SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஷாப்பிங் ஸ்பெஷல்

2017-11-06@ 14:14:20

NAC ஜுவல்லர்ஸ்: தங்கம் வாங்கினால் அதன் எடைக்கு எடை நிகரான வெள்ளி இலவசம் என்னும் திட்டம் இந்த வருடமும் கலக்குகிறது. நம் ‘குங்குமம்’ இதழ் பரிசுப் போட்டியில் NAC வழங்கும் ஐம்பது பேருக்கான வெள்ளி விநாயகர் பரிசும் இந்த தீபாவளி அதிரடிகளில் ஒன்று. ரீவைண்ட் கலெக்‌ஷன்ஸ் எனப்படும் பழங்கால ஸ்டைல் ஆன்டிக் நகைகள் இந்தக் கால பெண்களால் அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன. ப்ரீஸ் கலெக்‌ஷன்ஸ் எனப்படும் லைட் வெயிட் ஜுவல்லரிகள் இளம்பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

முஸ்தபா கோல்ட் மார்ட்: 17ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் முஸ்தபா கோல்ட் மார்ட்டில், லேட்டஸ்ட் டிசைன் தங்கம், வெள்ளி ஆபரணங்களோடு ரோடியம் வளையல்கள்தான் இந்த வருட ஸ்பெஷல். ‘பாகுபலி’ போன்ற அரசர் காலப் படங்களின் வரவால் ரோடியம் வளையல்களை விரும்பி அணிவது அதிகரித்திருக்கிறது. பார்ப்பதற்குப் பளிச்சென ஜொலிக்கும். இது தவிர, டெம்பிள் கலெக்‌ஷன் நகைகள், தோடுகள் என நிறைய வெரைட்டிகளைக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள்.

வராஹா இன்ஸ்டன்ட் டீ: வராஹா கிரீன் டீ நமது ஆரோக்கியத்தின் நண்பன். இப்போது எலுமிச்சை, புதினா, இஞ்சி என பலவிதமான ஃப்ளேவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிக் குடிக்கும் ருசியில் அசத்துகின்றன. ஒபீசிட்டி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் எனப் பலவிதமான உயிர் பறிக்கும் நோய்களில் இருந்தும் விடுதலை பெற கிரீன் டீ ஒரு நல்ல தீர்வு. வராஹா அதற்கான சிறந்த தேர்வு.

CD ஜூவல்லரி: ஒவ்வொரு வருடமும் CD ஜுவல்லரியின் சிறப்பே தீபாவளி சேமிப்பு அன்பளிப்புகள்தான். தீபாவளியை முன்னிட்டு 1,000 ரூபாய்க்கு கணக்கு ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் கட்டி வர வருட முடிவில் உங்கள் கணக்கில் ரூ.12,000 சேமிக்கப்படும். இதனுடன், தீபாவளி சிறப்புப் பரிசாக நான்கு கிராம் தங்கக் காசு, வெள்ளிக் காசுகள், பட்டாசுகள், ஸ்வீட் பாக்ஸ் போன்ற கிஃப்ட் பாக்ஸ்களும் போனஸாகக் கிடைக்கின்றன.

SM சில்க்ஸ்: SM சில்க்ஸ் என்ற பெயர் சொன்னாலே, ஒரு பட்டுப் புடவை வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பது பலருக்கும் தெரியும். பல வகைகளிலான காட்டன் சேலைகள், ஃபேன்ஸி சேலைகள், கலம்காரி சேலைகள், ஃபேன்ஸி டிசைனர் சேலைகள் என சுமார் ஐந்து லட்சம் வெரைட்டிகளில் சேலைகளைக் குவித்துள்ளனர். காஞ்சிபுரம் ஸ்பெஷல் கைத்தறி சேலைகளும் களம் இறங்கியுள்ளன.

ஜிம்சன் வாட்ச்கள்: கொஞ்சம் ராயல் ட்ரெண்டி கலெக்‌ஷன் கைக் கடிகாரங்களுக்கு இடையில் மீண்டும் பளிச் என மின்னுகின்றன ஆன்டிக் ஸ்டைல் பாக்கெட் வாட்ச்கள். பாக்கெட் வாட்ச்களில் ட்ரெண்டி ஸ்கெலிட்டன் தீம் எனப்படும் உள்ளிருக்கும் சிஸ்டம்கள் வெளியில் தெரியும்படியான மாடல்தான் இப்போதைய ஹாட் சேல். ஒவ்வொன்றும் ஆயிரங்களில் துவங்கி லட்சங்கள் வரை டாலடிக்கின்றன. ஜோடிகள் அணிவதற்கான கடிகாரங்கள், யுனிசெக்ஸ் எனப்படும் இருபாலரும் பயன்படுத்தும் கடிகாரங்கள், ஆட்டோமெட்டிக் லக்ஸரி கடிகாரங்கள் போன்றவை உலகத் தரமான குவாலிட்டியில் பலதரப்பட்ட டிசைன்களில் அணிவகுக்கின்றன.

வசந்த் & கோ: சிறப்பு தீபாவளி சலுகையாக டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என அனைத்தும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதிகபட்சமாக 50% வரை தள்ளுபடிக்கான ஆஃபர் கூப்பன்கள் உள்ளன. சில முக்கிய பிராண்ட் வீட்டு உபயோகப் பொருட்களுக்குக் கட்டாயம் அன்பளிப்புகள் உண்டு. ஸ்லோகன் போட்டி மூலம் பம்பர் பரிசாக, கார் மற்றும் டூவீலர் காத்திருக்கிறது.

- ஷாலினி நியூட்டன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்