SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூந்தலை பொலிவாக்க இயற்கை வழங்கும் இனிய ஷாம்பூகள்...!

2017-06-05@ 10:57:33

பாம்பு இல்லாத ஊரை கூட பார்த்துடலாம். ஆனால், தலைக்கு ஷாம்பூ போடாமல் இருப்பவர்களை பார்க்கவே முடியாது. ஆண், பெண் இருவருக்கும் குளியலில் முக்கிய பங்கு வகிப்பது ஷாம்பூ. ‘எந்த ஷாம்பூ போட்டீங்க... கண்டிஷனரா? சில்க் டைப்பா? டிரையா...’ இப்படி பலர் கேட்பதுண்டு. கடைகளில் வகை வகையான ஷாம்பூகள் விற்பனையாகின்றன. இவைகளுக்கு நிகராக இயற்கையும் சில ஷாம்பூகளை நமக்கு தந்திருக்கின்றன. அவற்றை பார்ப்போமா?

* வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பூலான்கிழங்கு, சந்தனச்சிறாய், பாசிப்பயறு என அத்தனையையும் சமமான அளவில் எடுத்து அரைத்து பொடி போல செய்யவும். இதுதான் நலுங்கு மாவு. இதனை தலை, உடம்பில் அழுத்தித் தேய்த்துக் குளித்தால், அடிக்கிற வெயிலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

* தண்ணீரில் சிகைக்காய்களை நன்றாக ஊற விட்டு, சிறிதளவு வெந்தயம் சேர்த்து நன்றாக அரைக்கவும். (சில மாவு மில்களிலும் அரைக்கின்றனர்). இதனை கிண்ணத்தில் எடுத்து நல்லெண்ணெய் குளியலின்போதோ அல்லது தனியாகவோ தலையில் தேய்த்து குளித்தால் முடி பொலிவு பெறும்.

* ஆவாரை இலை, பூக்கள் பறித்து அதை நன்றாக நைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். கண்ணெரிச்சல் நீங்கும். உடல் குளிர்ச்சியுடன் சர்க்கரை நோயில் ஏற்படும் அரிப்புக்கும் இது சிறந்தது. இதேபோல் உசில மரத்து இலைகள் பறித்து காயவைத்து பொடி செய்தும் குளிக்கலாம். எள்ளுச்செடியை பறித்து வந்து, அப்படியே அரைக்கும்போது பொங்கும் நுரையை தேய்த்துக் குளித்தால் தலையில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

* எண்ணெய் எடுத்து மிஞ்சிய இலுப்பைப் புண்ணாக்கை ‘தலைப்புண்ணாக்கு’ என அழைப்பதுண்டு. இதனை பொடி செய்து தலைக்கு பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்க தலைவலி, மண்டைக்கரப்பான், முடி உதிர்தல் என அனைத்தும் நீங்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • therthal_ujarath11

  குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

 • DougJonesvictory

  அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • mudhalvar_palanisami11

  16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

 • kolkatha_silaii1

  கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

 • heavysnow

  வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்