SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெயிலுக்கேற்ற குளியல்

2017-05-31@ 16:44:47

நன்றி குங்குமம் தோழி

மழையும் இல்லை... மரமும் இல்லை. வெயில் வெயில் வெயில் மட்டுமே என்ற நிலைமைதான் இப்போது. வாட்டும் இந்த  வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, வெயிலின் கொடுமையை தணித்துக்கொள்ள சில குளியல் வகைகளை நமக்காக  இங்கே சொல்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் இந்திரா தேவி...

* வெயில் நாட்களில் பொதுவாக இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. குழந்தைகளாக இருந்தால் வெதுவெதுப்பான  நீரை
பயன்படுத்தலாம்.

* வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உடம்பு மற்றும் தலைக்கு நல்லெண்ணெயை தேய்த்து ஊற வைத்துக் குளிக்க வேண்டும்.

* உடம்பு சூட்டை தணிக்க நன்னாரி வேர் அல்லது வெட்டி வேரை தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை  பயன்படுத்தி குளிக்கலாம்.

* சாண்டல்வுட் ஆயில், ரோஸ் வுட் ஆயில், லெமன் ட்ரீ ஆயில், அரோமா ஆயில் போன்றவற்றை இரண்டிலிருந்து மூன்று சொட்டு  குளிக்கும் தண்ணீரில் விட்டு குளிக்கலாம். இவை உடம்புக்குக் குளிர்ச்சி அளிக்கும். அரோமா ஆயில் பயன்படுத்தும் போது சூடு  மட்டுமின்றி மன அழுத்தமும் குறையும்.

* வெயிலில் அலைந்து களைப்பாகவும் உடம்பு முழுக்க வலியையும் உணர்பவர்கள் பெப்பர்மின்ட் ஆயிலை 2 சொட்டு குளிக்கும்  நீரில் விட்டுக் குளிக்கலாம்.

* முல்தானி மெட்டியை இரவு முழுவதும் மண்பானையில் ஊறவைத்து மறுநாள் அதை உடல் முழுதும் பூசி 45 நிமிடங்கள் வரை  ஊற வைத்திருந்து காய்ந்த பின் குளிக்கலாம்.

* நல்ல களிமண் கிடைக்கும் பட்சத்தில் அதையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதனை தலையில் இருந்து  கால் விரல்கள் வரை பூசி நிழலில் நின்று கொண்டு 45 நிமிடங்கள் காய வைத்து பின்னர் குளிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி  கிடைக்கும்.

* வெந்தயத்தை பேஸ்ட் போல அரைத்து தலையில் ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்தாலும் குளிர்ச்சி கிடைக்கும்.

* உடல் சூட்டை தணிக்க கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை அரைக்காமல் அப்படியே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக்  குளிக்கலாம். கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்தால் கொழகொழவென்று ஒரு பேஸ்ட்  கிடைக்கும். இதை ஷாம்பு போல பயன்படுத்தி தலைக்குக் குளிக்கலாம்

* ஒரு கைப்பிடி வேப்பிலையும் அரை ஸ்பூன் மஞ்சளும் கலந்த தண்ணீரில் குளிக்கும் போது சின்னம்மை, தட்டம்மை போன்ற  நோய்த்தொற்றுகளிலிருந்து தப்பிக்கலாம். வெயில் நேரத்தில் இந்த நீரை பயன்படுத்தி குளிக்கும் போது சொரியாஸிஸை கொஞ்சம்  கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வேப்பிலையும் மஞ்சளும் இயற்கையில் கிடைக்கும் கிருமி நாசினி.

* தலையில் நல்லெண்ணெய் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்த பின், அதன் மேல் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும்  அரை ஸ்பூன் மஞ்சளுடன் ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து அரைத்த கலவையை தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக்  குளித்தால் உடல் சூடு குறையும். பொதுவாக வெயில் நேரத்தில் அதிகம் வியர்க்கும். தலையில் ஏற்படும் வியர்வையினால்  உண்டாகும் பேன் மற்றும் பொடுகு தொல்லை இந்த குளியலால் குறையும். பேன் மற்றும் பொடுகு தொல்லை அதிகம் இருப்பவர்கள்  அந்த கலவையுடன் ஒன்று அல்லது இரண்டு மிளகு வைத்தும் அரைத்துப் பூசி குளிக்கலாம்.
 
* வெயில் காலத்தில் வெயில், தூசி போன்ற காரணங்களால் சிலருக்கு பருத்தொல்லை அதிகம் காணப்படும். முகத்தில் பரு  இருப்பவர்கள் வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து பருக்களின் மீது பூசி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால்  பருத் தொல்லை குறையும்.

* கற்றாழையின் சாற்றை தலை மற்றும் கை கால்களில் பூசி அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் உடல் குளிர்ச்சி  அடையும்.

* குழந்தைகளை டப் தண்ணீரில் விட்டு சிறிது நேரம் குளிப்பாட்டலாம். வெயிலுக்கு அவர்களுக்கு இதமாக இருக்கும். பெண்களும்  ஹிப் பாத் எனப்படும் டப் பாத் எடுக்கலாம். மாதவிடாய்க்கு முன்பு வரும் உடல் வலி இதனால் குறையும்.

* வியர்க்குரு இருக்கும் இடங்களில் குளித்த பின் சந்தனத்தைப் பூசிக் கொள்ள வேண்டும்.

* முடிந்தால் சம்மர் டிரிப்பாக அருவிகளுக்குச் சென்று நீராடி வரலாம்.

* எல்லாவற்றிற்கும் மேல் உடல் வறட்சியைத் தடுக்க, சூட்டை தணிக்க வெயில் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

-ஸ்ரீதேவி மோகன்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bihar_floods

    வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு : இதுவரை பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு

  • 10000EGGpmnklete

    10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் - பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம்

  • 17-08-2017

    17-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300KILKLES600missing

    மேற்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300 பேர் பலி : 600 பேர் மாயம்

  • 2-YREAROLDgirlRESIUED

    ஆந்திராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2-வயது குழந்தை: 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்