SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எனது ஆறு என்னில் கரைந்திருக்கிறது

2017-01-27@ 14:30:50

நன்றி குங்குமம் தோழி

வைகைச் செல்வி

சூழலியல் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காலம் இது. பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் செயலில் இறங்குவோர் ஒரு சிலர்தான். அதில் முக்கியமானவர் கவிஞர் வைகைச் செல்வி. கவிஞர் என்பது இவரது முக்கிய அடையாளமாக இருந்தாலும் சூழலியல் குறித்து விழிப்புணர்வை மக்களிடையே பெரிதும் ஏற்படுத்தியவர் ஆனி எனும் வைகைச் செல்வி. தனது கவிதை வாழ்வு மற்றும் சுற்றுச்சூழலின் மீதான அக்கறை என அவரது மனம் திறந்த பேட்டி நமது தோழிகளுக்காக...உங்கள் இல்லற வாழ்க்கைக் குறித்து…இல்லற வாழ்க்கை என்பது நானும் என் கணவர் திரு எஸ்.வேணுகோபாலும்தான். எங்கள் திருமணம் காதல் திருமணம்.  என் கணவர் மிகுந்த தமிழ்ப் பற்றுடைய குடும்பப் பின்புலத்திலிருந்து வந்தபடியால், எனது இலக்கியப் பயணத்தில்  உறுதுணையாக இருப்பதால் எவ்விதப் பிரச்னையும் இல்லை. அவர் ஒரு கராத்தே மாஸ்டர். தற்சமயம்  பிசினஸ் புராசஸிங்  அவுட்சோர்சிங்  துறையில் ஈடுபட்டுள்ளார்.

ஆனி எப்போது வைகைச் செல்வி ஆனார்?
என் பெற்றோர் வைத்த பெயர் ஆனி ஜோஸ்பின் செல்வம் ஆகும். கவிதை எழுத ஆரம்பித்தபோது நான் ஒரு நல்ல தமிழ்ப் பெயரைப் புனைபெயராக வைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். அப்போது நாங்கள் மதுரையிலே வைகையாற்றங் கரையில் குடியிருந்தோம். எனவே, வைகைச் செல்வி என்று நானாக எனக்குப் பெயர் சூட்டிக் கொண்டேன்.  எனது ஊர் ஞாபகங்கள்  என்னில் உறைந்திருக்கிறது. எனது ஆறு  என்னில்  கரைந்திருக்கிறது.

ஏன் நீங்கள் எழுத ஆரம்பித்தீர்கள்? எது உங்கள் உந்து சக்தி?

மனத்தில் பொங்கிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை என்ற நிலை ஏற்படுகையில் எழுத  ஆரம்பித்தேன். அவ்வளவுதான். உந்து சக்தி என்று ஏதும் இல்லை. ஆனால், என் வாழ்வில் எல்லாவற்றிற்கும் ஒரு உந்து சக்தியாக விளங்கியவர் யாரெனில், மறைந்த என் தந்தை திரு ஞானமுத்து குருசாமி ஒருவரைத்தான் சொல்ல வேண்டும்.

புத்தகம் வெளிவந்த பின் அனுபவிக்கும் பரவசம் எப்படிப்பட்டது? உங்கள் முதல் புத்தக அனுபவம் எப்படி இருந்தது?
உண்மையிலேயே அது ஒரு பரவச அனுபவம்தான். எழுத்தாளர் சுஜாதா, வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான், திரு மாலன் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட வேளை... திரு சுகதேவ் போன்றவர்கள் வாழ்த்திய தருணம் அது. எனது முதல் கவிதைத் தொகுதியான ‘அம்மி’யில் என் அம்மா சாரதாம்பாளுக்கு எழுதப்பட்ட கவிதையே அம்மி.
 
வெள்ளைத் தேங்காயும்
கறுப்பு மிளகும்
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய்
தாள லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையில்
அழகருக்கும் வாயூறும்..

