SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியம் தரும் அலங்கார செடிகள்!

2017-05-12@ 14:49:31

நன்றி குங்குமம் டாக்டர்

ஹோம் டாக்டர்


தொட்டியில் நேற்றுவரை மூன்றே இலைகள் இருந்து, இன்று சின்னதாக ஒரு இலை துளிர்த்திருப்பதை பார்க்கும்போது நமக்குள் தோன்றும் மகிழ்ச்சியை உணர்த்த வார்த்தைகளே இல்லை. அந்த சந்தோஷம் நாள் முழுவதும் புத்துணர்வடையச் செய்யும்.மனதளவில் இதுபோல் உற்சாகத்தைத் தரும் தாவரங்கள், மருத்துவரீதியாகவும் பல உதவிகளைச் செய்கிறது செய்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.வீடு, அலுவலகம், மருத்துவமனை, பள்ளிகளில் உள் அறைத் தாவரங்களை(Indoor plants) வளர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று இங்கிலாந்தின் எக்ஸேட்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது. பள்ளிகளில் வளர்க்கப்படும் தாவரங்கள் குழந்தைகளின் கவனத்தை மேம்படுத்துவதாகவும், அலுவலகத்தின் உள்அறைத் தாவரங்கள் ஊழியர்களின் மகிழ்ச்சியையும், உற்பத்தித்திறனையும் அதிகரிக்கச்செய்வதாகவும்கண்டறிந்துள்ளனர்.

ஆபீஸ் மேஜையில் ஒரு போன்சாய் செடியை வைத்துப் பாருங்கள். உங்கள் வேலையின் தரத்திலும், துல்லியத்திலும் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்வீர்கள். உற்சாக உணர்வைப் பெறும் உங்களால் சக ஊழியர்களிடமும், அதிகாரிகளிடமும் இணக்கமான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளவும் உதவும். மன அமைதியான சூழலில் வேலை செய்யும் ஊழியர்களின் நினைவாற்றல் 20 சதவீதமும், படைப்பாற்றல் 45 சதவீதமும்அதிகரிப்பதால் உற்பத்தியும் பெருமளவில் உச்சத்தை அடைவதாகவும் ஆய்வினர் குறிப்பிடுகின்றனர்.

அலுவலகமாகட்டும், வீடாகட்டும் நாளின் 90 சதவீத நேரத்தை அறைக்குள்தான் செலவிடுகிறோம். வீட்டினுள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு, பெயின்ட் போன்று அனைத்து பொருட்களிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் காற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. இந்த நச்சுக்காற்று நுரையீரல் நோய்கள், இதயநோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் என எல்லாவிதமான நோய்களையும் வரவழைக்கிறது.ஒரு ஸ்பாஞ்ச் எப்படி தரையில் சிந்திய தண்ணீரை உறிஞ்சுமோ அப்படியே இந்த நச்சுக்கள் அறைக்குள் இருக்கும் தாவரமானது உறிஞ்சிவிடும். இயற்கை காற்று சுத்திகரிப்பானாக(Air purifier) இந்தத் தாவரங்கள் வேலை செய்து வீட்டினுள் சூழ்ந்திருக்கும் நச்சுக்களிலிருந்து நம்மை காக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.அதேபோல, போதிய காற்றோட்டமில்லாத இடங்களில் புழுக்கம் அதிகமாக இருக்கும். காற்றுப்புகாத அறைக்குள் வேலை செய்யும்போது ஊழியர்கள்எரிச்சலடைந்து வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சோர்வடைந்துவிடுவார்கள். அதுவே, அந்த அறைக்குள் ஒரு செடி இருந்தால் அந்தப் புழுக்கத்தை சமன் செய்துவிடும்.

தாவரங்கள் இதுபோல் மனரீதியான மகிழ்ச்சியை மட்டும் தருவதில்லை; கூடவே பாசத்தையும், கருணையையும் வளர்க்கிறது. தாவரங்களுக்கு நீர் விட்டு, உரம்போட்டு தங்கள் பிள்ளைகள்போல் அன்போடு வளர்ப்பவர்கள், மனிதர்களிடமும் கருணை மிகுந்தவர்களாக இருப்பதாக டெக்ஸாஸ் மாகாண மருத்துவ மற்றும் வேளாண் பல்கலைக்கழகஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இயற்கை விரும்பிகள் தாவரங்களை பேணுவதுபோலவே தங்கள் உறவுகளையும் பேணிக் காக்கிறார்களாம்.

