SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகான கூடு

2017-06-16@ 15:24:23

நன்றி குங்குமம் தோழி

அசத்தும் வரவேற்பறைவீட்டிற்குள் நுழையும் அனைவரும் வந்தவுடன் அமர்வது வரவேற்பறையில்தான். வரும் அனைவரும் கண்டு ரசிக்கும் இடமும் நம் வீட்டு வரவேற்பறைதான். இதனை ‘ஹால்’, ‘சிட்டிங் ரூம்’ மற்றும் ‘டிராயிங் ரூம்’ என்றும் சொல்லலாம். எவ்வளவு சிறிய அறையாக இருந்தாலும் தன் வீட்டு வரவேற்பறையை ஓரளவு அழகாகவே அனைவரும் காட்ட விரும்புவோம்.அனைவரும் விரும்பும்படியான அறையாக வரவேற்பறையை அமைக்க வேண்டுமானால் அறையின் தரை, சுவர், திரைச்சீலைகள், விளக்குகள் என அனைத்தையும் சரியாக அமைக்க வேண்டும். மேலும் எல்லாவற்றிற்கும் பொதுவான நிறக் கலவையும் (color combination) அமைதல் முக்கியம்.

அதாவது சுவர் ‘ரோஸ்’ கலர் என்று எடுத்துக் கொண்டால் சோபா கவர் ரோஸ் அல்லது ரோஸ் கலந்த சிவப்பு காம்பினேஷனில் இருக்கலாம். திரைச்சீலைகளின் நிறம், டிசைன் இவையெல்லாம் அடிப்படையான நிறத்தின் கலவையில் அமைந்தால் பார்க்க கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கும். பொதுவாக ஃபர்னிச்சர்கள் பிரவுன் கலவையில் அமைந்திருக்கும்.அது ஒரு ‘பொது நிறம்’ என்று சொல்லலாம். கறுப்பு நிறத்தில் கூட ஃபர்னிச்சர்ஸ் கிடைக்கும். சுவரின் நிறங்கள் லைட் ரோஸ், லைட் கிரீம், லைட் பச்சை போன்றவற்றில் இருந்தால் அந்த நிறத்தில் தான் பர்னிச்சர்கள் போட வேண்டும் என்பதில்லை. அழகான பிரவுன் சோபா மேல் இருக்கும் குஷனோ, திண்டோ அந்த நிறத்திற்கு ஒத்துப் போகும்படி இருந்தால் கூட போதும்.

அதேபோல் திரைச்சீலையில் சுவரின் நிறக்கூட்டு காணப்பட்டால் கூட போதும். ஃபர்னிச்சர்கள் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் எல்லாராலும் வாங்க முடியாது. சிலர் வீடு கட்டும் முன்பே ஃபர்னிச்சர்கள் வைத்திருப்பர். அதையே புது வீடு கட்டியவுடன் பயன்படுத்துவர். அது புதிய இடத்திற்கு ஒத்துப் போகாவிடில் என்ன செய்வது? வசதியிருந்தால் வேறு ஃபர்னிச்சர் வாங்கி மாற்றிக் கொள்ளலாம்.அப்படி இல்லாத பட்சத்தில் புது கவர் போட்டு நல்ல ‘ரிச் லுக்’ தரலாம். மரத்தினாலான ஃபர்னிச்சராகயிருந்தால், ‘வார்னிஷ்’ போட்டு, ‘பெயின்ட்’ ெசய்து புதிய இடத்திற்கு ஏற்றபடி மாற்றலாம். இடத்திற்குத் தகுந்த ஃபர்னிச்சர்கள்தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். வசதி இருக்கிறது என்று பெரிய பெரிய ஃபர்னிச்சர்களை சிறிய இடத்தில் போட்டால் அதன் மதிப்பு தெரியாது.

