SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கமகனைப் பெற்ற தாயின் வலிகள்

2016-12-08@ 15:48:34

நன்றி குங்குமம் தோழி

துணிவு


அன்பு மட்டுமே உண்மை என்று வாழத் துணிந்த அந்தப் பெண்ணுக்கு பரிசாகக் கிடைத்தது அவமானங்களும் கண்ணீர்த்துளிகளும் மட்டுமே. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பள்ளிக்கே செல்ல வழியற்ற அந்தப் பெண்ணுக்கான ஒரே தேடல் அன்பு மட்டுமே. அந்த அன்பை பகிர்ந்து கொள்ள வந்த தங்கவேலுவோ ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது அந்த வெள்ளந்திப் பெண்ணுக்கு தெரியாது. அவன்தான் உலகம் என நம்பியவளுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சி. அப்புறம் பட்டதெல்லாம் அவமானம் மட்டுமே. ‘‘தலை நிமிர்ந்து இந்த ஊரில் நடக்க மாட்டோமா, நாலு பேர் நம்மையும் மனுஷியாக மதிக்கமாட்டார்களா’’என்ற ஏக்கம் அவள் மனதுக்குள் எப்போதும் உண்டு.

மகன் மாரியப்பன் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவை தலைநிமிரச் செய்திருக்கும் அதே வேளையில் இந்தத் தாய்க்கும் வாழ்நாள் மகிழ்ச்சியை அளித்திருக்கிறார். தனது குழந்தைகளும், அவர்களை வளர்ப்பதற்காக தாங்கிய வலிகளும் மட்டுமே அவருடைய உலகம். பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே  மடை திறந்த வெள்ளம் போல் அத்தனை வலிகளையும் கொட்டித்தீர்க்கின்றன சரோஜாவின் கண்கள். வலிகளுக்கு மட்டுமல்ல இன்று
பெருமைகளுக்கும் சொந்தக்காரி.

சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் ஓமலூர் பகுதியில் தீவட்டிப்பட்டிக்கு அருகில் உள்ளது பெரிய வடகம்பட்டி என்னும் அந்த குக்கிராமம். செல்லும் வழியெங்கும் மாரியப்பனின் வெற்றிக்கு வாழ்த்து பேனர்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அந்த கிராமத்தில் யாரும் திரும்பிப் பார்க்காத அந்தச் சிறிய வீட்டின் முன்னால் மீடியாக்களும், கரை
வேட்டிகளும் பரபரக்கின்றன. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சரோஜா, மிகச்சிறு வயதிலேயே காட்டு வேலை, கட்டிட வேலை, செங்கல் சூளை வேலைகளுக்கு சென்றுள்ளார்.

15 வயதில் வேலைக்குச் சென்ற இடத்தில்  தங்கவேலு காட்டிய அன்பை நம்பினார். குடும்ப உறவுகளின் எதிர்ப்புக்கிடையில் தங்கவேலுவை திருமணம் செய்த சரோஜா சுதா, மாரியப்பன், குமார், கோபி என்று அடுத்தடுத்து 4 குழந்தைகளுக்குத் தாயானார். முதல் குழந்தைக்குத் தாயான பின்னரே கணவர் தங்கவேலுவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உண்டு என்ற தகவல் சரோஜாவுக்குத் தெரியும். அந்த வயதில் அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அளவுக்கு சரோஜா யோசிக்கவேயில்லை.

சரோஜா கர்ப்பம் அடையும்வரை உடன் இருக்கும் கணவர், அதன் பின்னர் முதல் மனைவியிடம் சென்று விடுவார். சரோஜா குழந்தை பெற்று உடல் தேறியவுடன் மீண்டும் தங்கவேலு சரோஜாவுடன் வந்து தங்கியிருப்பார். அடுத்த குழந்தை உருவாகும். அதன் பின் அவர் சென்று விடுவார். இப்படி நான்கு குழந்தைகளுக்குப் பின்னர் அவர் சரோஜாவைப் பார்க்க வருவதையும் தவிர்த்து விட்டார். குழந்தைகளையும் வைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சென்று சரோஜா குடும்பம் நடத்தி வந்தார். கஷ்ட ஜீவனத்தில் அவசரத் தேவைக்கு அக்கம் பக்கம் கடன் வாங்கி குழந்தைகளை வளர்த்தார்.

வாங்கிய கடனை குறித்த நேரத்துக்கு செலுத்த முடியாதபோது கடன் தந்தவர்களால் பல்வேறு தொல்லைகளை அனுபவித்துள்ளார். தன் குழந்தைகள் முன், கடன் கொடுத்தவர்கள் சரோஜாவை அடித்த கொடூரங்களும் நடந்துள்ளன. கட்டிட வேலைக்குச் சென்று கல் சுமந்தவருக்கு நெஞ்சு வலி வந்ததால், அந்த வேலையை விட்டுவிட்டு பள்ளியின் முன்பு தின்பண்டங்கள் விற்பனை செய்துள்ளார். அப்போது மாரியப்பனுக்கு ஐந்து வயது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாரியப்பன் மீது பஸ் மோதி வலது கால் விபத்துக்கு உள்ளானது. அதற்கு வைத்தியம் பார்ப்பதற்கும் பல இடர்பாடுகள்.

