SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்சார சாக்கெட் பொருத்த கூடுதல் கவனம் அவசியம்

2017-03-25@ 11:36:54

வீடு கட்டும்போது ஒவ்வொரு விஷயத்திலும் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். பார்த்து பார்த்து கட்டிய வீடுகள் தலைமுறைகள் தாண்டியும் நீடிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. வீடு கட்டும்போது மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்று மின் இணைப்பு. இதில் நாம் கவனம் கூடுதல் செலுத்த வேண்டும். சுவிட்ச் போர்டு எங்கே வேண்டும், மின் ஒயர்களை எந்த வழியாக கொண்டு செல்வது, மின் இணைப்பு பிளக்குகளை எந்த இடங்களில் அமைப்பது என்பதை தீர்மானித்து கொள்ள வேண்டும். வீட்டின் மதிப்பை காட்டும் வகையிலான டிவி, கணினி, பிரிட்ஜ் ஆகியவற்றை எங்கெங்கு வைக்கப் போகிறோம் என்பதை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் மின் இணைப்பை அமைக்க வேண்டும்.

கட்டுமானம் துவக்கும்போதே இதுகுறித்து திட்டமிடவில்லை என்றால் நமக்கு தான் நஷ்டம். ஏனெனில் வீடு கட்டி முடித்தபின், மாற்றியமைக்க முயன்றால் கட்டிய சுவர்களை இடிக்க வேண்டும். அப்படி செய்தால் கட்டிடத்தின் வலிமையும் பாதிக்கும். வீட்டின் நேர்த்தியான அழகும் குறையும். குறிப்பாக,  அயன்பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு மேஜைக்கு பக்கத்தில் சுவிட்சுகளை அமைப்பது சுலபமாக இரு க்கும். அவ்வாறு அமைக்கப்படும் சுவிட்சுகள், பிளக் பாயின்ட் சாக்கெட்கள் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே தான், ஒவ்வொரு அறைக்கும் மின் இணைப்பு வசதியை எப்படி அமைக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். தரமான மின் வயர்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வசதியோடு பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

low dose ldn ldn benefits ldn online
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter
trexan medication ldn naltrexone naltrexone manufacturer
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
naltrexone injections click stopping ldn
naltrexone injections click stopping ldn

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Christmasstarlights

    கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் ஸ்டார் விளக்குகள் விற்பனை ஜோர்

  • RAJINI_FANS

    நடிகர் ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாள்: அவரை காண வந்த ரசிகர்களை அனுமதிக்காத போலீசார்!

  • seaplaneModi

    குஜராத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம்

  • Chennai_ThickFog

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்த கடும் பனி மூட்டம்: விமானங்கள் ரத்து, வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்