SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகிய வேலைப்பாடு அள்ளும் வருமானம்

2017-02-27@ 14:41:50

நன்றி குங்குமம் தோழி

சின்னச் சின்ன விஷயங்களால் கூட நம் வாழ்க்கையை அழகாக்கிக்கொள்ள முடியும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். ஆய கலைகள் அறுபத்து நான்குதான் கேள்விப்பட்டிருப்போம். பெயின்டிங், எம்ப்ராய்டரி என நூற்றுக்கும் மேற்பட்ட கைவேலைத்திறன்களில் வல்லவராக இருக்கிறார் அமுதா சுப்ரமணி. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு அழகான பொருட்களை எப்படிச் செய்யலாம் என்பது முதற்கொண்டு பல்வேறு விதமான திறன்களை பெண்களுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார். எம்பவர்மென்ட் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தும் அமுதாவின் அனுபவங்கள் நம்மோடு...

“அம்மா வீட்டில் கொலு வைக்கும்போது சின்ன வயதிலேயே நான் உதவ ஆரம்பிச்சேன். தேங்காய் நார், சோள நார், கலர் பேப்பர் என வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு பொம்மைகள் மற்றும் படி அலங்காரம் செய்வோம். அதனால 13 வயதிலேயே கைவேலைகள் செய்வது எனக்கு சுலபமானது. பெயின்டிங்கும் பண்ணுவேன். இதை எங்களுக்கு தெரிந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

பெயின்டிங் டிசைன் செய்த புடவைகளை எக்ஸ்போர்ட் செய்யும் வேலையில் இருந்த அவங்க என்னிடம் ‘நீ எங்க புடவைகளுக்கு பெயின்ட் பண்ணித்தர்ற முடியுமா’ன்னு கேட்டாங்க. அப்ப எனக்கு பதினெட்டு வயது இருக்கும். எப்படிச் செய்வது என ஐடியா கொடுத்தாங்க. அவங்க மெட்டீரியல் கொடுத்திடுவாங்க. நான் அவர்கள் விரும்பும் வகையில் அப்ஸ்ட்ராக்ட் டிசைன் செய்து கொடுக்கணும். ஒரு மீட்டருக்கு 20 ரூபாய் கொடுப்பாங்க.

வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஃபேஷன் ஷோக்கள் நடக்கும் சமயத்தில் இந்த வேலை வரும். ஒவ்வொரு நாட்டுக்கு என்று ஒரு சில விருப்பங்கள் உண்டு. அதன்படி செய்யணும். இப்ப உதாரணத்துக்கு அமெரிக்கர் பச்சை நிறத்தை விரும்ப மாட்டாங்கன்னா அதை அவ்வளவா பயன்படுத்தக் கூடாது. இப்படி பல நிபந்தனைகள் உண்டு. 2500 மீட்டர் துணிக்கு 20 நாள்ல பெயின்டிங் டிசைன் செஞ்சு கொடுப்பேன். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட வேலை செய்வேன். தூக்கத்தில் எழுப்பி செய்யச்சொன்னாலும் செய்வேன்.

முதல்ல ஒவ்வொரு டிசைனுக்கும் ஒரு மாடல் என்று ஒரு பத்து டிசைன்கள் அனுப்பி வைப்போம். ஓகே ஆகி வரும் சில மாடல்களை செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது முதலில் செய்தவர்கள்தான் செய்யணும். கை மாறினால் ஆர்டர் கேன்சலாகிடும். சரியாக செய்ததால் கிட்டதட்ட 15 வருடங்களுக்கு அந்த வேலையைச் செய்ய முடிந்தது. கஷ்டம்தான். ஆனால் அப்போது கொடுத்த உழைப்புதான் இன்னிக்கு நான் பல பேருக்குச் சொல்லித் தரும் அளவுக்கு வளர்ந்திருக்கேன்.

அதுமட்டுமில்ல ஒரு நாளைக்கு பத்து புடவைகள் என்னால் டிசைன் பண்ண முடியும். அனுபவம்தான் அதற்குக் காரணம். இப்ப நானே தனிப்பட்ட முறையில் விரும்பிக் கேட்கிறவர்களுக்கு சேலை பெயின்டிங் செய்து தரேன். என்னுடைய டிசைனை பார்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து வர்றவங்களும் செய்து தரச்சொல்லிக்கேட்பாங்க. அவங்க எந்த டிசைன் கேட்டாலும் ஓரிரு நாட்கள்ல முடிச்சுக்கொடுத்திருவேன்.

