SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேஷ்டி புடவை!

2017-09-15@ 11:54:08

நன்றி குங்குமம் தோழி


சமந்தாவின் நியூ ஸ்டைல்: ஹா... ஹா!’இதுதான் வாட்ஸ் அப்பின் லேட்டஸ்ட் ட்ரோல். அப்படி என்னப்பா அந்த புள்ள ஸ்டைல் பண்ணுச்சு? ஆக்சுவலி ஒரு ட்ரெஸ். அது சேலையா, வேஷ்டியா, கவுனா என்றே தெரியாமல் நம் இணையதள குறும்பர்கள் சமந்தாவின் புகைப்படத்துடன் ஒரு பெண்ணின் சொர்ணாக்கா ஸ்டைல் புகைப்படத்தை இணைத்து ஜாலி காட்டி வருகிறார்கள். சமந்தா மட்டுமல்ல சமீபகாலமாக இந்திய நடிகைகள் பலருக்கும் மிகவும் பிடித்த உடையாக மாறி வருகிறது இந்த தோத்தி சேலைகள். இந்த ஸ்டைல் உடையை அதிகம் விரும்பி அணிவது சோனம் கபூரும், சமந்தாவுமே. இதென்ன புது ஸ்டைல்? விவரம் அறிய டிசைனர்களை பிடித்தோம்.

ஷாலினி விசாகன் (ஃபேஷன் டிசைனர்): இந்த ட்ரெண்ட் மகாராஷ்டிராவுல இருந்து வந்தது. ஆந்திர ஸ்டைல்னு கூட சொல்லலாம். தோத்தி சேலைகள் அணியறப்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். கட்ற விதம்தான் நம்ம ஸ்டைல மாத்தும். இந்த சமந்தா புடவை கூட சமூக வலைத்தளத்துல தேவையில்லாம கிண்டலுக்கு உள்ளாகியிருக்கு. இதுல சின்ன தப்பு இருக்கு. அது கட்டின விதம். பெரிய மடிப்புகள் வெச்சுட்டாங்க. மத்தபடி அதை கிண்டலடிக்கறது நம்ம அறிவீனம். தோத்தி சேலைகளுக்கு ஜார்ஜெட், ஷிப்பான், பூனம்  மாதிரியான லேசான சேலைகளைத்தான் பயன்படுத்துவோம். அதுல நல்ல மடிப்பு கிடைக்கும். அருமையான வளைவுகள் உண்டாகும்.

இதுக்கு மாறா சமந்தா இந்த ஸ்டைல்ல ஒரு காட்டன் அல்லது திக்கான மெட்டீரியல் சேலை பயன்படுத்தியிருக்காங்க. அங்கதான் பிரச்னை. மத்தபடி ஸ்டைல் கரெக்ட்தான். கடந்த ஒரு வருஷமா நம்ம இந்திய செலிபிரிட்டிகளுடைய ஹாட் தேர்வு தோத்தி சேலைகள்தான். ஆன்டிக் நகைகள் பயன்படுத்தலாம். கோலாபுரி, மோஜாரி அல்லது ஜூட்டி செருப்புகள் பயன்படுத்தினால் ராயல் லுக் கிடைக்கும். உயரம் குறைவான பெண்கள் கொஞ்சம் மடிப்பைப் குறைவா வைக்கணும். உயரமான பெண்கள் எவ்வளவு மடிப்பு வைக்க முடியுமோ அவ்வளவு வைக்கலாம். ஃபிஷ் டெயில் ஹேர் ஸ்டைல் மேட்ச்சிங்கா இருக்கும். இதுக்கு நம் இந்திய நடிகைகள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் வட - தென் இந்திய ஃபேஷன் வாசிகளை இணைக்கற விதமா இந்த உடை இருக்கறதுதான்.

தோத்தி ஸ்டைல் பேண்ட் மேல டாப் மாதிரி கூட பயன்படுத்தறாங்க. சிலர் ஜம்ப்சூட் மாதிரி பயன்படுத்தறாங்க. நமக்கு ஏத்த மாதிரி என்ன வேணும்னாலும் செய்துக்கலாம். சின்னச் சின்ன ரூல்ஸ் ஃபாலோ பண்ணணும். அவ்வளவுதான். காவ்யா பிரியா (ஃபேஷன் டிசைனர்): சட்டை பாணில இல்லாம லாங் டைட் ஸ்லீவ் ப்ளவுஸை சமந்தா பயன்படுத்தியிருக்கணும். மத்தபடி நம் மக்கள் எல்லாத்தையும் கிண்டல் பண்ணி பழகிட்டாங்க. சமந்தா இந்த உடைல கொஞ்சம் குண்டா தெரியறாங்க. காரணம், வெயிட்டான மெட்டீரியல். தோத்தி சேலைகள்னா லைட் வெயிட்தான் பயன்படுத்தணும். அதிக குண்டான பெண்கள் இந்த தோத்தி சேலைகளைத் தவிர்க்கறது நல்லது.

உயரமா, ஒல்லியா இருக்கிற பெண்களுக்கு இது ஸ்டைலிஷ் லுக் கொடுக்கும். முக்கியமா ஸ்ரேயா சரண், சோனம் கபூர், தீபிகா படுகோனே, காத்ரினா, கரீனா மாதிரியான உடல் வாகு கொண்ட பெண்களுக்கு இது சரியான உடை. காலர் வெச்ச ப்ளவுஸுக்கு பெரிய தோடு போட்டா நீங்கதான் ஃபேஷன் குயின். முடிந்த வரைக்கும் டிசைன்கள் இல்லாம ப்ளைன் சேலைகள்... சின்ன கிராண்ட் பார்டர் வெச்சு உடுத்தறது சிறந்தது. இப்ப புடவையா இல்லாம அப்படியே பேண்ட் ஸ்டைல்ல ஈஸி டூ வேர் கூட வந்துடுச்சு. ஓகே. சமந்தா ஏன் லைட் வெயிட் புடவைகளைத் தவிர்த்து கனமான சேலை அணிந்தார்? காரணம் இருக்கிறது.

தெலுங்கானா அரசு கைத்தறி புடவைகளை புரமோட் செய்யும் விதமாக ‘Woven 2017’ என்னும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதன் பிராண்ட் அம்பாசிடரான சமந்தா கைத்தறி புடவை ஒன்றைத்தான் இந்த ஸ்டைலில் கட்டியிருந்தார். கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் சமந்தா மட்டுமின்றி நாகசைதன்யா, கேத்தரின் தெரசா, அடா சர்மா, பி.வி.சிந்து உள்ளிட்ட பலரும் கைத்தறி உடைகள் அணிந்து வித விதமாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த Back Story தெரியாமல் கிண்டலடிக்கலாமா நியாயமாரே?! ரைட். வரும் தீபாவளிக்கு உங்க பர்ச்சேஸ் தோத்தி சேலையா?!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்