என்ற வரிகளை வலம்புரி ஜான் அவர்கள் சிலாகித்துப் பேசியது. இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.பாராட்டுகளும், விமர்சனங்களும். தி.க.சி, வல்லிக்கண்ணன் ஆகியோரின் கடிதங்களும் நட்பும் ‘அம்மி’யால் கிடைத்தவை.  எனது இந்த முதல் கவிதைத் தொகுதியே கேரளாவில் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடபுத்தகமாக வைக்கப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலான மகிழ்ச்சியாக அமைந்தது.

எழுதாத உங்களுடைய இயல்பான நாட்கள் எப்படி இருக்கும்?
நான் எப்போதுமே ஏதாவது எழுதிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன். தற்சமயம் இரண்டு மாதப் பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறேன். சுற்றுச்சூழலுக்காக ‘வானகமே வையகமே’ என்றும், நான் சார்ந்துள்ள இறை நம்பிக்கையின் அடிப்படையில் ‘அப்போஸ்தல நற்செய்திக் குரல்’ என்றும் இரு பத்திரிகைகள் நடத்தி வருவதால் நிறைய படிக்க வேண்டியுள்ளது. மற்றபடி இயல்பான நாட்கள் என்றோ அல்லது பொழுதுபோக்கிற்காக நாட்களைக் கழித்ததாகவோ ஞாபகம் இல்லை. ஏதாவது ஒரு வேலைப் பளுவில் சிக்கிக் கொண்டு இயல்பான நாட்களைத் தொலைத்து விட்டேனோ என்று உங்கள் கேள்வி என்னைச் சிந்திக்க வைக்கிறது. வருத்தமாகக்கூட இருக்கிறது.

வாசகர்களை சந்திப்பது உண்டா? கடிதம், தொலைபேசி வழியாக வாசகர்களிடம் கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வீர்களா?
நிறையவே. சென்ற ஆண்டு கூட செய்யாறிலிருந்து ஒரு பேராசிரியை எனது படைப்புகளைப் பற்றி கலந்துரையாட என்னைத் தேடி என் இல்லத்திற்கே வந்தார். நிறைய தொலைபேசி அழைப்புகள் வருவதுண்டு. கோவையில் இருந்து ஒரு முறை கருப்புசாமி என்ற ஆய்வு மாணவர் மிகுந்த வாஞ்சையோடு ரயில் நிலையத்திலிருந்து ரயில் வருவதற்குள் பேசிவிட வேண்டும் என்ற துடிப்பில் பேசிய ஞாபகம் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. என் படைப்புகளை எம். பில். மற்றும் முனைவர் பட்ட ஆய்விற்காக தேர்ந்தெடுப்பவர்கள் தொலைபேசியில் அடிக்கடி பேசுவதுண்டு. ஆய்வு மாணவர்களுக்கு உதவுவேன்.

சுற்றுச்சூழல் குறித்த கவிதை, கட்டுரைகள் எழுதுவது, தொகுப்பது தவிர வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகள் அதற்காக எடுக்கிறீர்கள்?

தற்சமயம் ‘வானகமே வையகமே’ என்ற மாத இதழை சுற்றுச் சூழலுக்காக நடத்திக் கொண்டு வருகிறேன். சுற்றுச்சூழல் கலைக்குழு வைத்திருக்கிறேன். அதன் மூலம் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். 66 கவிஞர்களைக் கொண்டு நீங்கள் தொகுத்த சூழலியல் பற்றிய கவிதைப் புத்தகத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

இப்புத்தகத்திற்கு அமோக வரவேற்பு என்று சொல்வதை விட, அநேகருக்கு இப்புத்தகம் வழிகாட்டும் நூலாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதற்குக் காரணம், கவிதை இலக்கியத்தையும் தாண்டி, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட ஆய்வு நோக்கிலும் இந்நூல் பார்க்கப்படுவதே. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இப்புத்தகம் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டது. பல கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பல ஆய்வு மாணவர்களுக்கு பயன்படுகிறது.

