SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழைய புடவையில் ஃபேஷன் உடைகள்

2017-10-04@ 14:17:09

நன்றி குங்குமம் தோழி

- ஷாலினி நியூட்டன்


விதவிதமான சல்வார்கள், குர்தாக்கள், ஏன் மேக்ஸி உடைகள் கூட நம் பீரோவை அலங்கரித்தாலும் புடவைகளுக்கு உரிய அழகே தனிதான். கட்டுவதே இல்லையென்றாலும் பெண்களின் புடவை சேகரிப்பு மட்டும் எப்போதும் நிற்காது. ஆனாலும் ஒரு சில புடவைகள் இப்போது ட்ரெண்ட் இல்லையே, என்ன செய்யலாம் என பல புடவைகளை வைத்துக்கொண்டு நாம் சிந்தித்திருப்போம். இதே மாதிரிதான் டிசைனர் ஷாலினி விசாகனும் சிந்தித்திருக்கிறார்.

பழைய புடவைகளில் ட்ரெண்டி வெஸ்டர்ன் உடைகளை உருவாக்கி ஃபேஷன் வாசிகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ‘செம ஐடியா... எங்க பிடிச்சீங்க?’ எனக் கேட்டவுடன் உற்சாகமாக பேசத் துவங்கினார். “நம் அம்மா, பாட்டி, அக்காள் என வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் புடவைகளுக்கும் ஓர் அழகிய கதை இருக்கும். இந்தக் கதைகளுக்கு புதிய சுபமும், ஒரு ட்ரெண்டி ஆரம்பமும் கொடுக்க நினைத்தேன்.

அப்படி உருவானதுதான் இந்த “Western Dresses with Old Sarees”. நானே நினைத்துக்கூட பார்க்கவில்லை இந்த அளவிற்கு இந்த உடைகள் ட்ரெண்டியாகவும் ஃபேஷனாகவும் இருக்கும் என. மேலும் அனைத்தும் பனாரஸ் பட்டு, ஒரிஜினல் பட்டு என அப்படியே வெஸ்டர்ன் டோன் மாற்றிய போது ஃபேஷன் ஷோவில் கண்களைக் கவர்ந்திழுத்ததாக பலரும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு உண்மை சொல்லவா? டிசைனிங் மட்டும்தான் நான். இந்த சூப்பர் ஐடியாக்கள் எல்லாம் என் கணவர் விசாகனுடையது” என்றவர் ஒவ்வொரு உடையின் டிசைனிங் குறித்து ஓர் அழகிய கதையும் கூறினார்.

* கருப்பு நிற பலாஸோ பேன்ட் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஷேப் டாப்: இந்த உடையில தொடை வரை கவர் செய்யும் ஒரு சின்ன ஷார்ட்ஸும் இணைச்சிருப்போம். இந்தப் புடவைக்கு வயது 30.

* ஹாஃப் வெள்ளை நிற மற்றும் மெரூன் நிற நீ லெங்த் கவுன்: காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் இடுப்புக்கு மேல் பகுதியில அதீத மடிப்புகள் கொண்டு உருவாக்கப்பட்ட கவுன். இந்தப் புடவைக்கு வயது 25.

* பச்சை நிற பலாஸோ மற்றும் ஜாக்கெட்: இந்த சேலை எங்க அத்தைக்கு அன்பளிப்பாக வந்தது. அவருக்கு பிடிக்காமல் அப்படியே வைத்திருக்க இன்று வேறு ஒரு உருவமா மாறியிருக்கு. அந்த கோல்டன் ஜாக்கெட் சேலையின் முந்தியில் இருந்து டிசைன் செய்யப்பட்டது.

* ஷார்ட்ஸ் & பலூன் டாப்: பட்டுச் சேலையில் செய்யப்பட்ட பலூன் டாப், பட்டன் வைக்கப்பட்ட ஸ்லீவ். சேலையின் முந்தியில் ஷார்ட்ஸ் உருவாக்கியிருக்கிறேன்.

* ஷார்ட்ஸ் & பலூன் டாப்: பட்டுச் சேலையில் செய்யப்பட்ட பலூன் டாப், பட்டன் வைக்கப்பட்ட ஸ்லீவ். சேலையின் முந்தியில் ஷார்ட்ஸ் உருவாக்கியிருக்கிறேன்.

* சிவப்பு நிற அபவ் நீ கவுன்: இந்த உடையை சேலையில் இருந்து உருவாக்கவில்லை. ஒரு பட்டுப் பாவாடையை இப்படி கவுனாக மாத்தியிருக்கேன்.

* பௌ & பீச் கலர் உடை: பீச் கலர் லாங் உடை. அதனுடன் மார்பின் அடிப்பகுதியில் ஒரு பவ் டைப். ஒரு ஷார்ட் டைப் உடை பாட்டம்வேர் என கொஞ்சம் ட்ரெண்டியாகப் பட்டுப் புடவையில் உருவாக்கப்பட்டது.

* ஷ்ரக் & ஷீத் ட்ரெஸ்: ஸ்லீவ்லெஸ் ஷ்ரக் மற்றும் ஷீத் உடை. இதிலும் முந்தி ஷ்ரக்காகவும், சேலை ஷீத் உடையாகவும் மாறியிருக்கிறது. காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் உருவான உடை.

இவை மட்டும் இல்லாமல் ஷ்ரக் வித் தோத்திக்களாக ஆண்களுக்கும் இதில் உடைகள் உருவாக்கினேன். புடவையில் உருவாக்கப்பட்டவை என கொஞ்சமும் தெரியாமல் அணியலாம். இந்த உடைகளை ஃபேஷன் ஷோக்களில் பார்த்துவிட்டு பலரும் தங்களின் பழைய புடவைகளுடன் வரத் துவங்கியுள்ளனர்.

இதுமட்டுமின்றி நான் உருவாக்கிய அடாப்டிவ் உடைகளான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய ஈஸிவேர் உடைகளுக்கும் பலரும் நாங்கள் மாடலாக வேண்டும் என விருப்பம் காட்டியிருக்கிறார்கள். பல வாடிக்கையாளர்களும் கிடைத்திருப்பதால் இந்த இரண்டு ஐடியாக்களையும் அடிப்படையாகக் கொண்டு பெரிய அளவில் ஒரு பொட்டிக் ஷோரும் திறக்க போகிறேன் என ஆவலுடன் சொல்லி முடிக்க அடுத்த கணம் நம் மனம் வீட்டில் உள்ள பழைய புடவையை ஆராய ஆரம்பித்தது.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 2018_indiragandibirthdy

  இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

 • 2018wildfire_trumph

  கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

 • asiapacific_meet

  ஆசிய பசிபிக் வர்த்தக பேச்சு வார்த்தையை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் சந்திப்பு

 • maldevmodi

  மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழா : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்