் படைத்தவர்கள் இந்த கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால், ஐ.ஏ.எஸ். ஆக துடித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எளிதாக இணையம் மூலம் படிக்கும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் எவ்வாறு ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறுவது என விளக்குகிறார். ஆபீஸர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் இஸ்ரேல் ஜெபசிங்.

‘‘ஐ.ஏ.எஸ். எனப்படும் இந்திய நிர்வாக சேவைப்பணியில் இணைவதற்காக பொதுப்பணித்துறை (UPSC) பரீட்சையில் தேர்வாக வேண்டிய முனைப்போடு தயாராகும் மாணவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

இவ்வாறான மாணவர்களில் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதுவோரில், தற்போது ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்ச்சி விகிதத்திலும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது’’ என்றவர், பெண்கள் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறுவதற்கு சிறந்த இடமாக சென்னையை ஏன்  தேர்ந்தெடுக்கிறார்கள் எனக் கூறினார்.

“இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு வந்து ஐ.ஏ.எஸ். வகுப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றம். இவர்கள் சென்னையை தேர்ந்தெடுக்க என்ன காரணங்கள் எனப் பார்த்தால் சிறந்த பயிற்றுனர்கள், குறைந்த கட்டணம், அதேசமயம் தரமான பயிற்சி போன்றவைதான்.

அண்ணா நகரில் இயங்கிவரும் எங்களின் பயிற்சி பள்ளியில் நாகலாந்து, ஊட்டி, மத்திய பிரதேசம், பீகார், கேரளா என நாட்டின் பல பகுதி களிலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

டெல்லி போன்ற பெருநகரங்களில் பிரத்யேகமாக ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குறை நிறைகளை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சியளிப்பது சற்று சிரமமாகும். ஏனெனில், அங்கு ஒரு பயிற்சிப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒருநாளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

சென்னையை இவர்கள் நாடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆனால் பெண்களின் இலக்காக சென்னை  திகழ்வதற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது பெண்களின் பாதுகாப்பாகும். மாணவிகள் பாதுகாப்பு கருதியே சென்னையை தேர்ந்தெடுப்பதாக பெரும்பாலும் கூறுகின்றனர்.

மேலும், குறைந்த போக்குவரத்து செலவும், பெண்களுக்கு குறைவான கட்டணத்தில் சிறந்த தங்கும் இட வசதியும் இங்கு கிடைப்பதால், ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பும் பெண்களுக்கு சிறந்த இடமாக சென்னை காணப்படுகிறது.

ஒரு பக்கம் பெண்களும், பிற மாணவர்களும் நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து சென்னைக்கு வந்து பயின்றாலும், ஐ.ஏ.எஸ். ஆகவேண்டுமென்ற கனவு கொண்ட இன்னும் எத்தனையோ நபர்கள், சிறந்த பயிற்சியைப் பெற இவ்வாறு சென்னைக்கோ, பிற பெருநகரங்களுக்கோ சென்று படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

அவ்வாறான மாணவர்களுக்கான வசதியாக ஆன்-லைன் வகுப்புகள் உண்டு. சென்னைக்கு வந்து நேரடியாக வகுப்பில் சேர முடியாத மாணவர்கள், நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் வகுப்பு மிகவும் பயனுள்ளதாகும்.

வழக்கமான பயிற்சி வகுப்புகள் காணொளியாக பதிவேற்றம் செய்யப்பட்டு தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இணையவழி வகுப்புகளுக்கு வழக்கமான பயிற்சி வகுப்பைக் காட்டிலும் கட்டணம் குறைவாகும்.

கிராமப்புற மாணவர்கள், நேரடியாக வகுப்புகளுக்கு வர முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்தப் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆன்-லைன் வகுப்பில் சேர விரும்புவோர் www.officersiasacademy.com என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தகுதிச் சுற்று, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தயாராக வேண்டும். இந்தத் தேர்வில் அன்றாட நிகழ்வுகள் (Current Affairs)  குறித்த கேள்விகள் அதிகளவில் கேட்கப்படுகின்றன.

தேர்வுக்காக எதைப் படிக்க வேண்டும்; எதைப் படிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் முக்கியச் செய்திகள், நிகழ்வுகளுடன் கூடுதலான அல்லது முக்கியமற்ற நிகழ்வுகளையும் சேர்த்து படிக்கும்போது அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது கடினமான ஒன்றாகும்.

இதைக் கருத்தில் கொண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக www.steelframeofindia.org என்ற பிரத்யேக மற்றும் இலவச இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த இணையதளத்தில் நீதிமன்றங்களில் தினமும் வெளியாகும் முக்கிய தீர்ப்புகள், மத்திய-மாநில அரசுகளின் சலுகைகள் மற்றும் திட்டங்கள் உள்பட அனைத்துத் துறை சார்ந்த நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.

நன்கு தேர்வு செய்த தகவல்கள் மட்டுமே இதில் பதிவேற்றப்படுவதால் எதைப் படிக்க வேண்டும் எனக் குழப்பம் அடையத் தேவையில்லை. தகவல்கள் தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் வினாப் பட்டியலில் அதைப் பதிவிடலாம். இதைத் தொடர்ந்து, எந்தத் துறையில் சந்தேகமோ, அந்தத் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கேட்டறியலாம்” என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்