சிறிய இடம் மேலும் சிறியது போல் தெரியும். சிறிய இடங்களுக்கு பெரிய கைப்பிடிகள் இல்லாத, இடத்தை அடைக்காதவாறு ஃபர்னிச்சர்கள் தேர்ந்தெடுக்கலாம். வெளிநாடுகளில் நிறைய அழுத்தமான நிற பெயின்டிங்கை ஹாலுக்கு பயன்படுத்துவார்கள். உதாரணமாக ஒரு பெரிய ஹாலின் ஒரு பக்கம் சிவப்பு நிறமும், டைனிங் பக்கம் பிரவுன் கூட இருக்கும்.அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு அது சரி தான். ஆனால் அதிக வெப்பப் பகுதிகளுக்கு வெளிர் நிறங்கள்தான் ஏற்றவையாக  இருக்கும். ஆனால் இப்பொழுது நம் நாட்டிலும் நிறைய அழுத்த நிறங்களை வீட்டின் வெளிப்பக்கத்தில் பார்க்க முடிகிறது. எப்படியானாலும் வரவேற்பறையின் அழகிற்கு நிறமும் முக்கிய அடிப்படையாகிறது.

வரவேற்பறை என்று எடுத்துக் கொண்டாலே, முதலில் நம் கண்களுக்குத் தோன்றுவது சிட்டிங் எனப்படும் உட்கார்ந்து பேசும் இடம். இடத்தின் வசதியைப் பொறுத்து சோபா செட் அல்லது திவான் அமைப்பு தரலாம். பெரிய வரவேற்பறையாக இருந்தால் நீள வடிவ சோபா போடலாம். ஓரளவு திட்டமான வரவேற்பறையாக இருந்தால் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைையப் பொறுத்து 2 + 2 அல்லது 3 + 2 சோபா இருக்கை அமைக்கலாம்.நம் வரவேற்பறையின் நீள, அகல, உயரங்களை குறித்துக் கொண்டு, பின் அங்கு வைக்கும் பொருட்களை கணக்கில் கொண்டு எவ்வளவு இடம் தேவைப்படுகிறது என பார்த்து, அதற்கேற்றவாறு நடந்து செல்ல இடைஞ்சல் இல்லாதவாறு அமைத்துக் கொள்ளலாம். ஹாலில் இருக்கும் ஃபர்னிச்சர்களை ஒன்றோடொன்று உரசாமல், அடி தேயாமல் இருக்கும் விதத்தில் போடுவது முக்கியம். சுவற்றுடன் ஒட்டி விடாமல், சிறிதளவு இடைவெளி விட்டுப் போடுவதும் அவசியம்.

ஹாலின் அமைப்பிற்கு ஏற்றவாறு சோபா நாற்காலிகளை போடலாம். காரணம் இருவர் உட்கார்ந்து பேசும்பொழுது ஒருவரையொருவர் முகம் பார்த்து சந்தோஷமாக உரையாடும் விதத்தில் இருக்க வேண்டும். சில சமயங்களில் பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், உரையாடலில் நம் கவனத்தைச் செலுத்த முடியாமல் போகும். அதாவது திரும்பித் திரும்பி பேச வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது உடல் வலி ஏற்படலாம். இதைத் தவிர்த்தல் வேண்டும்.

சோபா ெசட்டை இப்படியாக ஏற்பாடு செய்து விட்டோம். அடுத்து சென்டர் டேபிள் என்று சொல்லக்கூடிய நடுவில் போடும் டீப்பாயை ஓரளவு வசதியிருந்தால் சோபா செட்டுக்கு மேட்ச்சாக வாங்கலாம். இல்லாவிட்டால், தனியே வாங்கி நடுவில் போடலாம். நடுவில் போடும்பொழுது அது சோபாவைவிட உயரமாக இருக்கக் கூடாது.அதாவது சோபா இருக்கையிலிருந்து சுலபமாக பொருட்களை எடுக்கும்படி அமைக்கப்பட வேண்டும். இப்பொழுது கண்ணாடி டாப் கொண்டவை, மரத்தின் மேல் கண்ணாடி பொருத்தப்பட்டவை என நிறைய வகைகளில் கிடைக்கின்றன. அடித்தட்டுடன் இருந்தால் மிகவும் வசதி. தினசரி பேப்பர்கள், பத்திரிகைகள் போன்றவற்றை அடித்தட்டிலும், மேலே டேபிள்கிளாத் அதாவது சிறிய ஒரு மேசை விரிப்புப் போட்டு பூக்குடுவை வைக்கலாம்.

