SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சல்மாவின் ஜன்னல்

2016-12-09@ 15:13:55

நன்றி குங்குமம் தோழி

ஆவணப்படம்


‘சல்மா’ ஆவணப்படம் சேனல் 4ன் தயாரிப்பில் இயக்குநர் கிம்லாங்கினாடோ இயக்கத்தில் கோடம்பாக்கம் எம்.எம்.ஸ்டூடியோவில் திரையிடப்பட்டது. இதுவரை 14 சர்வதேச விருதுகளை வென்று 120 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா, கோழிக்கோடு, திருச்சூர், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில், பெண்கள் மத்தியில் குறிப்பாக கல்லூரிப் பெண்கள் மத்தியில் திரையிடப்பட்டு அது குறித்த விவாதமும் நடைபெற்றுள்ளது.

ஒரு பெண், அதுவும் கட்டுப்பாடுகள் அதிகம் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், கிராமச் சூழலில் வளர்ந்து 32 ஆண்டுகள் உலகத்தை ஜன்னல் வழியாக மட்டுமே வாசித்துவந்தார். தன் வலியை, தன் இருப்பை தனது எழுத்து மூலமாக உலகுக்கு உணர்த்தி இன்று கவிஞராய், எழுத்தாளராய், அரசியல் செயல்பாட்டாளராய் நாம் பார்த்து பிரமிக்கும் ஒரு ஆளுமையாய் தன்னையே கருவாக்கி உருவாக்கி உயர்ந்து நிற்கிறார் சல்மா.

‘சல்மா’ ஆவணப்படம் குறித்தும் அவருடைய விஸ்வரூப வெளிப்பாடு குறித்தும் அறிய குங்குமம் தோழி இதழுக்காக சல்மாவை சந்தித்தபோது, “திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி எனது சொந்த ஊர். என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ராசாத்தி ரோக்காயா. அமெரிக்க எழுத்தாளர் கலீல் ஜிப்ரானின் எழுத்துக்களின் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. அவரின் படைப்பான ‘Broken Wings’ (முறிந்த சிறகுகள்) கதையின் நாயகி பாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமே என் பெயரானது” என ‘சல்மா’ என்கிற தன் புனைப் பெயருக்கான விளக்கத்துடன் உரையாடலைத் துவங்கினார்.

`சல்மா’ ஆவணப்படம் எடுத்து இரண்டாண்டுகள் கடந்த நிலையில் மிகவும் தாமதமாக தமிழகத்தில் திரையிடக் காரணம்?
மற்ற இடங்களில் இந்த ஆவணப்படத்தை வெளியிடும்போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், தமிழகத்தில் படத்தை வெளியிட எனக்கு ஒரு தயக்கம் தொடர்ந்து இருந்தது. ஏனெனில் இந்தக் குறும்படத்தை இங்குள்ளவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமே? மதம் சார்ந்த விஷயமாகவோ அல்லது வேறொரு அர்த்தத்திலோ இதை புரிந்துகொள்ளக் கூடாது என்ற ஓர் எண்ண ஓட்டம் எனக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதை பயம் என்று கூடச் சொல்லலாம். ஆனால், திரையிடப்பட்ட பிறகு அந்த எண்ணம் முற்றிலுமாக நீங்கிவிட்டது. ஏனென்றால் அனைவர் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததை என்னால் உணர முடிந்தது. இனி தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் இதைத் திரையிடுவேன்.

உங்களின் ஆவணப்படத்தில் ஜன்னல் பல இடங்களில் வருகிறது. ஆவணப்படத்தின் சுவரொட்டிகளிலும் உங்கள் முகம் ஜன்னலுக்குப் பின்னால் வருகிறது. அது பற்றி?
ஜன்னலை நான் பெரும்பாலான பெண்களுக்கான குறியீடாகத்தான் பார்க்கிறேன். ஜன்னல் வழியாகத்தான் ஒரு சராசரிப் பெண் வெளி உலகோடு தன்னை தொடர்புப்படுத்திக்கொள்கிறாள். என் வாழ்விலும் அதுதான் நடந்தது. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் ஓர் ஆண் வாசலில் போய் நிற்க முடியும். ஆனால், பெண்ணுக்கு அது சாத்தியப்படாது என்பது  அடக்குமுறையின் இன்னொரு வடிவம்.