தாவரங்களை வளர்ப்பதால் மன அழுத்தம், மனப்பதற்றம் குறைவதோடு மட்டுமல்லாமல் நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை, ஸ்திரத்தன்மையோடு கூடிய உணர்வுகளை வளர்ப்பதால் ஒரு பதற்றமில்லாத அமைதியானவாழ்க்கையை வாழ முடியும். வண்ண வண்ண மலர்களை பார்க்கும் நமக்கு உற்சாகம் மேலோங்குவதால் நினைவாற்றல் அதிகரிக்கிறதாம்.வெளிநாடுகளில் தோட்டக்கலை சிகிச்சை(Horticulture Therapy) என்ற சிகிச்சை முறையே ஒன்று வழக்கத்தில் இருக்கிறது. இதன் மூலம் பொறுமை, சுய கட்டுப்பாடு, தசை வலிமை நினைவாற்றல், சிந்திக்கும் திறன், பிரச்னைகளை சமாளிக்கும் பக்குவம், சுதந்திர உணர்வு, மொழித்திறன் மற்றும் சமூகமயமாக்கல் போன்ற அத்தனை நன்மைகளையும் பெற முடியும்.உள்அறைத் தாவரங்களை மருத்துவமனைகளில் வளர்க்கும்போது அதன் நறுமணம் நோயாளிகளின் வலிகளை மறக்கச் செய்கிறது. அதுமட்டுமல்ல மன அமைதியைப் பெறும் நேயாளிகள் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களிடத்தில்சிகிச்சைக்கு முழுமையான ஒத்துழைப்பை தருகிறார்களாம். இதனால்  விரைவிலேயே குணமடைவதால் மருத்துவமனைகளில் தங்கும் நாட்கள் குறைகிறது.

தனி வீடும், தோட்டமும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ‘இண்டோர் பிளான்ட்’ என அழைக்கப்படும் வீட்டுக்குள் வளர்க்கும் அலங்காரச்செடியே போதுமானது என்கிறார்கள். அறைக்குள் சின்ன தொட்டியில் வளர்க்கப்படும் சிறு செடி கூட 100 சதுரடி பரப்பளவுக்குசுத்தமான காற்றை பரவச் செய்கிறதாம்.செடிகள் வளர்க்க முடிவு செய்துவிட்டோம். என்னென்ன செடிகளை வளர்க்கலாம்? இதற்காக விலை அதிகமுள்ள அலங்காரத் தொட்டிகள், செடிகொடிகள் எல்லாம் வாங்கி வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தாலே வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் டப்பாக்கள், கர்ட்டன் பாக்ஸ்கள், டேபிளில் வைக்கும் பென் ஸ்டாண்டுகள், காபி மக்குகள், கண்ணாடி பாட்டில்கள் இவற்றிலேயே இடத்தை அடைக்காமல் செடிகளை வளர்க்கலாம்.

மூலிகைச் செடிகளான வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி, புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள் போன்றவற்றையும் மணி பிளான்ட், தக்காளி, வெண்டை போன்ற செடிகளையும் வளர்க்கலாம். இவற்றுக்கு அதிகமான தண்ணீரும் தேவைப்படாது. அவ்வப்போது ஸ்பிரேயரால் நீரை தெளித்தாலே போதுமானது. வாரம் ஒருமுறை சூரிய ஒளிபடுமாறு வீட்டின் வெளியிலோ, பால்கனி,மொட்டைமாடி வெயிலிலோவைக்கலாம். செடிகளை வளர்க்கும் வேலையில் குழந்தைகளையும் ஈடுபடுத்தினால் அவர்கள் மனமும் பூரிக்கும்!

- இந்துமதி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

 • road_safetyr

  சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்