இப்பொழுது சிலர் டீப்பாவை ரிமோட் வைக்கவும் பயன்படுத்துகின்றனர். ஆனால் டீப்பாய் மீது ஒரு சிறிய அழகான ட்ரே வைத்து ரிமோட் வைத்துவிட்டால், நிரந்தரமாக அதன் இடம் அமைந்து விடும். அங்கே இங்கே வைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்க வேண்டாம். எந்தப் பொருளுக்கும் ஒரு இடம் என்று சரியாக அமைத்துவிட்டால், சிறியவர்களும் நம்மிடம் இருந்து கற்றுக் கொள்வார்கள். எல்லாம் ஒரு முறையாக நமக்கே தெரியாமல் நடக்க ஆரம்பிக்கும்.சோபாவின் இருபுறங்களிலும், போதிய இடமிருந்தால் ஸ்டாண்டுடன் அமைந்திருக்கும் பூங்கொத்துகள் வைக்கலாம். அந்தப் பூக்களில் கூட சுவர் நிறம், சோபா கவர் நிறம், தரை நிறம் ஆகிய அனைத்தின் கலவையும் ஒன்று போல இருந்தால் பார்க்க வண்ணமயமாகக் காட்சி தரும். வரவேற்பறையில் அடுத்து நாம் பார்ப்பது ஷோகேஸ். நிறைய பேர் இப்போது ஷோகேஸ் செட் செய்வதை விரும்புவதில்லை.

இது அவரவர்கள் தனி விருப்பம். தற்சமயம் டி.வியை சுவரில் மாட்டிவிடுவதால் அதற்கு தனி இடம் தேவைப்படுவதில்லை. ஷோகேஸில் வேண்டுமானாலும் இடம் ஒதுக்கி அமைத்துக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் பொருட்களை கருத்தில் கொண்டு, அதற்கு எவ்வளவு இடம் தேவைப்படுகிறதோ அதற்கேற்றாற் போல் ஷோகேஸ் அமைக்கலாம்.

கட்டும்பொழுதே சுவரில் இடம் விட்டு பின் மரவேலை செய்து உள்ளடக்கி ஷோகேஸ் அமைப்பது ஒரு வகை. மற்றொன்று ‘ஃப்ரீ ஸ்டாண்டிங்’ என்பது. நமக்கு வேண்டிய டிசைனில் தனியாக செய்து வைப்பது. சுவரை ஒட்டி, தரையிலிருந்து குறிப்பிட்ட உயரம் வரை பாக்ஸ் போன்று அமைத்து, (டிராயர்களுடன்) உள் அறைகள் பிரித்து அமைப்பதும் அழகாக இருக்கும்.கீழ் முழுவதும் ஸ்டோரேஜ் பொருட்கள் அடுக்கலாம். மேலே மைக்கா ஒட்டிய இடத்தில் அழகான ஷோகேஸ் அயிட்டங்களை அடுக்கலாம். இத்தகைய அமைப்பின் மேல் நடுவில் டி.வி பொருத்தினால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். உயரமான ஆடம்பரமாக செதுக்கிய மரங்கள், மீன் தொட்டி, ஃபெடஸ்ட்ரல் விளக்குகள் போன்றவற்றை மூலைகளில் வைக்கலாம். நல்ல லுக் கிடைக்கும்.