பட்டுப்புடவைகள், டசர் புடவைகள், ஷிபான் புடவைகள், ஃபேன்சி புடவைகள், டிஷ்யூ புடவைகள், க்ரேப் புடவைகள், பாலி காட்டன், சில்க் காட்டன், ரா சில்க் என என்ன மாதிரியான புடவைகளை அவர்கள் கொடுத்தாலும் அதில் பெயின்ட் பண்ணிக்கொடுப்பேன். மதுபானி, கலம்காரி, லேபாக்ஸி, வார்லி, கோண்டு, சிங்கிவி என எல்லா வகையான போல்க் ஆரட் டிசைன்களும் போடுவேன். அவர்கள் உடம்புவாகு, கலர் என பார்த்து பார்த்து செய்வதால் அழகாக அவர்களுக்கு பொருந்திப் போகும்.

த்ரீ டி பெயின்ட் (கோன் லைனர்) பண்ணுவேன். ப்ரஷ் வச்சு பண்ணா படிமனாக வரும். த்ரீ டி பெயின்ட் பண்ணா எம்ப்ராய்ட்ரி போட்ட மாதிரி அழகா வரும். அதனால் பிரின்ட் போட்ட மாதிரி அழகாக இருக்கு என்று நிறைய பேர் சொல்லுவார்கள். துணிகளில் பிரின்ட்டில் டிசைன் போட்டால் சில நாட்கள்ல போயிடும். துணிகள்ல பெயின்ட் பண்ணினால் காலாகாலத்துக்கும் அழியாது. அதனால நிறைய பேர் அதை விரும்புறாங்க.

இன்னிக்கு நான் பண்ணிக்கொடுத்த டிசைன் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரேசில் போன்ற பல வெளிநாடுகளுக்குப் போய் இருக்கு. புடவைகளுக்கு மட்டுமில்லாம டி சர்ட், ஜீன்ஸ், ஃப்ராக், திரைச்சீலைகள், டேபிள் ஸ்பெரட், ஸ்டோல் என பல வகைத் துணிகளுக்கும் பெயின்ட் பண்ணுவேன். இந்த வேலையைச் செய்ய வேகம் இருக்கணும். நேரம் குறித்த கவனம் இருக்கணும். துல்லியமான வேலைப்பாடு இருக்கணும். டிசைன் மாறக்கூடாது. அப்ப தான் வெளிநாட்டு ஆர்டர் எடுக்க முடியும்.

கை எம்ப்ராய்டரி, மிஷின் எம்ப்ராய்டரியும் தெரியும்” என்கிறார் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும் 28 ஆண்டுகளாக தமிழகத்தில் பெரும்பான்மையாக எல்லா ஊருக்கும் பயணித்து பல வகையான கைவேலைப்பாடுகளை பெண்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறார். பிடிலைட் நிறுவனத்தில் க்ரியேட்டிவ் க்ராப்ட் கோ ஆர்டினேட்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.

இவரது பயிற்சிப் பட்டறை அனுபவங்களைப் பற்றிச் சொல்லும் போது, “பிடிலைட் நிறுவனத்துடன் இணைந்து 20 வருஷத்துக்கும் மேலே பல ஒர்க் ஷாப்கள் நடத்தி இருக்கிறேன். காது கேளாத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 3 வயது முதல் 80 வயது வரை எனக்கு மாணவர்களாக இருக்கிறார்கள். ஹாண்ட் எம்ப்ராய்டரி, ஃபேப்ரிக் பெயின்ட், க்ளாஸ் பெயின்ட், பாட் பெயின்ட், மியூரல் பெயின்டிங், ஸ்டோன் ஒர்க், மிரர் ஒர்க், ராஜஸ்தானி பெயின்ட், தஞ்சாவூர் பெயின்ட், டை அண்டு டை, பேப்பர் கட்டிங் ஒர்க் (ஆரிகமி), வேஸ்ட் பொருள் மேனேஜ்மென்ட், ஜுட் பேக், பேப்பர் பேக், ஈகோ ப்ரெண்ட்லி பொருட்கள், கைவேலைப்பாடுள்ள பொருட்கள், ஸ்டென்சில் பிரின்டிங் போன்ற பல விஷயங்களை கற்றுத் தரேன்.