அதிகபட்சம் ஜன்னல் வழியாகத்தான் நிகழ்வுகளை பெண் கவனிக்கிறாள். நான் சொல்வதை சரியாகப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். பொது வாழ்க்கையைத் தாண்டி குடும்ப நிகழ்வுகளிலேயே ஆண்கள்தானே முன்நிறுத்தப்படுகிறார்கள்? பெண்கள் ஆண்களுக்கு பின்னால்தானே நிற்க முடிகிறது? எனவேதான் ஜன்னலை பெண் அடக்குமுறையின் ஒரு குறியீடாக முன்னிலைப்படுத்துகிறேன்.

பெண் பருவம் எய்தியதும் படிப்பு தடைபடுவதையும், இளம் வயதிலேயே திருமணம் நடைபெறுவதையும் ஆவணப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. இந்த நிலை இன்னும் தொடர்கிறதா?
நிச்சயமாக. எல்லா மதங்களும் எல்லா சாதிகளும் பெண்ணை அடிமைப்படுத்துகின்றது. கல்வி மற்றும் திருமணத்தில் இந்த நிலை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நகர்ப்புறங்களை வைத்து நாம் எதையும் கணித்துவிடக் கூடாது. நிறைய கிராமங்களில் பெண்களை படிக்க வைத்தால் யாரையாவது காதலித்துவிடுவாள், வீட்டைவிட்டு ஓடிவிடுவாள் என்றெல்லாம் பயந்து பெண் பிள்ளைகள் பருவம் அடைந்ததும் படிப்பை நிறுத்திவிடுகின்றனர்.  

இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். சமீபத்தில் நான் பங்கேற்ற ஒரு சில திருமணங்களிலே மணப்பெண் சிறுமி என அந்த நேரத்தில் தெரியவந்தது. ஆனால், தடுக்க முடியாத சூழலே யதார்த்த நிலை. நம்மால் தடுக்க முடியாத இடங்களில் பல நிகழ்வுகள் நடக்கின்றன. கல்வி என்பது சிந்திக்கும் விஷயமாக இங்கில்லை. குடும்ப அமைப்புகளில் இருந்து மாற்றம் வேண்டும். மேலும் பெண்கள் மீதான கட்டுப்பாடு என்பது சமூகம் சார்ந்த விஷயமாகவே பார்க்க வேண்டும். சமூகக்
கட்டமைப்பு அப்படி உள்ளது.

வெளியில் தெரியாத சல்மாவைப் பற்றி தங்கள் ஆவணப்படத்தில் பார்க்க முடிந்தது. அதைப் பற்றிச் சொல்லுங்கள்?
எனது கிராமம் இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. பெண் பருவமடைந்துவிட்டால் படிப்பு தடைபட்டுவிடும். எங்கள் கிராமத்தில் பெண்கள் ஜன்னலில் சிறைப்படுவது இன்றும் தொடர்கதை. என் வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது. படிப்பை நிறுத்தி என்னை வீட்டுக்குள் சிறைப்படுத்திவிட்டனர்.

ஆவணப்படத்தில் காட்டியுள்ள அந்த ஜன்னல் வழியாகவே இந்த உலகத்தோடு நான் தொடர்புகொண்டேன். படிக்கும் ஆர்வத்தில் கடைகளில் இருந்து பொட்டலம் கட்டி வாங்கி வரும் பொருட்களின் நிராகரிக்கப்பட்ட காகிதங்களே என் வாசிப்பின் ஆர்வத்தை அப்போது நிறைவு செய்தன. அப்பாவிற்குத் தெரியாமல் அம்மாவின் வழியாக எனது எழுத்தாற்றலை அஞ்சல் அட்டையில் எழுதி பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். என் எண்ணத்தை, வலியினை பெண்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து என் வார்த்தைகளின் வழியாக தொடர்ந்து எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன்.

திருமணத்திற்குப் பின்னான என் வாழ்விலும் அடக்குமுறை கணவன் வழியாகத் தொடர்ந்தபோது பல நேரங்களில் என் சிந்தனைகளை, நாட்காட்டியுடைய கிழிக்கப்பட்ட காகிதங்களே குறிப்பெடுக்க மறைமுகமாக உதவின. என் எழுத்துகள் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்த பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கினேன். அரசியலுக்குள் வந்த பிறகே என்னால் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. 36 ஆண்டுகள் வீட்டை விட்டு நான் வெளியில் போகவில்லை. ஆனால், இந்த எட்டு ஆண்டுகளாக பல ஊர்களுக்கு பல நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். நிறைய சுற்றிவிட்டேன். இன்னும் சுற்றுவேன். மென்மையாக.

