SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையிலே கலைவண்ணம்

2017-05-11@ 14:54:19

நன்றி குங்குமம் தோழி

காகிதத்தில் அணிகலன்கள்


நாம் போடும் டிெரஸ்ஸுக்கு ஏற்றாற் போல மேட்சிங் நகைகள் அணிய இளம் பெண்கள் விரும்புவார்கள். அதிலும் கல்லூரி பயிலும் பெண்களுக்கு மேட்சிங் நகைகள் மேல் க்ரேஸ் அதிகம் இருக்கும். ஆனால் விலைவாசி விற்கும் விலையில் அனைத்து டிெரஸ்களுக்கும் மேட்சிங்காக நகைகள் வாங்குவதென்றால் கட்டுப்படியாகாது. நாமே வீட்டில் குறைந்த செலவில் நமக்கு விருப்பமான நகைகளை செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். எளிமையான முறையில் காகிதத்தில் அழகிய நகைகள் செய்ய முடியும். இந்த இதழில் காகிதத்தில் எப்படி வளையல் செய்வது என பார்க்கலாம்.

குவில்லிங் பேங்கிள்ஸ்

தேவையான பொருட்கள்
 

பேங்கிள் பேஸ்
குவில்லிங் பேப்பர் (2)
கத்திரிக்கோல்
வொயிட் கம்
குவில்லிங் டூல் (அ) குவில்லிங் நீடில்.
 
குறிப்பு...
குவில்லிங் பேப்பர் சிங்கிள் கலரிலோ, மல்டி கலரிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும். 2 எம்எம், 4 எம்எம் என்று பல அளவுகளிலும் கிடைக்கும். நமக்குத் தேவையான அளவுகளில் வாங்கிக்கொள்ளலாம். பேங்கிள் பேஸ்களும் பல அளவுகளில் கிடைக்கும். அடிப்படை அளவு 2X2. ஆனால்  பொதுவாக பெண்களுக்கு 2X4 அல்லது 2X6 அளவுகள் சரியாக இருக்கும்.

செய்முறை

1. குவில்லிங் பேப்பரை சரிபாதியாக இரண்டாக வெட்டிக்கொள்ளவும் (தனித்தனி ஸ்டிரிஃப் ஆக கிடைக்கும்). அளவு மாற்றி வெட்டினால் ரோல்களின் அளவு மாறும். அளவு மாறினால் வளையலில் ஒட்டும் போது சீரான வரிசையாக வராது.
 
2. குவில்லிங் நீடிலில் குவில்லிங் பேப்பரை சொருகி சுருட்டவும்.
 
3. சுருட்டி முடிக்கும் போது, முடியும் இடத்தில் கம் வைத்து ஒட்டி விடவும் (க்ளூ ஸ்டிக்கும் பயன்படுத்தலாம்).
 
4. கம் போட்டு ஒட்ட வைத்த இடத்தை 2 நிமிடம் அப்படியே பிடித்திருக்கவும். இது போல வளையலின் அளவுக்கேற்ப தேவையான ரோல்களை சுருட்டி வைத்துக்கொள்ள வேண்டும் (இரண்டு விதமான கலர் ரோல்களையும் தயார் செய்து கொள்ளவும்).

5. பேங்கிள் பேஸில் அந்த ரோல்களை கலர் மாற்றி மாற்றி ஒட்டவும். ஒட்டிய பிறகு காயவிடவும் (உங்கள் விருப்பப்படி ஒரே கலர் ரோல் வளையலும் செய்யலாம்.)

6. விருப்பப்பட்டால் அதன் மேல் மணிகள் ஒட்டலாம். ஆனால் குவில்லிங்கைப் பொறுத்தமட்டில் குவில்லிங் பேப்பரில் நகைகள் செய்யும் போது அதன் டாமினேஷன்தான் அதிகமாக இருக்க வேண்டும். மணி, கல் ஒட்ட வைத்தல் போன்ற விஷயங்களை தேவைப்பட்டால் மட்டும் செய்ய வேண்டும். இல்லையென்றால் குவில்லிங்கின் அழகு குறைந்து விடும் (குறைந்த விலையில் பியர்ல் ஸ்டிரிஃப் கிடைக்கிறது).

7. என்னதான் அழகாக இருந்தாலும் குவில்லிங் நகைகள் பேப்பர் என்பதால் தண்ணீர் அல்லது வியர்வை பட்டால் கிழிய அல்லது கலர் போக வாய்ப்புண்டு. அதனால் குவில்லிங் ரோல்கள் ஒட்டி காய்ந்த உடன் அதன் மேல் டிரான்ஸ்ஃபரன்ட் நெயில் பாலீஸை போட்டு காய விட வேண்டும். அதன் பிறகு அதன் மேல் தண்ணீர் பட்டால் பிரச்னை இல்லை.
 
ஒரு ஜோடி வளையல் செய்ய மொத்தமே ஐம்பது ரூபாய்தான் ஆகும். ஆனால் ஜோடி 150 ரூபாய் வரை கூட விற்பனை செய்யலாம். குவில்லிங்கைப் பொறுத்த வரை செய்முறை சுலபம் தான். ஆனால் ஒரு சில விஷயங்களை முக்கியமாகக் கையாள வேண்டும். அதாவது பொறுமை அவசியம்.

குவில்லிங் பேப்பரை ஒட்டிய பிறகு அது காயும் வரை பொறுமையாக இருக்கவேண்டும். அளவிலும் கவனம் தேவை. இது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் நமக்குத் தேவையான அழகான நகைகளை குறைந்த விலையில் சில மணித்துளிகளிலே நாமே செய்து போட்டு அழகுப் பார்க்கலாம்.

எழுத்து வடிவம்: ஸ்ரீதேவிமோகன்
படங்கள்: ஆர்.கோபால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kumbamelawork

  அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

 • karwasaathhus

  கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

 • statuevisitors

  உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

 • californiafire

  கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

 • franceworldleaders

  பிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாள்: உலகத்தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்