சூழலியல் சீர்கேட்டுக்கான அடிப்படை என்று எதனைப் பார்க்கிறீர்கள்? மனிதனின் உச்சபட்ச நுகர்வு மட்டும்தான் சூழலியலை சீர்குலைத்ததா?
நிச்சயமாக. ஒரு காக்காவோ குருவியோ வந்தா இந்த பூமியைக் கெடுத்தது? மனிதனின் பேராசையே இந்த சுற்றுச்சூழல் சீர் கேட்டிற்குக் காரணம். அதனால்தான், 2015ம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினச் செய்தி கூட ‘7 பில்லியன் கனவுகள். ஒரு பூமி. கவனத்துடன் நுகருங்கள்’ என்பதாக இருந்தது. நமது பாரம்பரியமும் கலாசாரக் கூறுகளும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இயைந்தவை. ஆனால், இன்றைய நிலைமை அப்படியல்ல. தூக்கியெறியும் கலாசாரமாக மாறிவிட்டது. மீண்டும் ஒரு கலாசார மாற்றம் வந்தால் ஒழிய, நுகர்வுக் கலாசாரம் மாறினால் ஒழிய சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பது கடினம்.

நமது முந்தைய தலைமுறை நமக்கென நல்லதொரு உலகைக் கொடுத்து விட்டுப் போனது. நாமோ நமது அடுத்த தலைமுறைக்கு எப்படிப்பட்ட உலகத்தைக் கொடுக்கப்போகிறோம்?
நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது. முழுவதுமாக சீர்கெட்டுப் போவதற்குள், குறைந்தபட்சம் இப்போதுள்ள நிலையிலாவது நாம் இந்த பூமியை அடுத்த தலைமுறைக்கு விட்டுப் போவோமா என்பதே சந்தேகம்தான். நாம் விளிம்பில் நிற்கிறோம். எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும் எனச் சொல்லுகிறோம். ஆனால், சுற்றுச்சூழலைப் பொறுத்தமட்டில் நமது பாரம்பரிய கலாசாரத்திற்குப் பின்னோக்கிச் சென்றால் ஓரளவிற்குத் தவிர்க்கலாம்.

பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு என்ற வழிகாட்டி நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
பணி புரிகின்ற பெண் ஒரு கலெக்டராக இருந்தாலும் சரி அல்லது துப்புரவு ஊழியராக இருந்தாலும் சரி, அவளுக்கு பாலியல்ரீதியான தொல்லைகள் வருகின்றன. பணிச் சூழலில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்பதை விட பெண்கள் அதனை எப்படி எதிர்கொள்வது,  சட்டரீதியாக தங்களைப் பாதுகாப்பது  எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் அவ்வளவாக இல்லை.

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வழிகாட்டி நூல் எழுதினேன். சமீபத்தில் எனது முனைவர் பட்டத்திற்கான வைவாவின் போது ஒரு நைஜீரியா மாணவர், கேள்வி நேரத்தின் போது, என்னிடம் ‘நீங்கள் வேலை பார்த்தபோது உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்ததா? அதனை எப்படி சமாளித்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். ‘பாலியல் தொல்லைகளை முளையிலே எப்படிக் கிள்ளி எறியலாம். எப்படி சமாளித்து அச்சூழலில் இருந்து வெளியேறுவது என்ற துணிவை பெண்களுக்கு ஊட்டுவதே’ இப்புத்தகத்தின் நோக்கமாக இருந்தது.

உங்களின் முனைவர் பட்ட ஆய்வு என்ன?
‘பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மேலாண்மையும்’  என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். கள ஆய்விற்காக  ஜவுளி ஆலை மற்றும் தீப்பெட்டித் தொழிலினை எடுத்திருந்தேன். பல்வேறு தரப்பட்ட பெண்களை, பல்வேறு தளங்களில் பணிபுரியும் பெண் அலுவலர்களைச் சந்திக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றி  என் ஆய்வில் ஒரு முக்கியப் பொருளாக எடுக்காவிட்டாலும், என் களப்பணியில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் அநேகம் பெண்கள் இப்படிப்பட்ட தொல்லைகளை வெளியில் சொல்வதே இல்லை என்பதுதான்.

