SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டவுட் கார்னர்

2017-11-02@ 14:56:40

நன்றி குங்குமம் தோழி

எனது இரண்டு தொடைகளின் இடுக்கிலும் தேமல் போன்று ஒரு சரும பிரச்னை ஏற்பட்டுள்ளது. நாப்கின் பயன்படுத்துவதால் இது ஏற்பட்டிருக்குமோ? இதற்கான தீர்வு என்ன?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

பதிலளிக்கிறார் சரும நோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு...

‘‘இது படர்தாமரை ஆகும். நமது உடலில் அக்குள், முகம், கை, கால், காது, புட்டம் ஆகிய உறுப்புகளில் உராயும் பகுதிகளில் படர்தாமரை ஏற்படுகிறது. இது ஒரு விதமான பூஞ்சைத்தொற்று ஆகும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவதற்கான வாய்ப்புகள் பெரிதளவில் இருக்கின்றன. சிலருக்கு விரல் நகங்களில் பூஞ்சைகள் இருக்கலாம். சொறியும்போது அப்பூஞ்சைகள் தோலில் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அரிதாக மண்ணிலிருந்தும், விலங்குகளிடமிருந்தும் கூட பூஞ்சைத் தொற்று ஏற்படும். சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் இப்பிரச்னை ஏற்படாது. அதே நேரம் காட்டன் அல்லாத சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது அது இப்பிரச்னையை அதிகப்படுத்த வாய்ப்பிருக்கிறது. படர்தாமரைக்கென தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.

அது எரிச்சலை மேலும் அதிகப்படுத்தும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். இப்பிரச்னையைப் பொறுத்தவரை Rule of Two விதியைப் பின்பற்ற வேண்டும். இரண்டு வேளை குளித்து, இரண்டு வேளை மருந்து போட வேண்டும். படர்தாமரை சரியாகிய பின்னும் இரண்டு வாரத்துக்கு மருந்து தடவ வேண்டும். காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்துவதே சிறந்தது’’ என்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்