SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையிலே கலை வண்ணம்

2017-08-18@ 13:58:19

நன்றி குங்குமம் தோழி
 
குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதாவது விழாக்கள் அல்லது  பர்த்டே  பார்ட்டிகளுக்கு செல்லும் போது அதிக எடை இல்லாமல் நிறைய செலவும் இல்லாமல் செய்த நெற்றிச்சுட்டியை அணிந்து செல்லலாம். டிரஸ்சுக்கு மேட்சாக சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பு. குவில்லிங் நெற்றிச்சுட்டியின் செய்முறை கீழே தரப்பட்டுள்ளது.  

குவில்லிங் நெற்றிச்சுட்டி

தேவையான பொருட்கள்
1. 3 mm குவில்லிங் பேப்பர் - பச்சை, நீல, பிங்க் அல்லது விருப்பமான வண்ணங்கள்
2. குவில்லிங் ஊசி
3. பார்டர் பட்டி
4. வெள்ளை பசை
5. வெள்ளை மணிகள்
6. ஹுக்
7. கியர் ஒயர் - (மணிகள் கோர்க்க)
8. கியர் லாக்
9. கத்திரிக்கோல்
10. ப்ளையின் நெயில் பாலிஷ்.

செய்முறை...

1. நெற்றிச்சுட்டி டாலர் செய்ய முதலில் பச்சை நிற முழு நீள குவில்லிங் பேப்பர் 3 mm எடுத்துக் கொண்டு பாதியாக மடித்து வெட்டி, குவில்லிங் ஊசியில் சுற்றி எடுத்து முனையை ஒட்டவும். வளையம் கிடைக்கும்.

2. பிங்க் நிற 3 mm குவில்லிங் பேப்பரை நாலில் ஒரு பாகம் வெட்டவும். அதாவது ஒரு குவில்லிங் பேப்பரை சமமாக நான்காக வெட்டவும். அதை பார்டர் பட்டியில் சுற்றி முனையை ஒட்டி எடுக்கவும். கிடைக்கும் வளையம் போல் மேலும் 5 வளையங்கள் செய்து கொள்ளவும்.

3. செய்து வைத்துள்ள பச்சை நிற வளையத்தை சுற்றி இந்த பிங்க் வளையத்தை ஒட்டினால் பூ மாதிரி வடிவம் கிடைக்கும். அதனை 5 நிமிடம் காய விடவும்.

4. ஒரு நீல நிற 3 mm குவில்லிங் பேப்பரை பாதி எடுத்துக் கொண்டு செய்யப்பட்டுள்ள பூவைச் சுற்றி பெரிய வளையம் போல் ஒட்டவும். மினி டாலர் தயார்.

5. ஒரு  பச்சை வண்ண 3 mm குவில்லிங் பேப்பரை நான்காக வெட்டி, குவில்லிங் நீடிலில் சுற்றி, முனையை கூராக்கி திலகம் செய்து, முனையை ஒட்டவும். இது மாதிரி 15 திலகங்கள் செய்து கொள்ளவும். இதை நீல நிற வளையத்தைச் சுற்றி வட்டமாக நெருக்கமாக ஒட்டி காய விடவும்.

6. அதன் மீது முன்னர் செய்தது போல் முழு 3 mm நீல நிற குவில்லிங் பேப்பரை எடுத்து பெரிய வளையம் போல் ஒட்டவும்.

7. தயாராகி உள்ள இந்த டாலரின் கீழ் முனையில் பிங்க் நிற திலகம் செய்து ஒட்டவும்.

8. டாலரின் மேல் முனையில் சிறு வளையம் செய்து ஒட்டவும்.

9. அதில் கியர் ஒயர் அல்லது நைலான் கயிறு கோர்த்து போட்டு மணிகள் கோர்க்கவும்.

10. முடிக்கும் போது நெற்றிச்சுட்டி ஹுக்கில் கோர்த்து முடிச்சுப் போட்டு டைட் செய்யவும். (வேண்டுமெனில்  கியர்லாக் போடவும்.)
ட்ரான்ஸ்ஃப்ரன்ட் நெயில் பாலிஸ் ஒரு கோட் கொடுத்து காயவிடவும்.

சுட்டீஸுக்குப் பொருத்தமான சுட்டிகளை செய்து அசத்துங்கள். செய்முறை சுலபம். செல வும் குறைவு என்பதால் குழந்தைகளுக்கும்  அவர்களே செய்யவும் நீங்கள் கற்றுத் தரலாம்.

(முற்றும்)
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்
படங்கள்:  ஆர்.கோபால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்