சட்ட ரீதியாக பெண்களுக்கு சொத்துரிமை இருக்கிறது என்பது தெரிந்த பின்னும் கூட உணர்வுரீதியான மிரட்டலுக்கு உட்பட்டு சொத்துகளை இழக்கும் பெரும்பாலான பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?பெண்கள் தங்களின் பொது அறிவை இப்படிப்பட்ட காரியங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும். சட்டம் இருக்கிறது. நீதி கிடைக்க தாமதமானாலும் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நிலை எடுக்க வேண்டும்.

பெண்கள் முன்னேறிவிட்டதான தோற்றம் இருந்தாலும், இன்னமும் பெண்கள் தங்களுடைய சுயத்தை இழந்துதானே நிற்கிறார்கள்?

இப்போதைய காலகட்டத்தில் அப்படிச் சொல்ல இயலாது. ஏனெனில் பெண்கள் வேலைக்கு வந்த பிறகு, பலருடன் பழகும் அனுபவம் கிடைக்கப் பெற்று அந்த அனுபவத்தின் மூலம் நிறையவே கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்டவர்கள் அதிக சதவிகிதம் இல்லைதான். அதற்குக் காரணம். காலங்காலமாக ஆண்களைச் சார்ந்து பெண்கள் வாழ்வதுதான். ஆணுக்கும் பெண்ணுக்கும்  நட்பு ரீதியாக, உறவு ரீதியாக ஒருவரையொருவர் பரஸ்பரம் மதிக்கும் நிலை ஏற்படுகையில்தான் பெண்கள் தங்கள் சுயத்தை இழக்கத் தேவையில்லாத ஒரு நிலை உருவாகும்.

பெண் விடுதலை என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
ஆண்களைப் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இடமே  இல்லை. சர்வம் சுதந்திரம்தான் அவர்களுக்கு. ஓர் அடிமை நிலையிலிருந்து வெளிவருவதே விடுதலை என்ற சாதாரண பொருளில் எடுத்துக்கொண்டோமானால் கூட , எங்காவது ஒரு சூழலில் பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் சூழல் எப்போது மாறுமோ... அப்போதுதான் விடுதலையும் வரும். பெண்ணும் தன்னை எப்போது அப்படிப்பட்ட சூழலில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருக்கிறாளோ அப்போதுதான் விடுதலை வரும்.

பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியான வன்முறைகளை களைய இந்த சமூகம் என்ன செய்ய வேண்டும்?
பெண்களுக்கு எதிராக ஆண்களின் சீண்டலும் பாலியல் வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதைக் காண்கையில் ‘என்ன ஆகி விட்டது இந்த ஆண்களுக்கு?’ என்று மிகவும் ஆத்திரமாக உள்ளது.  பெண்களுக்கு எதிராக குற்றம் நடக்கலாம் என்ற சந்தேகமான சூழல் இருந்தாலே தட்டிக் கேட்க சமூகம் முன் வர வேண்டும். இதில் தவறில்லை. ஆனால், இந்த சமுதாய அக்கறை நமக்கு மிகவும் குறைந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். பேருந்து அல்லது பொது இடங்களில், பணியிடங்களில் பெண்களுக்கு தொல்லை தந்தால் நாலு பேர் தட்டிக்கேட்பார்கள். மொத்துவார்கள் என்ற பயம் இருந்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.

படைப்புகளில்  உடலரசியலுக்கு எதிரானவர் நீங்கள்? ஏன்?  
உடலரசியல் என்பது பற்றியெல்லாம் நான் பேசியதில்லை. ஆபாசமாக எழுதுவதற்கு எதிரானவள் நான். பாலியல் உணர்வுகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எழுதப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இப்படிப்பட்ட விஷயங்களை ஒரு மருத்துவர்  விவரிப்பதற்கும், ஓர் ஆபாச புத்தகம் விவரிப்பதற்கும் ஓர் இலக்கியவாதி தன் எழுத்தில் வடிப்பதற்கும், தனித்தனியே வித்தியாசமான சொல்லாட்சி இருக்கிறது.

