SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊசிமுனை ஓவியங்கள்

2017-10-05@ 14:19:51

நன்றி குங்குமம் தோழி

ஆரி ஒர்க் ஸ்டோன் நெக்லஸ் மாடல்

மிகவும் எளிமையாக உள்ள ஒரு ப்ளவுஸினை அதிக நேரம் செலவு செய்யாமல் விரைவில் நம் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான வடிவ கலர் ஸ்டோன்களை பேப்ரிக் கம் கொண்டு உடை முழுவதும் ஒட்டி கண்ணைக் கவரும் விதமாக ஹைலைட் செய்யும் முறையினை தோழி வாசகிகளுக்காக செய்து காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்சியாளர் காயத்ரி.

தேவையான பொருட்கள்

உட்ஃபிரேம், ஃபேப்ரிக் கம், ஷர்தோசி நீடில், ஷரி நூல், கோல்டன் ஸ்டோன், ஃப்ளவர் ஸ்டோன், வொய்ட் ஸ்டோன், கோல்டன் ஜமுக்கி, கோல்டன் பீட்ஸ், கோல்டன் ட்யூப், ரன்னிங் ஸ்டோன்.

டிசைன் செய்ய

வேண்டிய இடத்தை மையப்படுத்தி உட் ஃபிரேமில் இணைத்து நன்றாக டைட் செய்ய வேண்டும்.

அதில் தேவைப்படும் கழுத்து டிசைனை வரைந்து
கொள்ளவும்.

ரன்னிங் ஸ்டோனை, வரைந்துள்ள டிசைனின் மேல் தண்டவாளங்கள் போல் இரண்டு பக்கமும் ஒட்டவும்.

அதன் இரு பக்கமும் கோல்டன் பீட்ஸை பார்டர் போல் தைக்கவும்.

அதற்கு இடையில் கோல்டன் ஸ்டோன் ஒட்டி அதனைச் சுற்றி கோல்டன் ஜமுக்கி ஒட்டவும்.

யூ வடிவ நெக் வடிவத்திற்குக் கீழே கோல்டன் ஸ்டோன் ஒட்டி அதனைச் சுற்றி மாங்காய் வடிவில் கோல்டன் ஜமுக்கி ஒட்டவும். அதனைச் சுற்றி
ஃப்ளவர் ஸ்டோன் ஒட்டி அதன் மீது ஒயிட் ஸ்டோன் ஒட்டவும். பின்னர் அதனைச் சுற்றி கோல்டன் ட்யூப் ஒட்டவும். அதனைச் சுற்றி கோல்டன் ஷரி நூலால் செயின் ஸ்டிச் போடவும்.

ப்ளவுஸின் உடல் பகுதி முழுவதும் ஃப்ளவர் ஸ்டோன் ஒட்டி அதன் மீது ஒயிட் ஸ்டோன் ஒட்டவும்.

ப்ளவுஸில் ரன்னிங் ஸ்டோனால் பார்டர் ஒட்டவும்.

சாதாரணமான ப்ளவுஸினை கூடுதலாக மெருகூட்டி ஹைலைட் பண்ண ஒரு ப்ளவுஸுக்கு 4000ம் வரை வேலைப்பாட்டையும், எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் பொறுத்து விலை நிர்ணயம் செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்