SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிட்சன் டிப்ஸ்

2017-07-11@ 11:48:02

* நுங்குகளை உரித்து அத்துடன் சர்க்கரை, பால், ஏலக்காய் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் போல் இருக்கும்.
- எஸ்.கெளரி, சிட்லபாக்கம்.

* வெண்ணெய் காய்ச்சும்போது எலுமிச்சை இலைகள் போட்டால் நெய் சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருக்கும்.
 - பா. குணா, வயலூர்.

* காய்கறிகளை பொரியல் செய்யும் பொழுது காய்களுடன் தேங்காய்ப் பூவிற்குப் பதிலாக நெற்பொரிகளைச் சுத்தம் செய்து தூவி இறக்கினால் புதிய சுவை தெரியும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

* கடலை மாவை சிறிது நெய் விட்டு பச்சைவாசனை போகும்வரை வறுத்து, பின் அத்துடன் சிறிது மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி கலந்து வைத்து உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் கறி வதக்கும்போது, மேலே இந்த மாவை தூவினால் ‘மொறு மொறு’ என்றிருக்கும்.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

* நூல்கோல் அல்லது டர்னிப்பை கேரட் துருவியில் துருவிக் கொள்ளுங்கள். இதை வெங்காயத்துக்கு பதிலாக பக்கோடா மாவுடன் கலந்து பக்கோடா செய்து பாருங்கள். சுவையும் மணமும் அசத்தும்.
  - ஜி.ஜெயலட்சுமி, சிட்லபாக்கம்.

* ஒரு கைப்பிடி அரிசியை வெறும் கடாயில் வறுத்து, அதனுடன் தேங்காய் திப்பியை, கல் உப்பு வைத்து அரைத்து விழுதை காரக் குழம்பிலே சேர்க்க அதன் ருசியே தனி. மணம் மனதை மயக்கும்.
 - சு.கெளரிபாய், பொன்னேரி.

* ரவா தோசை செய்வதற்கு அரிசி மாவு கைவசம் இல்லையா? கவலை ஏன்? தேவையான சாதத்தை மிக்சியில் இட்டு குழைய அடித்து மாவில் சேர்த்து வார்த்துப் பாருங்களேன். ருசிக்கு நான் கேரன்டி!
- ஜே.சி.ஜெரினாகாந்த், துரைப்பாக்கம்.

* கருணைக்கிழங்கை சமைக்கும்போது, கொய்யா இலைகளை போட்டு சமைத்து, பரிமாறும்போது எடுத்து விடலாம். இந்த இலைகள் அரிப்புத்தன்மையை இழுத்து விடுவதால், உண்ணும்போது நாக்கில் அரிப்பு ஏற்படாது.
மீன் வறுக்கும்போது அந்த மசாலாவில் தண்ணீருக்கு பதில் வினிகர் கலந்து செய்தால், வாடை குறைவதோடு மீன் வறுவலும் சுவையாக இருக்கும்.
- என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.

* பிரியாணி, பொங்கல், பொரியல், உப்புமா போன்றவற்றை சூடுபடுத்த இட்லித்தட்டில் ஈரத்துணியை விரித்து அதன் மேல் பரப்பி ஆவியில் ஐந்து நிமிடம் வைத்து எடுத்தால் உணவு சூடாவதுடன் உதிர் உதிராக முன்பை விட
ருசியாக இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* வாழைத்தண்டு கூட்டு செய்யும்போது அதனுடன் ஒரு பிடி முருங்கைக்கீரை தளிர் சேர்த்துக் கொண்டால் அதன் சுவையே தனி.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

* புழுங்கல் அரிசி 500 கிராம், உளுத்தம்பருப்பு 150 கிராம் தனித்தனியாக தண்ணீரில் இரவே ஊறவைத்து, கிரைண்டரில் தனித்தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாக உப்பு போட்டு கலந்து, காலையில் மண்பானையை கால் பகுதி தண்ணீர் ஊற்றி சூடானதும், கொட்டாங்குச்சியில் துணி வைத்து மாவை ஊற்றி, பானையை  வைக்கோல் பரப்பின் மீது வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். மண்பானை இட்லி மிருதுவாகவும், மணமாகவும், 2 நாட்கள் கெடாமலும் இருக்கும்.
- சண்முகத்தாய், சாத்தூர்.

* தயிர் வடைக்கு  ஊறவைக்கும் போது 5 அல்லது 6 முந்திரி பருப்புகளையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
- கே.ராகவி, திருவண்ணாமலை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்