பாலியல் சம்பந்தப்பட்ட எழுத்துகளை எழுத வேண்டிய விதத்தில் எழுதாவிட்டால், அது பெண்களை உயர்வுபடுத்தாது. மாற்றாக சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தக் கூடிய ஆபத்தினை ஏற்படுத்தும். கத்திமேல் நடப்பது போன்றதுதான் இது.  ஏற்கெனவே பெண் என்பவள் உடல்ரீதியாகப் பார்க்கப்படும் வேளையில், இப்படிப்பட்ட எழுத்துகள் ஒருக்காலும் பெண்களை மேன்மைப்படுத்த இயலாது.  பெண்ணை ஒரு நுகர்வுப் பொருளாக்கும் காரியத்தை நமது எழுத்துகளுமா செய்ய வேண்டும்? இதுதான் எனது ஆதங்கம்.

தெற்காசிய சுனாமி பற்றிய ஆய்வின் போது உங்கள் மனதை பாதித்த சம்பவம் ஏதாவது?
சுனாமி எனும் கோரத் தாண்டவம் நடைபெற்ற ஓரிரு மாதங்களில் நான் அலுவல்ரீதியாக நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்குச் செல்ல நேரிட்டது.  உயிரைவிட்ட பெண்களின் காரணங்களில் சில - சேலை சிக்கிக் கொண்டது, உடையை இழந்த பெண்கள், தங்களின் மானத்தைப் பெரிதாக எண்ணி, ஆண்களால் காப்பாற்றப்பட விரும்பவில்லை.

உயிரோடு இருப்பவர்களுக்கோ வேறு பிரச்னைகள். தங்குமிடங்களில் மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் பிரச்னைகள், இளம் விதவைகளுக்கான சிக்கல்கள் - இப்படி பெண்கள் என்பதால் மட்டுமே அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் சொல்லவொண்ணாத துயரத்தை வரவழைத்தன. அவர்களை ஆற்றுப்படுத்த சென்ற எங்களுக்கு அந்தப் பெண்களின் பிரச்னைகளைக் கேட்டுக் கேட்டு அவற்றிலிருந்து மீண்டு வர வெகுநாட்களாகின எனக்கு.

இலக்கியப் பணி எப்படி உள்ளது..?

முனைவர் பட்டத்திற்காக பெரும்பாடு படவேண்டியதாகி விட்டது. அதை வைத்தே நான் ஒரு கதை எழுதலாம். எனவே சில காலம் இலக்கியம் படைக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். எழுத்துலகில் என் ஆசான்களான திரு மாலன் மற்றும் முனைவர் திருப்பூர் கிருஷ்ணனும் அவ்வப்போது தொலைபேசியில் என்னைச் செல்லமாகத் திட்டுவதுண்டு. எனவே இனி நின்று போன சில படைப்புகளை தொடரும் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.

எனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிடவேண்டும். நானும் என் தோழி ராஜேஸ்வரியும் சேர்ந்து பெண்களின் படைப்பு சம்பந்தமான ஒரு புத்தகம் எழுதும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். எப்படியும் ஒரு நாவல் எழுதவேண்டும். மதுரையிலிருந்து சென்னை வரை எனது அனுபவங்களும் கற்பனையும் கலந்ததாக இருக்கும் அந்த நாவல். இதற்கு உந்து சக்தி தேவக்கோட்டை திரு வா. மூர்த்தி அவர்கள்.
 
- ஸ்ரீதேவி மோகன்

prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
naltrexone for alcohol cravings link naltrexone pain management
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone where to buy link naltrexone drug interactions
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
buy naltrexone maltrexon ldn naltrexone
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names
order naltrexone saveapanda.com how naltrexone works
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்