SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2017-10-03@ 15:49:16

நன்றி குங்குமம் தோழி

* அல்வா செய்வதற்கு பூசணிக்காயை தோல் சீவி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் மூடிவைத்து விட்டு, பிறகு  சீவினால்  எளிதாக சீவ வரும். ஒரே சீராகவும் இருக்கும்.

* தக்காளி சூப் கெட்டியாக வருவதற்கு தக்காளிப் பழங்களுடன் சில துண்டு பூசணிக்காயை போட்டு வேக விடுங்கள்.- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* துருவிய கேரட் அல்லது துருவிய தேங்காயை இட்லித்தட்டிலுள்ள குழிகளில் பரப்பி அவற்றின் மேல் இடியாப்பம் பிழிந்து அல்லது இட்லி வார்த்து வேகவைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

* இரண்டு மாவடு, ஒரு கீற்று தேங்காய், இரண்டு பச்சைமிளகாய், சிறிதளவு கொத்தமல்லி, தேவையான உப்புடன் அரைத்து தயிரில் கலக்கி கடுகு தாளிக்கவும். சூப்பர் சுவையான மாவடு தயிர் பச்சடி ரெடி.- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

* கோஸ், காலிஃப்ளவர் போன்றவை சமைக்கும்போது ஒரு துண்டு பிரெட் சேர்ப்பதால் இவைகளிடமிருந்து வரும் நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

* சேமியா பாயசம் செய்யும் போது சேமியா வெந்ததும் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் விட்டு பின் சர்க்கரை, பால் சேர்த்து செய்தால் சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாது.

* எலுமிச்சங்காயை ஊறுகாய் போடுவதற்கு முன் நன்றாக கொதிக்கும் வெந்நீரில் 1 டீஸ்பூன் சர்க்கரையை போட்டுக் கலக்கிய பின் முழுப் பழங்களை போட்டு மூடிவைத்து பத்து நிமிடங்கள் கழித்து எடுத்து நறுக்கி ஊறுகாய் போட்டால் மறுநாளே பயன்படுத்தலாம். தோலில் கசப்பு அடியோடு இருக்காது.- ஆர்.அஜிதா, கம்பம்.

* ரசத்திற்கு புளி ஊறவைத்துக் கரைக்கும் போது மேலோடு கரைக்க வேண்டும். அழுந்த பிசைந்து கரைத்தால் ரசத்தின் சுவை போய் விடும்.

* உருளைக்கிழங்கை தோல் நீக்கி ஒரு வெள்ளைத்துணியில் கட்டி கொதி நீரில் போட்டு ஐந்து நிமிடம் வைக்கவும். பிறகு குளிர்ந்த உப்பு நீரில் போட்டு ‘சிப்ஸ்’ செய்தால் உருளைக்கிழங்கு வெள்ளையாக இருக்கும்.

* வெறும் கடாயில் ஜவ்வரிசியை லேசாக வறுத்து, மிக்சியில் அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வடை, அடை செய்யும்போது அதில் 2 டீஸ்பூன் ஜவ்வரிசி மாவைக் கலந்து செய்தால் கரகரப்பாக இருக்கும்.- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

* உப்பு ஜாடியில் ஈரம் கசிந்து கொண்டிருந்தால் ஜாடிக்குள் சிறிது அரிசியை உப்புடன் கலந்து வைத்தால் ஈரக்கசிவு இருக்காது.

* பாயசத்திற்கு பால் குறைவாக இருந்தால் ஹார்லிக்ஸ், வீவா போன்றவற்றை கரைத்து விட பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

* ரவா தோசை மொறு மொறுவென்று இருக்க ரவை, மைதா, அரிசி மாவு சம விகிதத்தில் கலந்து அதில் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம் போட்டுச் சுட வேண்டும்.- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

* இரண்டு தக்காளிப் பழங்களை நறுக்கி பாகற்காய் பொரியலில் போட்டால் கசப்பு இருக்காது.

* கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து விட்டால் குழம்பு கெட்டியாக இருக்கும். ஊசியும் போகாது.- ஆர்.அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி.

* எலுமிச்சம் பழம் ரசம் செய்யும் போது, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை மிக்சியில் அரைத்து பின்னர் ரசத்தில் போட்டால் கமகமவென்று மணமாக இருக்கும். இதை ‘சூப்’பாகவும் சாப்பிடலாம். - வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.

* பனங்கிழங்கு பொடியில் சின்ன வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு, சிறிது கடலை மாவு சேர்த்து பிசைந்து மொறு மொறு பக்கோடா செய்யலாம்.- இல.வள்ளிமயில், திருநகர்.

* கிழங்கு வகைகளை சீக்கிரம் வேகவைக்க, அவற்றை பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பின் வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.- எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு.

* அரிசி கழுவிய தண்ணீரில் பாகற்காயை நறுக்கி கழுவி விட்டு சமைத்தால், பாகற்காயின் கசப்புத்தன்மை குறையும்.- கே.ராஜேஸ்வரி, திருச்சி.

* வெங்காயத்தையும், தக்காளியையும் சம அளவு எடுத்து பொடியாக நறுக்கி, பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து காடியில் போட்டு ஊறிய பின் சாப்பிட்டால் தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.- நா.பாப்பா நாராயணன், பாளையங்கோட்டை.

* கடலைமாவு போண்டா செய்யும் போது ஒரு பிடி முருங்கைக்கீரையை சேர்த்து செய்தால் சுவை கூடும்.- சு.கண்ணகி, மிட்டூர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

 • chinaboat

  உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்