SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி!

2017-04-07@ 15:15:05

நன்றி குங்குமம் டாக்டர்

ஆராய்ச்சி

யோகா பயிற்சிகளை முறையாக செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். யோகாவின் ஒரு பகுதியான மூச்சுப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கிறது என்பதை தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். Journal of neuroscience இதழில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி இருக்கிறது.மூச்சுப்பயிற்சி எந்த விதத்தில் நினைவுத்திறனை மேம்படுத்துகிறது என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வருணிடம் கேட்டோம்...

‘‘தற்போதைய டென்ஷனான வாழ்வியல் சூழலில் உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவது போன்ற பல காரணங்களால் உடலின் சுவாச செயல்பாடுகள் சரிவர நடைபெறுவதில்லை. இதனால் உடலுக்குத் தேவையான பிராணவாயுவில் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, மூளை உள்ளிட்ட அனைத்து உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படைகிறது.

சீரற்ற சுவாசம் இருக்கும்போது மனநிலையில் பதற்றம் ஏற்பட்டு, நமது அன்றாட செயல்களில் தெளிவும், நேர்த்தியும் இருப்பதில்லை. இந்த குழப்பமான சூழலில் நாம் செய்கிற செயல்கள் நமது மூளையில் சரியாக பதிவதும் இல்லை. கொஞ்சம் நுட்பமாகச் சொன்னால், நமது உடலில் இருக்கும் Autonomic Nervous System(ANS) என்ற நரம்பு மண்டலம் அதிக மன அழுத்தத்தால் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனாலேயே மூளையின் செயல்பாடுகள் குறைந்து நினைவாற்றல் மங்குகிறது.

ஆழ்ந்த சுவாசப் பயிற்சி மேற்கொள்ளும்போது தேவையான பிராணவாயு நிறைவாகக் கிடைக்கிறது. ANS நரம்பு மண்டலத்துடன் CNS என்கிற Central nervous system நரம்பு மண்டலமும் சீராக செயல்படுகிறது. உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது. மூச்சுப்பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தும் ரகசியம் இதுதான்!’’

- கௌதம்

revia medication partickcurlingclub.co.uk ldn colitis
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
naltrexone injections myjustliving.com stopping ldn
naltrexone injections click stopping ldn
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • thailandbirdsing

  தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

 • presimodhi_madhya123

  மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

 • bandh_inwest123

  மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

 • israel_newfasttrain

  இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

 • virataward_1234

  விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்