SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாடி ராசாத்தி...

2017-05-12@ 14:18:49

நன்றி குங்குமம் தோழி

‘36 வயதினிலே’ ஜோதிகாவுக்கு முன்னோடி இந்த அனுபமா ஐஏஎஸ் தான். கேரளாவின் உணவு பாதுகாப்புத் துறை ஆணையராக இருக்கும் அனுபமா கேரள மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அதிகாரி. 2010ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் 4வது இடத்தைப் பிடித்தவர் அனுபமா. தனது தைரியத்தாலும், துணிச்சலான நடவடிக்கையாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் அனுபமா.உணவு கலப்படத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்த அனுபமா சிறந்த அரசு அதிகாரிகளுக்கு ஒரு முன்னுதாரணம். சட்ட விரோதமாக வர்த்தகம் செய்பவர்கள் மீது இவர் எடுத்த திடீர் சோதனைகளால் அதிர்ந்து போன வர்த்தகர்கள் இப்போது இவரது பேரைக் கேட்டாலே அலறுகின்றனர்.

கேரளாவில் பல மார்க்கெட்டுகளில் திடீர் சோதனை நடத்திய அனுபமா உணவுப்பொருட்கள் அசுத்தமான முறையில் தயாரிக்கப்படுவதோடு சில பொருட்களில் 300 சதவிகிதம் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்கப்பட்டு இருப்பதையும் கண்டறிந்தார். இந்த அளவு மிகவும் அதிகமானது. மனிதர்களுக்கு பயங்கரமான கேடு விளைவிக்கக்கூடியது.இதனால் தான் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இத்தகைய செயல் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார் அனுபமா. வேலையில் சேர்ந்த 15 மாதங்களில் கலப்படம் செய்யப்பட்ட சுமார் 6000 உணவு மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்பித்து வர்த்தகர்களுக்கு எதிராக 750 வழக்குகள் பதிந்து கலப்பட உணவுகளுக்கு முடிவுகட்டியவர். இவரது திடீர் சோதனைகளுக்கு பயந்து கலப்படத்தை தவிர்த்து வருகின்றனர் வணிகர்கள்.  

சில வருடங்களுக்கு முன்னர் 70 சதவிகிதம் காய்கறிகளை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்து வந்த கேரளா இன்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் 70 சதவிகிதம் காய்கறிகளை தானே உற்பத்தி செய்வதற்கு மூலக்காரணமும் இவர் தான். இதன் மூலம் கேரள மக்களுக்கு அதிகாரிகள் மீது நல்லதொரு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.விளைவிக்கப்படும் பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தைத் தவிர்க்க, காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றை மக்கள் தாங்களே விளைவிக்க வேண்டிய அவசியத்தை அதற்கான விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தினார். பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கை உரங்களை கொண்டு தோட்டம் அமைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இவர் நடத்திய இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களால் பல மக்கள் தங்கள் கொல்லைப் புறங்களிலும் மாடிகளிலும் தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவிக்க ஆரம்பித்தனர்.

இதன் மூலம் அவர்களுக்கு புதிய ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் கிடைத்ததோடு, பூச்சிக்கொல்லிகளின் தாக்கமற்ற காய்கறிகளும் அவர்களுக்கு கிடைத்தன. இதனால் காய்கறிகளுக்காக மற்ற மாநிலங்களை  சார்ந்திருக்க வேண்டிய தேவையும் குறைந்தது. லஞ்சம், ஊழல், கலப்படம் உச்சத்தில் இருக்கும் இந்த நாட்டில் இத்தகைய சிறந்த அதிகாரியாக இருப்பது ஆச்சரியம். அதிலும் அவர் ஒரு பெண் அதிகாரியாய் இருப்பது பெண் இனத்திற்கே பெருமை தான். இத்தகைய பெண்களை வாழ்த்தி வரவேற்க வேண்டியது நமது கடமை.

-ஸ்ரீதேவிமோகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்