நீங்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய சமூகத்துப் பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இஸ்லாமிய மதத்தில் பெண்கள் படிக்கவோ வேலைக்குச் செல்லவோ அல்லது அவர்கள் தொழில் செய்வதற்கோ எந்தத் தடையும் இல்லை. அந்த மாதிரியான எந்தத் தடையையும் குரானில் வலியுறுத்தவுமில்லை. நடுவில் இருக்கும் ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலாலும் தவறான புரிதல்களாலுமே இந்த நிலை உருவாகியுள்ளது. வரதட்சணை எனும் விஷயம் இஸ்லாமிய மதத்தில் இல்லை. மஹர் வழங்கும் வழக்கமே உள்ளது.

மஹர் என்பது பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் மணமகன் வீட்டார் மணமகளின் பெற்றோருக்குக் கொடுத்து பெண்ணை திருமணம் செய்து அழைத்துச் செல்லும் வழக்கம். ஆனால், அது இப்போது ஒரு சில தவறான புரிதல்கள் மற்றும் வழிகாட்டுதலால் மாற்றப்பட்டுவிட்டது. குரானில் இல்லாத விஷயத்தை இடையில் வந்த ஒரு சிலர் அமல்படுத்துகிறார்கள். உண்மையான இஸ்லாமிய வாழ்க்கை முறை தவறுதலாக இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது. நபியின் மனைவி கதீஜா அவரைவிட வயது முதிர்ந்தவர். பெண் தொழில்முனைவோராக செயல்பட்டவர். இதைவிட என்ன சான்று வேண்டும்?

உங்களுடைய அடுத்த படைப்பு?
எழுதி வைத்திருப்பதை வெளியிட ஒரு தயக்கம் உள்ளது. இங்கே சுதந்திரமான எழுத்தாளராக இருப்பது மிகவும்  கடினமாக உள்ளது. என்ன எழுதவேண்டும், என்ன எழுதக்கூடாது என்கிற மனநிலை தானாக வந்துவிட்டது. எழுத்தாளர் பெருமாள் முருகன், எழுத்தாளர் துரை குணா போன்றவர்கள் தங்கள் எழுத்துக்காக பல பிரச்னைகளை சந்தித்த பிறகு ஒருவித பயம் உள்ளது. நினைத்ததை எழுத முடியாத சூழல் நல்லதில்லை. முன்பெல்லாம் பிடிக்காத விஷயத்தை எழுதினால் திட்டினார்கள், பின்னர் அவதூறு பரப்பினார்கள். தற்போது உயிர் பயத்தை உண்டாக்குகிறார்கள். ஆனாலும் எழுதுவேன்.

தற்போது ஓர் ஆளுமையாக இருக்கும் நிலையிலும் ஆணாக பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறதா?
ஆணுக்கான சுதந்திரம் என்பது வேறு. எனக்கு அந்த ஆதங்கம் இருந்தது. இன்னும் இருக்கிறது.

’சல்மா’ ஆவணப்படத்தைப் பற்றி ஒரு படைப்பாளியாக உங்கள் கருத்து?
உலகளாவிய பெண்களுடைய வாழ்க்கை, அதன்  பின்புலம், அதைச் சார்ந்த விஷயங்கள் முழுமையாக வெளியாக வேண்டும். பெண்கள் படித்திருக்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். ஆனால், சமூகம் மாறவேண்டிய தேவை இருக்கிறது. இந்தப் படம் அதற்கு ஒரு கருவியாக இருக்கும்.

-மகேஸ்வரி

home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
how much do abortion pill cost misoprostol abortion cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
viagra helyett viagra pret viagra torta
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
neurontin 400 f6finserve.com neurontin
priligy thailand priligy hinta priligy 30 mg
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
medical abortion clinics women pregnant abortion cost
naltrexone for alcohol cravings go naltrexone pain management
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
revia medication does naltrexone block tramadol ldn colitis
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-11-2018

  19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்