SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களே! கண்கள் ஜாக்கிரதை

2017-10-30@ 15:35:44

நன்றி குங்குமம் தோழி

- ஸ்ரீதேவி மோகன்

புகையின் கேடுகள் நாம் அறியாதது அல்ல. மாரடைப்பு, புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கும் புகைப்பழக்கம் கண்களையும் அதிகளவில் பாதிக்கிறது. பெருகி வரும் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் பெண்களிடையே மது, புகை போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருவதை காண்கிறோம்.

கடந்த 20 ஆண்டுகளாக பெண்களிடம் புகைப் பிடிக்கும் பழக்கம் இரு மடங்காகி இருக்கிறது என்கிறது ஒரு தகவல் அறிக்கை. பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் இந்த புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக அவர்களின் கண்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என்கிறார் கண் சிறப்பு மருத்துவர் அமர் அகர்வால்.

கண்புரை நோய்

புகைப் பழக்கம் கண்புரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. கண்புரையானது தெளிவான திரையை மேகம் மறைப்பது போன்றது. புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு சாதாரணமானவர்களை விட இரண்டு மடங்கு கண்ணில் புரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவர்களின் புகைப்பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க அந்த அளவு இன்னும் கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

வயது சம்பந்தமான தசைச் சீர்கேடு (Age-related Macular Degeneration)

படிப்பது, வண்டி ஓட்டுவது போன்ற அன்றாடப் பணிகளை செய்வதற்கு அடிப்படையானது கூர்மையான நேரடியான பார்வை.

வயது அதிகரிக்கும்போது இதில் குறைபாடு ஏற்படும். இது வயது சம்பந்தப்பட்ட நோய். இந்நோய்  விழித்திரையை அதிகளவில் பாதிக்கும். புகைப் பிடிப்பவர்களுக்கு இதன் பாதிப்பு மூன்றிலிருந்து நான்கு மடங்கு வரை அதிகமாக இருக்கும். அது மட்டுமின்றி புகைப் பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்காதவர்களைக் காட்டிலும் குறைவான வயதிலேயே இந்தப் பிரச்னை வரக்கூடும்.

சிஸ்டமிக் நோய்கள் (Systemic Diseases)

நீரிழிவினால் அதிகரிக்கும் ரெட்டினோபதியும் மற்றும் நீரிழிவினால் ஏற்படும் வேறு பல பிரச்னைகளும் தைராய்டு பிரச்னையால் ஏற்படும் கிரேவ்ஸ் நோய் என்ற பிரச்னையும் புகைப்பிடிப்பவர்களுக்கு மேலும் அதிகரிக்கும். பார்வை குறைபாடும் ஏற்படலாம்.

கண் நரம்புகளில் பாதிப்பு

புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக ஏற்படும்  ரத்தக் குழாய்களில் உருவாகும் சுருக்கத்தால் கண்களில் ரத்த ஓட்டம் குறையும். விழித்திரையில் ஏற்படும் பிரச்னை சில நேரங்களில் பார்வைக் குறைபாடு மற்றும் நிரந்தரமாக பார்வை இழப்பு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக்கும். இந்தப் பிரச்னை (AION) புகைப் பிடிப்பவர்களுக்கு 16 மடங்கு அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். புகைப் பிடிப்பவர்கள் என்றால் மிகக் குறைந்த வயதிலேயே இது ஏற்படுகிறது.  

சரியான சத்துணவு இன்மை, குடிப்பழக்கம் இவற்றுடன் புகைப் பழக்கமும் சேரும்போது கண் நரம்புகள் வலுவிழந்து பார்வை பறிபோகும் அபாயம் அதிகம். இதனை டொபாக்கோ ஆல்கஹால் அம்பிலையோபியா (tobacco-alcohol amblyopia)  என்பர். உடலில் நச்சுப் பொருட்கள் அதிகரித்திருக்கும் போது ஊட்டச்சத்துக் குறைபாடும் (வைட்டமின் B12) அதனுடன் சேரும்போது இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

புகைப் பிடிப்பதனால் கண்ணில் குளுக்கோமா (நரம்புகள் பாதிப்பால் ஏற்படும் கண் அழுத்தம்) அதிகரிக்கும் அபாயம் உண்டு. விழித்திரைக்கும் கண்ணின் வெண்படலத்துக்கும் இடையே உள்ள கண்ணின் நடுப்பகுதியான Uvea  பாதிக்கப்பட்டு அந்த இடத்தில் வீக்கம் ஏற்படும். இதற்கு Uveitis என்று பெயர். புகையிலையின் புகையானது கண்களில் எரிச்சலை ஏற்படுத்துவதுடன் மோசமாக கண் உலர்ந்து போதல் ஆகிய வற்றையும் ஏற்படுத்துகிறது.

ஆறாம் விரலால் எந்நேரமும் சிகரெட் மற்றும் சுருட்டு புகைப்பவர்களுக்கு கண் உலர்தல் இருமடங்காக இருக்கும். இது புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல புகையிலையை எந்த வடிவில் பயன்படுத்துபவர்களுக்கும் இதே நிலைதான். எனவே இவற்றை தவிர்க்க ஒரே வழி நாகரிகம் என்ற போர்வையில் நீங்கள் ஈடுபடும் தீயப் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவது மட்டும்தான்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-11-2017

  19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • odingaelectionkenya

  கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

 • serina_wed_photos

  டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

 • Newyork_Fire

  நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

 • mikro_yogiii

  பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்