SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டு மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

2017-04-12@ 14:01:24

வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்து வருகிறது. பின்னால் வீடு கட்டுவதற்காகவும், சந்ததியினருக்கு முதலீடாகவும் வீட்டுமனை இப்போது பார்க்கப்படுகிறது. இன்றைக்கு வேலையின் பொருட்டு வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டியிருப்பதால் அங்கேயே வீட்டுமனைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். சிலர் நில மதிப்பு உயரும் சாத்தியம் உள்ள பகுதிகளை தேடி முதலீடு செய்கிறார்கள். இம்மாதிரி தெரியாத இடத்தில் வீட்டுமனை வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

நமது சொந்த ஊரில் மனை வாங்கும் போது அந்த நிலத்தில் உள்ள வில்லங்கம், வாரிசுகள் யாரும் இருக்கிறார்களா என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும். அல்லது குறைந்த பட்சம் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் என்றால் அந்தச் சம்பந்தப்பட்ட இடத்தை தொடர்ந்து பார்வையிட முடியும். தரகர்களை மட்டும் நம்பி வெளியூரில் வீட்டுமனை வாங்கும் போது பல விஷயங்களில் நாம் தான் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

நாம் வாங்கப் போகும் இடம் வீடு கட்டுவதற்கான நிலமாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவு பெற வேண்டும். காலி நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து விற்கும் தனியார் எஸ்டேட் நிறுவனத்தினர் உள்ளாட்சிகளுக்கான வழித்தடத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கவில்லை என்றால் அந்த இடத்தை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் முறையாக உள்ளாட்சிகளின் வழித்தடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உள்ளாட்சிகளுக்கு முறையாக இடம் ஒதுக்கும் போது தான் அந்த அமைப்பு நம் பகுதிக்கான சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும். வெளியூர்களில் இது மாதிரி விற்பனை செய்யப்படும் இடங்களில் பெரும்பாலானவை முறைப்படி உள்ளாட்சிகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கிறது. அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு செல்லும் போது தான் இது நமக்குத் தெரிய வரும்.

அது போல ஓருக்கு வெளியே நிலம் வாங்கும்போது அதில் ஓடைகள், வாய்க்கால் போன்ற மழைநீர்ப் பாதைகள் இருந்தனவா என்பதைக் குறித்து விசாரித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மழைநீர் வரும் பாதை என்றால் பிற்காலத்தில் பிரச்னைகள் வரக்கூடும். மழைக்காலத்தில் நீர்தேங்கும். முக்கியமான பிரச்னை இம்மாதிரியான நிலத்தில் நிலத்தடி மண் ஈரத்தன்மையுடன் இருக்கும். அதனால் கட்டடத்திற்கான அஸ்திவாரம் வலுவாக இடவேண்டியிருக்கும்.

மனையின் சாலை அளவு உள்ளாட்சி அமைப்பைப் பொறுத்து மாறுபடும். மாநகராட்சி என்றால் 24 அடி, நகராட்சி என்றால் 23 அடி இருக்க வேண்டும். அப்போது தான் மனைக்கு அப்ரூவல் கிடைக்கும். லே அவுட்டில் மனையைப் பார்க்கும் போது சாலை எத்தனை அடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து கொள்ள வேண்டும். வீட்டு கடன் வாங்கும் போது முதலில் கேட்கப்படுவது லே அவுட் அங்கீகாரம் தான்.

opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
buy naltrexone maltrexon ldn naltrexone
buy naltrexone maltrexon ldn naltrexone
order naltrexone saveapanda.com how naltrexone works

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்