வரவேற்பறையில் கார்ப்பெட் போடுவது மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும். ஆனால் கார்ப்பெட்டைப் பொறுத்தவரை பராமரிப்பு மிக அவசியம். நம்மால் பராமரிப்பது கஷ்டம் என ேதான்றினால் தவிர்த்து விடலாம். நல்ல வெள்ளை பளிங்கு கற்கள் அல்லது கிரானைட் தரைகளுக்கு கார்ப்பெட் போடக்கூட தேவையில்லை.ஹாலில் இருக்கும் அத்தனைப் பொருட்களுக்கும் ஒத்துப்போகும் விதத்தில் ஜன்னல் அலங்காரம் செய்யலாம். அதாவது நல்ல டிசைனில் ஒரே மாதிரி திரைச்சீலைகள் போடலாம். நல்ல சுருக்கங்களுடன் தொங்க போட்டால் அழகாகயிருக்கும். சுவரில் நல்ல ஓவியங்கள், இயற்கைக்காட்சிகள் மாட்டலாம்.

லேமினேட் செய்யப்பட்ட ஓவியங்களையும் மாட்டலாம். இப்பொது தொங்கவிடக்கூடிய பலவிதமான கைவேலைப்பாடுகள் கொண்ட சித்திரங்கள் கிடைக்கின்றன. விலையும் மலிவு. ஓரளவு வசதியிருந்தால் தஞ்சாவூர் ஓவியங்கள் பெரிதாக ஒன்றிரண்டு அல்லது சிறியதாக ஒரு வரிசைப்படுத்தி மாட்டலாம்.அறையின் உயரத்தை பார்த்து அதற்கேற்ற அலங்கார விளக்குகள் போடலாம். அறையே உயரம் குறைவாக இருந்தால், அங்கு பெரிய சரவிளக்குகள் போட்டால் தலையில் இடிப்பது போன்று இருக்கும். அப்பொழுது மேல் தூக்கியவாறான விளக்குகள் போடலாம். அறை மிக உயரமாக இருந்தால், அழகிய கொத்தான சரவிளக்குகள் தொங்கினால் மிக அழகாக இருக்கும்.

ஒருக்கால் நம்மால் தனி சைட்போர்டு அமைக்க முடியாது. ஷோகேஸுக்கும் இடம் ஒதுக்க முடியாது என்று யோசித்தால் அதற்கும் வேறு வழி செய்யலாம். நம் இஷ்டம்தான்! சில இடங்களில் வரவேற்பறையுடன் டைனிங்கும் சேர்ந்திருக்கும். அதையும் கணக்கிடலாம். ‘L’ வடிவ அறையாக இருந்தால் டைனிங் தனியாக இருப்பது போன்று அமைக்கலாம்.ஒரே அறையாகயிருந்தால் இரண்டிற்கும் இடைவெளி விட்டு அமைக்கலாம். நிறைய இடம் இருந்தால் தீரைச்சீலை போட்டு வைக்கலாம். வேலைப்பாடுகள் அதிகம் கொண்ட நிறைய மரத்தட்டிகள் போன்று கிடைக்கின்றன. அதையும் அந்த இடத்தில் பயன்படுத்தலாம். அழகிய மணிக்கொத்துகள் போன்றும் சரம் சரமாக தொங்க விடலாம். அழகிய செடிகளை வைத்துக் கூட பிரித்துக் காட்டலாம்.

வரவேற்பறையை ஒட்டிய டைனிங் ஹாலாக இருந்தால் அநாவசியப் பொருட்களை வேறு இடத்தில் வைக்கலாம். இடத்தை மிச்சப்படுத்தும்படியான அழகிய சாப்பாட்டு மேசைகள், கண்ணாடி டாப்புடன் கிடைக்கின்றன. சுவர், ஜன்னல் இதரப் பொருட்களின் நிறக்கூட்டில், ஒரு மேசை விரிப்புப் போட்டு பயன்படுத்தலாம்.பயன்படுத்தாதபோது நாற்காலிகளை உள்ளடக்கிப் போட்டு இடத்தை பெரிதாகக் காட்டலாம். இடம் மிகச் சிறியதாக இருந்தால் சுவற்றில் அலமாரி பொருத்தி சாப்பிட பயன்படுத்தும் பொருட்களான தட்டுகள், கப்புகள், கேஸிரோல் ஃபிளாஸ்க் போன்றவற்றை அழகுற அடுக்கி வைக்கலாம். டைனிங் மேசையின் மேலே தொங்கும்படியான ஒரு லைட் போடலாம்.