சாஃப்ட் ஸ்கில், லைஃப் ஸ்கில், பிஹேவியர் மேனேஜ் மென்டும் கற்றுத் தருகிறேன். அதுமட்டுமல்ல, Well out of waste, Healthy & Wealthy craft எனப்படும் வீணானப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் கைவேலைப்பாடுகளையும் கத்துத்தர்றேன். குழந்தைகளுக்கு கைவிரல்கள் மிருதுவாக இருக்கும். அதற்கேற்றாற் போல் அவர்களுக்கு சொல்லித்தருவேன். 3 முதல் 14 வயது வரை எளிமையான கைவேலைகளை கற்றுத்தருகிறேன். பொதுவாக நான் விஷத்தன்மை இல்லாத பொருட்களைத்தான் உபயோகப்படுத்துவேன்.

‘நீ ஏன் திறமையை வீணாக்குகிறாய், மற்றவர்களுக்கு இலவசமாக கற்றுத் தருவதை விட்டுவிட்டு பிஸினஸ் ஆரம்பிக்கலாமே’ என்று  பலர் எனக்கு அறிவுரை கூறி இருக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு மனதிருப்தி இருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி இருக்கிறேன். 14 ஆண்டுகளாக எல்லாப் பத்திரிகைகளுடனும் இணைந்து பயிற்சி தந்திருக்கிறேன்.

பள்ளிகள், கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களிலும் சொல்லிக்கொடுத்திருக்கேன். Value craft & Utility craft எல்லாம் சொல்லித்தருவேன். இப்ப உதாரணத்திற்கு ஸ்டென்சில் பிரின்டிங்கிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் மெட்டீரியலை யாராவது கொடுத்தால் அதை செய்து தரும் பெண்கள் ஒரு நாளுக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
 
சின்ன பிள்ளைங்க வீட்டில் பேப்பர், ரப்பர் என தேவையில்லாத பொருட்களை இறைத்துப்போடுவாங்க. அத அம்மாக்கள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கவேண்டும். ஆனால், வீணான பொருட்களை வைத்து, பென் ஸ்டாண்ட், க்ரீட்டிங் கார்டு, ராக்கிங் ஸ்டிக் என்பது போன்ற சில விஷயங்களை செய்யும் போது அவங்க வீட்டில் வீணாக உள்ள பொருட்களை தூக்கி எறியாமல் அவங்களே அதை உபயோகமா எதாவது செய்வாங்க. இப்படி எளிமையான பொருட்கள் மூலம் வாழ்க்கையை உற்சாகமாக வைத்துக்கொள்ளலாம் என்கிறார் அமுதா.
 
கைவேலைப்பாடுகள் சில - செய்முறை

1. ராக்கிங் சிக் (Rocking Chick)
 
தேவையான பொருட்கள்

 
திக் சார்ட் பேப்பர் - 1/2 ஷீட்,
மூவிங் ஐ பால்ஸ் - 2,
சிறிய சைஸ் பேப்பர் கப் - 1,
சிக் கட் அவுட் - 2,
வெள்ளைப் பசை,
கைப்பிடிக்கு தேவையான ஸ்ட்ரிப் - 1,
சிக் கலர் செய்ய ஸ்கெட்ச் பென்ஸ்.
 
செய்முறை

1. இரண்டு சிக் கட் அவுட் சார்ட் பேப்பரில் வரைந்து வெட்டி எடுக்கவும்.
2. படத்தில் காட்டியது போல் டிசைன் வரைந்து ஸ்கெட்ச் பென் கொண்டு கலர் செய்யவும்.
3. இரண்டு கட் அவுட்டிலும் ஒரு புறம் மட்டும் டிசைன் வரைந்து கலர் செய்த பின், ஒரு சிறிய சைஸ் பேப்பர் கப்பை இரண்டு கட் அவுட் மத்தியில் வைத்து ஒட்டவும்.
4. ஒரு பக்கெட் கைப்பிடி போல் பெரிய ஸ்ட்ரிப் (strip) எடுத்து ஒட்டினால் ராக்கிங் சிக் ரெடி. குழந்தைகளுக்கு எளிமையான ஒரு யூட்டிலிடி க்ராஃப்ட் தான் இந்த ராக்கிங் சிக். ஷார்ப்னர், ரப்பர் மற்றும் சிறிய பேப்பர் பின்ஸ், பேப்பர் க்ளிப்ஸ் போன்ற சிறிய ஸ்டேஷ்னரி பொருட்களை சிக்கின் உடல் பகுதியில் போட்டு வைக்கலாம்.

