SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோல் பத்திரம்

2017-05-17@ 14:26:15

தகிக்கும் கோடை

எச்சரிக்கை செய்து டிப்ஸ் தருகிறார் சரும நிபுணர் எல்.ஆர்த்தி. ‘‘வெப்பம் அதிகமானால் தோல் வறண்டு போகும். நிறம் மாறும்.  முடிந்த வரை உச்சி வெயில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கோடையில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதனால் அதிக நுரை  தருகிற சோப், பாடி வாஷ் பயன்படுத்தினால் தோல் வறட்சி அதிகமாகும். எனவே கொஞ்சம் ஆயில் மாதிரியான ஃபேஸ் வாஷ்,  சோப்பு, பாடி வாஷ் பயன்படுத்தலாம்.

தோல் மாய்ஸ்சுரைஸர் க்ரீம், சன் ஸ்க்ரீன் லோஷன் ஆகியவற்றில் எது உங்கள் தோலுக்கு சரியாக இருக்குமோ அதை  மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துங்கள். இதெல்லாம் கொஞ்சம் தாராளமாக செலவு செய்பவர்களுக்கு. மற்றவர்கள் கை  க்ளவுஸ், மாஸ்க் போட்டுக்கொள்ளலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்ல ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள்.  இல்லையெனில் பொடுகு வரும். முடியின் வேர்க் கால்களில் வெடிப்பு ஏற்படும்.

பொதுவாக தலையில் பொடுகு இருந்தால் முகத்தில் பருக்கள் பூக்கும். வாரத்துக்கு ஒரு முறையாவது எண்ணெய் குளியல்  அவசியம். வேர்க்குருவுக்கு பவுடர் போடவே போடாதீர்கள். காற்றோட்டமான இடத்தில் நடமாடினாலே வேர்க்குரு தானாகவே  விலகிவிடும். இரண்டு வேளை குளியுங்கள். சென்ட், பாடி ஸ்பிரே ஆகியவற்றை, குளித்து வியர்வை இல்லாமல் இருக்கும்போது  அடிப்பதே சரி. முக்கியமான விஷயம், காஸ்மெட்டிக் தேர்வுகளில் கவனமாக இருங்கள்...’’ என்கிறார் ஆர்த்தி.

-ஷாலினி நியூட்டன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • therthal_ujarath11

  குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

 • DougJonesvictory

  அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • mudhalvar_palanisami11

  16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

 • kolkatha_silaii1

  கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

 • heavysnow

  வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்