SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதவிதமா சேலை கட்டலாம்!

2017-11-07@ 15:52:31

நன்றி குங்குமம் தோழி


சேலை, இந்தியாவின் பாரம்பரியம் பேசும் பாந்தமான உடை. ஜீன்ஸ், டாப்ஸ் என அதிரிபுதிரியாக ட்ரெண்ட் காட்டும் இளம்பெண்கள் கூட வீட்டு விஷேங்கள், முக்கியமான பண்டிகைகள் என்றால் புடவையும் ரவிக்கையுமாக மாடர்ன் மகாலட்சுமியாகிவிடுவார்கள். அதுதான் சேலையின் மகிமை. ‘சேலையா... செம போர்ப்பா. எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரி மடிப்பு வைத்து சொருகிக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். அதில் கிரியேட்டிவிட்டியே இல்லை. எனக்கு செட் ஆகாது...’ என அலுத்துக் கொள்ளும் இளம்பெண்களும் இருக்கவே இருக்கிறார்கள்.

பொதுவாக, சேலை கட்டுவதில் நமக்கு வட இந்திய முறை, தென்னிந்திய முறை என இரண்டு வகை இருப்பதுதான் தெரியும். ஆனால், சேலையையும் விதவிதமாகக் கட்டி ட்ரெண்ட் காட்டிக் கலக்கலாம். இது குறித்து இரண்டு எக்ஸ்பர்ட்டுகளிடம் பேசினோம்.  “என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. ஏன் ‘துப்பாக்கி’ படத்தில் காஜல் அகர்வால் தன் தோழியின் திருமணத்துக்குக் கட்டி வருவாரே ஒரு பிங்க் நிற சேலை... அதுகூட ஒரு ஃபேஷன் ஸ்டைல்தான்!” என்று ஜாலியாக ஆரம்பித்தார் ஃபேஷன் டிசைனர் ரேகா ராகுல்.‘‘இன்னும் நிறைய ஸ்டைல் இருக்கிறது.

புடவையையே சோலி ஸ்டைல், கவுன் ஸ்டைல், விசிறி ஸ்டைல் என விதவிதமாகக் கட்டிக்கொள்ளலாம். இந்தக் கேள்விகள் இப்போது மணப்பெண்கள் முதல் பல இளம் பெண்களுக்கும் இருக்கும். இதோ இங்கே சில வெரைட்டிகள். மாடல் என்பதால் பிளவுஸ் கொஞ்சம் சாதாரணமாக இடுப்புப் பகுதி தெரியும்படி கட்டியிருக்கிறோம். நீங்கள் சோலி டாப் அல்லது க்ராப் டாப் பாணிகளில் ப்ளவுஸ் அணிந்துகொள்ளலாம். இதில், சிவப்பு நிற சேலை கட்டிய ஸ்டைல் விசிறி பாணியில் இருக்கும்.

இதில் முதல் ஒரு மீட்டர் துணியை உள்பக்கமாக விட்டுவிட்டு ரிபீட் ஸ்டைல் மடிப்பு வைத்து உள்பக்கம் செருக வேண்டும். கண்டாங்கி புடவைக்குப் பின்பக்கம் வைப்போமே அதே பாணிதான் இதில் முன்பக்கம். இந்த மாடலை முன்பு பரதம் ஆடும் கலைஞர்கள்தான் அதிகம் உடுத்துவார்கள். இப்போது எல்லா பெண்களுமே இதை விரும்புகிறார்கள். சேலைக்கு மேல் கோட் ஸ்டைல் ப்ளவுஸ் மற்றும் ப்ளவுஸை இணைக்கும் பெல்ட் ப்ளவுஸ்கள் என எவ்வளவோ வெரைட்டிகள் வந்துவிட்டன.

புடவையை எப்படி விதவிதமாக கட்ட ஆசைப்படுகிறோமோ அப்படித்தான் அதற்கு உரிய மேக்கப்பும் இருக்க வேண்டும்...” என ரேகா ராகுல் முடிக்க, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அர்ச்சனா மற்றும் ப்ரீத்தி தொடர்ந்தனர். “எந்த ஸ்டைலை நம் புடவை கட்டும்விதம் பிரதிபலிக்கிறதோ அதற்கு உரிய மேக்கப் போட்டுக்கொண்டால் நல்லது. உதராணத்துக்கு இதை கிரே - கிரீன் சேலை மற்றும் சிவப்பு ப்ளவுஸ் ‘கவுன் ஸ்டைல்’ சேலை ட்ரேப்பிங் என்போம். சேலையில் கவுன் போன்ற லுக் கொடுப்பது. பார்ட்டி கவுன்கள் அணிகையில் என்ன மேக்கப் போட்டுக் கொள்வோமோ அதே ஸ்டைல் மேக்கப் - அதாவது ஷார்ப் முகத் தோற்றம் இதற்கு எடுப்பாய் இருக்கும்.

முகத்துக்கும் க்ளோ எஃபெக்ட் கொடுத்துவிடுவோம். ஹேர் ஸ்டைலும் அப்படித்தான். கவுனுக்கு என்ன ஸ்டைல் தலையலங்காரம் கொடுப்போமோ அதே பாணியில்தான் இங்கே ஹை-அப்டோஸ் ஹேர் ஸ்டைல் கொடுக்க வேண்டும். சோலி ஸ்டைல் எனில் அதே பாணியில் லெஹெங்காவுக்கு என்ன மேக்கப் கொடுப்போமோ அப்படிச் செய்ய வேண்டும். நீங்கள் புடவை கட்டும்விதம் எந்த விதமான உடைகளைப் பிரதிபலிக்கிறதோ அதற்கு ஏற்ப மேக்கப் போட்டுக்கொண்டால் நீங்களும் இளவரசிதான்...” என்கிறார்கள். இனி சேலையிலும் வெரைட்டி காட்டி வெளுத்துக்கட்டுங்க கேர்ள்ஸ்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்