SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்ரையல் ரூம் டார்ச்சருக்கு இனி விடுதலை!

2017-11-03@ 15:42:21

- ஷாலினி நியூட்டன்

துணிக்கடைகளில் ட்ரையல் ரூம் இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான விதி. உண்மையில், நிறைய கடைகளில் அவை விதியே என்றுதான் இருக்கின்றன. கடை மட்டும் எட்டு மாடிகள், வண்ண வண்ண விளக்குகள் என ஊரே வாய்பிளக்கும்படி கட்டுவார்கள். ஆனால், இந்த ட்ரையல் ரூம் மட்டும் 5,000 சதுர அடி கடைக்கு இரண்டோ மூன்றோதான் இருக்கும். அதுவும் ஏதோ அட்டைப்பெட்டி போல், நீட்டினால் கை இடிக்கும் சின்னஞ்சிறு க்யூபிக்காக இருக்கும்.

இதில் கண்ணாடி என்று ஒன்றிருக்கும். கச்சிதமாக நம் முகத்தை மட்டுமே காட்டும். பின்புறக் கண்ணாடியில் ரசமெல்லாம் தேய்ந்து பல்லிளிக்கும். ‘ஏன் பாஸ் நாங்க மூஞ்சியைப் பார்க்கவா ட்ரையல் ரூம் வந்தோம்’ என வாடிக்கையாளர்கள் கடுப்பாவார்கள். திருவிழா நாட்களில் கூட்டத்துக்குக் கேட்கவே வேண்டாம். ட்ரையல் ரூம் முன் ஒவ்வொருவரும் ஒரு டஜன் துணியைக் கையில் வைத்துக்கொண்டு கால்கடுக்கப் பெருமூச்சுவிட்டபடி க்யூவில் நிற்பார்கள்.

ஆகா! செமையா செட் ஆயிடுச்சு எனக்குப் பிடிச்ச பச்சை கலர் எனக் கண்கள் மின்ன வாங்கிவந்தால், மறுநாள் காலை சூரிய வெளிச்சத்தில் அது நீல நிறத்தில் டாலடித்துக் கடுப்படிக்கும். இந்தப் பிரச்னை சாதாரண கடைகள் முதல் கோடிகளில் வருமானம் ஈட்டும் ஜவுளிக் கடல்கள், ஆடை சாம்ராஜ்யங்கள் வரை அத்தனைக்கும் பொருந்தும். இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா என்று அங்கலாய்ப்பவர்களுக்கு இப்போது ரிலையன்ஸ், ‘Project Eve’ என்னும் பெண்களுக்கான புதிய ஷோருமை களம் இறக்கியுள்ளது.

பெரிய அளவிலான ட்ரையல் ரூம், டே லைட், நைட் லைட் என்னும் இரண்டுவிதமான லைட்டுகள், நம்மைச் சுற்றிச் சுற்றிக் காட்டும் கண்ணாடிகள், வரிசையில் நிற்காமல் அமர்ந்து காத்திருக்க சார்ஜர் வசதிகளைக்கொண்ட சோபாக்கள் என மனதைக் கவர்கிறது. இதற்கெல்லாம் மேலான முக்கிய அம்சம் கப்பிள்ஸ் ரூம் உள்ளதுதான். அதாவது, இரண்டு பேர் ஒரே நேரத்தில் ட்ரையல் பார்க்கலாம்.

உடனே ஆண்கள் ஹையா! என சில்மிஷமாகச் சிரிக்க வேண்டாம். ஷாப்பிங் ஸ்ட்ரிக்ட்லி ஃபார் கேர்ள்ஸ்! தோழிகள் ஒரே அறையில் தனித்தனி திரையிடும் வசதிகளுடன் கலந்துரையாடி ட்ரையல் பார்க்கலாம். இந்தக் கடையின் திறப்பு விழாவுக்கு வந்த சமந்தா, குஷ்பூ உள்ளிட்ட லைம்லைட் பெண்களே ட்ரையல் ரூமை ஆச்சர்யமாகப் பார்த்ததுதான் ஹைலைட்!

படங்கள்: ஆ.வின்செண்ட் பால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2019

  24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்