SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டவுட் கார்னர்?

2017-10-31@ 15:13:09

நன்றி குங்குமம் தோழி

பல் சொத்தையை போக்க இயற்கை வழியில் ஏதேனும் தீர்வு இருக்கிறதா? எளிமையாக கையாளும்படியான மருத்துவ வழிமுறை பற்றிக் கூறுங்கள்...
- புவனேஸ்வரி, பாபநாசம்.

பதிலளிக்கிறார் சித்த வர்ம மருத்துவர் பு.மா.சரவணன்...

‘‘திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கி வந்தால் உடனடியாக பல் வலி குணமாகும். பல் சொத்தை  படிப்படியாகக் குறையும். 5 கிராம் படிகாரத்தை அரை லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு வாய் கொப்புளித்து வந்தால் பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை குணமாகி பல் சொத்தையும் படிப்படியாகக் குறையும். 5 கொய்யா இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

நூறு மில்லியாகும் வரை சுண்டிய பிறகு அந்தத் தண்ணீரில் வாய் கொப்புளித்து வந்தால் பல் சொத்தை, பல் வலி, பல் கூச்சம் ஆகியவை குணமாகும். கருவேலம்பட்டைத் தூளில் சம அளவு உப்பு கலந்து பல் துலக்கி வருவதும் இதற்குத் தீர்வாக இருக்கும். ஒரு கைப்பிடி அளவு ஆலம் விழுதை துண்டு துண்டாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக சுண்டிய பிறகு அத்தண்ணீரில் நாளொன்றுக்கு நான்கு முறை வாய் கொப்புளித்து வரும்போது பற்கள் வலுவடையும், பல் சொத்தை குணமாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்