SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Flying Bird YOGA

2017-10-17@ 12:43:46

நன்றி குங்குமம் தோழி


‘யோகா நல்ல விஷயம்தான். இளைஞர்களுக்குத் தகுந்த மாதிரி இன்ட்ரஸ்ட்டிங்கா, ஜாலியா அதுல ஏதும் பயிற்சிகள் இருக்கா?’ என்று கேட்பவர் களுக்கான 2.0 வெர்ஷன்தான் Flying Bird Yoga. அதிவேகமாக மாறிவரும் உலகில் தினமும் ஒரே மாதிரியான யோகா பயிற்சிகள் என்றால் இன்றைய இளசுகளுக்கு போரடிக்கத்தானே செய்யும். எல்லாவற்றிலும் மாற்றத்தை விரும்புபவர்கள், உடற்பயிற்சி விஷயத்திலும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பதில் ஆச்சர்யமில்லையே.

அவர்களுக்காகவே Flying bird yoga என்ற இந்த புதிய யோகாசன முறை அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இப்போது பெங்களூருவில் மட்டும் கால் பதித்திருக்கும் இந்த ஃப்ளையிங் பேர்ட் யோகா உடல் மற்றும் மன இறுக்கத்தைப் போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ‘‘வழக்கமான யோகா பயிற்சிகளையே தூரிகளில்(Hammock) ஆடிக்கொண்டே செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த யோகா.

ஆமாம்... பறக்கும் யோகா ஒரு வித்தியாசமான அனுபவம்தான். யோகா செய்யும்போதே காற்றில் பறப்பது போன்று உணர முடியும். இந்தியாவின் மிகப்பழமையான ஒரு பயிற்சி முறையை நவீனமாக மாற்றி வடிவமைப்பதன் மூலம் இன்றைய தலைமுறையினருக்கும் முழுமையான பலன்கள் போய்ச்சேரும் என்பதற்காகவே இந்த புதிய முயற்சி’’ என்று விளக்கம் தருகிறார் ஃப்ளையிங் பேர்ட் யோகாவை வடிவமைத்த அக்‌ஷர்.

‘வித்தியாசமான அசைவுகளை இந்த யோகாவில் செய்ய முடியும் என்பதால் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைகளில் அதிகப்படியான நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். சவாலான சூழலில் பறந்துகொண்டே செய்யும்போது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியிருப்பதால், அதிகமான கவனமும் கிடைக்கும். புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான இந்த யோகாவால் த்ரில்லான அனுபவத்தையும் உணர முடியும். இதில் கிடைக்கும் அதிகப்படியான மகிழ்ச்சி மன அழுத்தத்தை குறைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கும்’ என்பதும் இவரது கணிப்பு. Interesting!

- இந்துமதி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

 • 18-01-2019

  18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • rivermoon

  வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

 • ParadeREhearsalRepublicDay

  டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

 • alanganalloor_kaalaigal11

  வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்