2. ஜூட்டீஸ் அலங்காரம் (அலங்கார செப்பல்ஸ்)
 
தேவையான பொருட்கள்

 
சோல் (Sole) - 1 ஜதை,
திக் சார்ட் பேப்பர் - 2 பெரிய ஸ்ட்ரிப்ஸ்,
சிறிய ஸ்ட்ரிப்ஸ் - 2,
பேப்பர் கட்டிங் ப்ளேட்,
3D கோன் லைனர்ஸ்,
பேஃன்ஸி கல்,
பேஃப்ரிக் கலர்ஸ்.

செய்முறை

1. இரண்டு பெரிய ஸ்ட்ரிப்ஸ் எடுத்து அதில் 3D கோன் லைனர் வைத்து கிளிட்டர் கலரால் மனதிற்கு பிடித்த டிசைன் போடவும்.
2. கல் ஒட்டியும் 3D கோன் லைனரால் அவுட் லைன் போடவும்.
3. வெறும் ஸ்கெட்ச் பென் கொண்டும் டிசைன் போடலாம். பின்னர் ஸோலின் நடுபகுதியில் இடம் மற்றும் வலது பாகத்தில் பேப்பர் ப்ளேட் கொண்டு சிறிய ஸ்லிட் போடவும்.
4. டிசைன் செய்த பேப்பர் ஸ்டிரிப்ஸ் காய்ந்தவுடன், துளையிட்ட ஸ்லிட்டினுள் நுழைக்கவும். இப்பொழுது செருப்பின் வார் என்று சொல்லக்கூடிய நடு பாகம் முடிந்து விட்டது.
5. கால் கட்டை விரல் பகுதியில் சோலில் சிறிய ஸ்லிட் பிளேடினால் போட்டு, சின்ன ஸ்டிரிப்ஸ் பேப்பர் நுழைக்கவும்.
6. இதே போல் ஒரு பர்மனன்ட் டிசைனர் செருப்பு (Chappal) செய்ய வேண்டுமானால், ஜூட் ஷீட் கொண்டும் மேற்கூறியதை போல டிசைன் செய்யலாம்.
7. இறுதியாக செருப்பு தைப்பவரிடம் கொடுத்து ஸோலின் அடிபாகத்தை ஒட்டி செருப்பை பூர்த்தி செய்யவும். உங்கள்
டிசைனர் ஜூட்டீஸ் ரெடி.
 
3. ரூபி ஸ்டோன் கோலம்

தேவையான பொருட்கள்

 
ஜூட் ஷீட் விருப்பமான கலர் (11 சதுர அடி) - 1,
3D கோன் லைனர் கிரிட்டர் அல்லது பிளைன் கலர் - 1,
ஸ்டோன் ரோஸ் கலர் - 10 கிராம்,
பேஃபரிக் (fabric) பசை.
 
செய்முறை


1. ஏதேனும் நேர் புள்ளி கோலம் ஒன்றை திக் கலர் ஹாண்ட்மேட் பேப்பரில் போடவும்.
2. முதலில் 3D கோன் லைனரால் கோடுகளை வரைந்து முடிக்கவும்.
3. லைனர் காய்ந்தவுடன் புள்ளியிருக்கும் இடங்களில் வெள்ளை அல்லது சிவப்பு கற்களை பேஃபரிக் பசை கொண்டு ஒட்டி விடவும். இது போல் எந்த துணியானாலும் புடவை, ேபார்டு போன்ற சர்பேஸானாலும் வரையலாம்.

- ஸ்ரீதேவிமோகன்
படங்கள்: ஆர்.கோபால்

buy naltrexone naltrexone classification what is ldn used for
lowdosenaltrexone org is naltrexone addictive naltrexone nausea
side effects of naltrexone 50 mg maltrexon what is naltrexone
when to take naltrexone click revia side effects
where to get naltrexone implant blog.bjorback.com stopping ldn
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
alcohol implant treatment charamin.jp naltrexone prescription

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்