SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2017-08-18@ 14:02:08

நன்றி குங்குமம் தோழி

கெட்டியான வெல்லப்பாகு வைத்து தேன்குழலை உடைத்துப் போட்டு ஏலக்காய், தேங்காய்த்துண்டுகள், நெய் விட்டு உருண்டைகளாக பிடிக்கலாம். ருசியாக இருக்கும்.
- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.

உப்பு, ஓமம், கடலை மாவு, சிறிது எண்ணெயில் பிசைந்து மிளகாயை லேசாக கீறி, அதற்குள் இதை ஸ்டப் செய்து பிறகு கடலை மாவில் முக்கி பஜ்ஜி செய்தால் டில்லி டேஸ்ட்டில் தின்று மகிழலாம்.

காலை உணவுக்கு செய்த ரவை உப்புமா நிறைய மீந்து விட்டால், அதை மேலும் சுவையாக்க இதோ ஓர் எளிய வழி. இந்த உப்புமாவில் சிறிதளவு கரம்மசாலா பொடியைச் சேர்த்து 2 ஸ்லைஸ் பிரெட்டுக்கு நடுவில் உப்புமாவை வைத்து டோஸ்டரில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

பிரெட் காய்ந்து விட்டால் அதைத் தூக்கி போடாமல் தண்ணீரில் நனைத்து மாவாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 2 டீஸ்பூன் கடலைமாவு, ஒரு சிட்டிகை உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பிரெட் மாவில் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் பக்கோடா ரெடி.

உளுந்து வடை செய்யும்போது உளுந்தை தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி 15 நிமிடங்கள் உலர விடவும். 1½ மணி நேரம் கழித்து மிளகு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பந்து போல் அரைத்தெடுக்கவும். இதில் வடை தட்டினால் எண்ணெய் குடிக்காது, வடையும் மொறுமொறுப்பாக இருக்கும்.
- மொ.லைலா, மேற்கு தாம்பரம்.

பூரி உப்பிக் கொண்டு வருவதற்கு மாவு பிசையும் போதே கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், 1 டீஸ்பூன் ரவையும் கலந்து பிசையுங்கள். 1/2 டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொண்டால் உப்பி வந்த பூரி அமுங்காமல் அப்படியே இருக்கும்.
- கே.ராஜேஸ்வரி, திருச்சி.

பஜ்ஜிக்கு மாவு கரைக்கும்போது சிறிது பொட்டுக்கடலை மாவையும் சேர்த்துக் கொண்டால், மேலே கரகரப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
- இல.வள்ளிமயில், திருநகர்.

அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை அதில் போட்டால் படபடவென்று வெடித்து தோல் எல்லாம் சிதறும். பிறகு பூண்டை உரிப்பது சுலபம்.

கத்தரிக்காயை வேகவைக்கும்போது அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் தயிரை சேர்த்துக் கொண்டால் கத்தரிக்காயின் நிறம் மாறாமல் இருக்கும்.

பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெய், தண்ணீர் கலந்திருக்கும் காரணத்தால் மிகவும் சத்தம் போட்டால் அதில் ஒரு துண்டு வாழை இலையைப் போட்டு விடுங்கள். தானாகவே ஓசை அடங்கி விடும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

ரவா உப்புமா மீந்துவிட்டால் அதனுடன் சிறிது அரிசி மாவு கலந்து வடை செய்யுங்கள். சுவையான ரவா வடை ரெடி. ரவையை வறுத்து வைக்கும்போது சிறிது உப்புத்தூள் சேர்த்து வறுத்தால் நீண்ட நாட்கள் புழுக்கள் வராது.
- கே.ராகவி, திருவண்ணாமலை.

ஆம்லெட் மிருதுவாக இருக்க ஒரு முட்டைக்கு ஒரு கரண்டி என்ற கணக்கில் நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கி ஆம்லெட் போட வேண்டும். குலோப்ஜாமூன் பாகில் 1 டீஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும் கெட்டுப் போகாமலும் இருப்பதுடன் சுவையும் அதிகமாக இருக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்