SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிரிப்பு யோகா

2017-08-08@ 16:27:43

~ நன்றி குங்குமம் தோழி

பால் (Ball) யோகா, டான்ஸ் யோகா, தண்ட யோகா... இப்படி வித்தியாசமான பல யோகாசனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம்விட வித்தியாசமான ஒரு யோகா ஒன்று உண்டு... அது, சிரிப்பு யோகா. “யோகா ஓர் அற்புதமான கலை. மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. சிரிப்பும் அப்படித்தான். சிரிக்கும்போது, உடலின் முக்கியமான பல நரம்புகள் செயல்படுவதாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின்றன. எனவே, யோகாவையும் சிரிப்பையும் இணைத்துத் தரும்போது அது தேன் தடவிய மருந்தாகிறது.

யோகா என்றாலே ‘அது வயதானவர்களுக்கானது’ என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமானது. மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றைக் கடுமையான பயிற்சிகளாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், சிரிப்பு அதனுடன் இணையும்போது அனைவரும் ஆர்வமாக செய்ய முன்வருகின்றனர்.இன்றைய அவசர உலகத்தில் அனைவருக்குமே மனச்சோர்வு தவிர்க்க முடியாதது. மாணவர்களுக்கு, அதிகமான மார்க் எடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிகள். இதனால் சிறு வயதிலே அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய பயம் அதிகமாகிவிடுகிறது. இந்த யோகா இந்த பயத்தைப் போக்கி வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்ள உதவுகிறது. அவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் படிக்கும்போது, அதிகமான மதிப்பெண்களையும் பெறுகிறார்கள்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு முன்னால் இன்று பல்வேறு சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது... போட்டிகளும் அதிகம். இதனால், எப்படியாவது முன்னேறிச் செல்லவேண்டும் என்ற நெருக்கடிக்கு எல்லோருமே உள்ளாகிறார்கள். இதன் காரணமாக, மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் எண்ணற்ற நோய்கள் உண்டாகின்றன. எளிமையாகச் செய்யவேண்டிய வேலைகளைக்கூட பதற்றத்துடன் செய்யும்போது அரை மணி நேரத்தில் முடிக்கவேண்டிய வேலைக்குக்கூட இரண்டு, மூன்று மணி நேரம் ஆகிறது. இதனால் வேலையிலும் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் சிரிப்பு யோகா ஆகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. இது, இவர்களின் பதற்றத்தை, மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. வேலையில் உற்சாகத்தோடு செயல்படவைக்கிறது.

மது அருந்துபவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு நேர்ந்த சோகங்களுக்காகவே குடிப்பதாகவே சொல்கிறார்கள். சோகமாக இருப்பவர்களுக்குச் சிரிப்புதான் சரியான மருந்தாக இருக்க முடியுமே தவிர, மது மருந்தாக இருக்க முடியாது. அது, மேலும் பல நோய்களைத்தான் உண்டாக்கும். ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்குக் கவலையில் இருப்போருக்குச் சிரிப்பு அவசியம். இந்தச் சிரிப்பு வழி யோகா அவசியம். சிரிப்பு யோகாவின் மூலம் மதுவில் இருந்து விடுபட்டவர்கள் பலர். தற்போது மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துவருகின்றனர்.

இப்போதெல்லாம் வீட்டில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். பேரக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றுவிடுகிறார்கள். மாலை வீடு திரும்பியதும் குழந்தைகளுக்கு இருக்கவே இருக்கின்றன ட்யூஷன், பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்... வீட்டில் இருக்கும் முதியவர்களோ பேசுவதற்குத் துணை இல்லாமல், தனிமையில் அவதிப்படுகின்றனர். எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடனேயே இருக்கவேண்டிய சூழல். சிரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லலாம். அவர்களுக்கு இந்தச் சிரிப்பு யோகா மிகச் சிறந்த மருந்து’’ என்கிறார் சிரிப்பானந்தா.

சிரிப்பு யோகாவின் நன்மைகள்

“நம் நுரையீரலில் 6.8 லிட்டர்  அளவு அசுத்தக் காற்று உள்ளது. நாம் சிரிக்கும்போது  5 லிட்டருக்கும் மேல் அசுத்தக்காற்று வெளியேறி, அதே அளவுக்கு நல்ல காற்று உள்ளே செல்கிறது. இது உடலுக்கு உற்சாகத்தைத் தரும்.மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிரிப்பு யோகா நல்ல மருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செய்துவந்தால், அதிலிருந்து குணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு யோகா இது. சிறார்கள் விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்துவருகிறார்கள். வயதானவர்களும் சிரிப்போடு துள்ளிக் குதித்துக்கொண்டே இந்த யோகாவைச் செய்துவருகிறார்கள். முதியவர்களும் குழந்தைகளாக மாறிப் போகிறார்கள். மிகவும் நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைவருக்கும் அருமருந்தாக இந்த யோகா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

 • pulwama_kashmirthakuthal11

  காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

 • rafael_porvimanm1

  சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

 • fruitsvegpala1

  லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்