மேலே தூக்கவும், வேண்டிய பொழுது இறக்கிக் கொள்ளும் வசதியும் கொண்ட விளக்கு ஏற்றவை. சாப்பாட்டுத் தட்டில் சிறிய தூசிகூட நமக்குத் தெரிந்துவிடும். பொதுவாக நாம் ஹோட்டல்களில் இது போன்ற விளக்குகளை காணலாம். நம் வீட்டிலும் அப்படிப் போட்டால், இரவு நேரங்களில், குடும்பத்துடன் அமர்ந்து உணவு அருந்தும் பொழுது குதூகலமாக இருக்கும். அத்துடன் ஜாலியாக பேசிக் கொண்டு, டி.வி. பார்த்துக் கொண்டு அழகான சூழலை அமைத்துவிட்டால் கண்டிப்பாக இரு பங்கு சாப்பிடுவோம்.டிராயிங் ரூம் பகுதிக்கும், டைனிங் ஹால் இடத்திற்கும் நடுவே நிற்கும்படி ஒரு அலமாரி ஷோகேஸ் வடிவில் அமைக்கலாம். அதிக கனமில்லாமல் ரொம்ப அகலமில்லாமல் மெல்லியதாக நடுவில் நிறுத்தி வைக்கலாம். இருபுறமும் கண்ணாடிக் கதவுகள் பொருத்திக் ெகாள்ளலாம் அல்லது கீழ்பாகம் மூடியும், மேலே 2, 3 தட்டுகள் நம் பொருட்களுக்கு ஏற்றவாறு கண்ணாடிக்கதவு வைத்தும் அமைக்கலாம்.

டிராயிங் ரூம் பக்கம் அலங்காரப் பொருட்களையும், டைனிங் ஹால் பக்கம் சைட் போர்டு பொருட்களையும் அடுக்கலாம். இதில் டூ -இன் - ஒன் வசதி கிடைத்து விடும். முடியாதது என்று எதுவுமில்லை. அதிகபட்சம் பல லட்சங்களிலிருந்து சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்தால்கூடபோதும். நாம் விரும்பும்படி அமைத்துக்கொள்ள முடியும். ஏனெனில் வீட்டில் இடம் மிச்சம் செய்வதும், பொருட்கள் சேமிக்க இடம் அமைத்தலும் மிக முக்கியம்.பொருட்கள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு, தரையில் இங்குமங்கும் சிதறிக் கிடக்காமல் இருந்தால் நல்லது. உற்சாகத்துடன் நம் வேலையை நாம் செய்ய முடியும்.  பி.வி.சி.யில் கூட அறைப்பிரிவு போன்று அலமாரி செய்து அமைக்கலாம். எப்படியும் ஓர் இடத்தின் அமைப்பிற்கு ஏற்றவாறுதான் அலமாரிகள் அமைக்க முடியும்.இருக்கும் இடத்தை ஓரளவு பாதிக்காதவாறு அமைப்பது முக்கியம். அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக அமைந்து விட்டால் பராமரிப்பது சுலபம். ‘அப்பா...  உங்க ஹால் எவ்வளவு அழகா இருக்கு!’ என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்! உடம்பு முடியாவிட்டால் கூட அதை பராமரிக்காமல் விடமாட்டோம். பாராட்டு வார்த்தைகள்தானே உற்சாக டானிக்.

(அலங்கரிப்போம்!)
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்

-சரஸ்வதி சீனிவாசன்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indiaBLADEREMONCAL

    இந்தியாவிலேயே முதல் முறையாக வாலிபரின் மூச்சு குழாயில் பிளேடு துண்டுகள் அகற்றம்: ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை

  • cave_1_southh

    நீண்ட மண்டை ஓடு மற்றும் மூன்று விரல்களை கொண்ட விசித்திர மம்மி : குகையில் கண்டுபிடிப்பு

  • 29-06-2017

    29-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்