தாய் பட்ட கஷ்டம் மாரியப்பனுக்குள் இருந்த அத்தனை ஆசைகளையும் கொன்று விட்டது. வழக்கமான குழந்தைகளுக்குக் கிடைக்கும் எந்த சந்தோஷங்களும் அவனுக்குக் கிடையாது. பள்ளி வயதில் இருந்தே விளையாடப் பிடிக்கும். கால் ஊனமாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் பயிற்சி செய்வான். பயிற்சி செய்யும்போது மாரியப்பனின் காலில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருக்கும். சில நாட்கள் கட்டு போட்டுக் கொண்டு வீட்டில் இருப்பான். மீண்டும் விளையாடச் சென்று விடுவான். தன் தாய் குழந்தைகளை வளர்க்க படும் கஷ்டத்தைப் பார்த்து விடுமுறை நாட்களில் கூலி வேலைகளுக்கு செல்லும் மாரியப்பன் அந்தப் பணத்தை சரோஜாவிடம் கொடுத்துவிடுவார்.

சிறு வயதில் திருமணம். அதன் பின் திருமணம் தந்த ஏமாற்றம், உறவுகளின் புறக்கணிப்பு, வறுமையின் வலி, குழந்தைகளை வளர்க்க தொடர் போராட்டம், இதுதான் சரோஜா இதுவரை வாழ்ந்த வாழ்க்கை. ஒரு நாள் அதிகாலை எல்லாம் மாறிப்போனது. மாரியப்பன் ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற காட்சியை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் சரோஜா. வலியோ, சந்தோஷமோ வெளிப்படுத்த, கண்ணீரை விட சிறந்த வார்த்தை இல்லையே. அவருக்குத் தெரிந்ததெல்லாம் இன்றளவும் கண்ணீர்தான். ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தருணத்தில் மாரியப்பன் தன் தாயை நினைத்து ஒரு துளி கண்ணீராவது விட்டிருப்பார். அந்தளவு தாய்க்கும் மகனுக்குமான பாசப் பிணைப்பு வியக்க வைக்கிறது.

‘‘என் வாழ்க்கை எப்பவும் கஷ்ட ஜீவனம். மாரியப்பன் சின்ன வயதில் இருந்தே ரொம்பவும் அமைதியான பையன். எது சொன்னாலும் மறுக்காம கேட்டுப்பான். மூன்று நாள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறோம். எந்தக் கஷ்டத்தையும் அமைதியாக ஏற்றுக் கொள்வான். மற்ற பசங்களைப் போல சினிமா, பாட்டு என்று எதுவும் அவன் வாழ்க்கையில் இல்லை. அதைப் பார்க்கவும் அவன் விரும்பியதில்லை. கால் அடிபட்டு அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் அதில் பிரச்னை இருந்தது. விளையாடினால் ரத்தம் வரும். அந்த வலியை அவன் வெளியில் சொன்னது இல்லை.

விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே அவனுக்குள் இருந்தது. பயிற்சியாளர்கள் அவனுக்கு உதவினர். கூலி வேலைக்குப் போய் குழந்தைகளை வளர்ப்பதே எனக்கு சவாலாக இருந்தது. இதற்காக பட்ட அவமானங்களுக்கு கணக்கில்லை. இந்த ஊரில் பலரும் மதிக்கும் குடும்பமாக தலைநிமிர வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். ஆனால், அதெல்லாம் நடக்குமா என்று தெரியாது. என் வேதனை என் மகனுக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
அதுவே அவனை உலக சாதனை வரை அனுப்பி வைத்துள்ளது.

பாராலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு முன்புவரை கூட அவனது காலில் புண் இருந்தது. அடிக்கடி ரத்தம் வரும் பிரச்சனையும் இருந்தது. வலியை தாங்கிக் கொண்டு இந்த வெற்றியை எட்டியிருக்கிறான்” என்கிறார் சரோஜா. மாரியப்பன் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று தேடிக் கண்டுபிடித்து சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் சரோஜாவோ இப்படிச் சொல்கிறார் ‘‘என் சாதியை சொல்லி என் பிள்ளையை நான் வளர்க்கவில்லை. அவன் தனது தந்தையை அப்பா என்று கூட அழைத்ததில்லை” என்கிறார் அழுத்தமாக.

“விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனை இயக்கியது. ஒலிம்பிக் போட்டிக்கு போகும் போது எனக்குள்ளும் ஒரு பயம் இருந்தது. என் பையன் அவமானங்களையும், வலிகளையும் மட்டுமே தாங்கியவன். அவன் வெற்றி பெற்றான் என்ற சந்தோஷம் எங்களது அத்தனை அவமானங்களையும் துடைத்து விட்டது. இன்று உலகம் வியக்கிறது. ஊரெல்லாம் கொண்டாடுகிறது. வீட்டுக்கே வந்து வாழ்த்துச் சொல்லுகின்றனர். எப்போது எனது மகனை கண்களில் பார்ப்பேன் என்ற தவிப்போடு காத்திருக்கிறேன் ’’ எனும் சரோஜாவின் கண்களில் இப்போது ஆனந்தக் கண்ணீர்.

அந்த சிறிய வீட்டுக்குள் மாரியப்பன் வாங்கிய பதக்கங்களும் சான்றிதழ்களும் கட்டிலின் மேல் வைக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கம் வாங்கிய உடன் பல ஸ்பான்சர் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இனி அவர்களின் வாழ்க்கையே வண்ணமயமாக மாறக்கூடும். கடந்து வந்த பாதை எந்நாளும் மறக்காது என்கிறார் இந்தியாவுக்கு தங்க மாரியப்பனை பெற்று வளர்த்த சரோஜா!

ஸ்ரீதேவி

படங்கள்: என்.ஆர்த்தி

home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros flagyl vademecum flagyl precio
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
costs of abortion pill abortion pill price abortion pill side effects
costs of abortion pill abortion pill price abortion pill side effects
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
voltaren gel voltaren retard voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion pill costs cons of abortion pill about abortion pill
priligy thailand priligy 60 mg priligy 30 mg
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
cialis online coupon ambito20.it prescription discount coupons
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone where to buy link naltrexone drug interactions
low dose ldn ldn benefits ldn online
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்