SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்று தேவதை!

2016-11-28@ 13:00:26

டாக்டரின் அலட்சியத்தால் மாற்றுத் திறனாளியானவர் இன்று அதே மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டியாக மாறியிருக்கிறார் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சின்னத் தவறு ஒருவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது. அபிலாஷாவின் வாழ்க்கையும் அப்படித்தான். சின்ன வயதில் டாக்டர் செய்த ஒரு தவறினால் அவர் அதனை வாழ்நாள் முழுக்க அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை. இதனால் அவர் எதிர்கொண்ட அவமானங்களும் அழுகைகளும் அதிகம். அதையெல்லாம் தாண்டி இன்று அபிலாஷா சாதித்திருக்கிறார்.

ஆம். தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘வாய்ஸ் ஆஃப் த அன்ஹெர்ட்’ என்ற அமைப்பை தன் அக்கா அஸ்வினி மற்றும் நண்பர் விவேக் உதவியுடன் உருவாக்கி அதன் மூலம் பலருக்கு புதிய வழியை காட்டி
வருகிறார்.‘‘நான் பக்கா தமிழ்ப் பொண்ணு. அப்பா, சீனாவுல இருக்கிற பிரபல பர்ஃயூம் நிறுவனத்துல முக்கிய பொறுப்புல இருக்கார். அம்மா, இல்லத்தரசி...’’ என்று மழலைக் குரலில் பேச ஆரம்பித்தார் அபிலாஷா.

‘‘அப்ப எனக்கு ஒரு வயசு. நாங்க மும்பைல இருந்தோம். திடீர்னு ஃபிக்ஸ் மாதிரி வந்துடுச்சு. அப்பாவும் அம்மாவும் உடனடியா என்னை ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அதிக டோசேஜ் மருந்தை கொடுத்துட்டார். என் உடம்பு சரியாச்சு. ஆனா...’’ என்று நிறுத்திய அபிலாஷா, தன் தோளை குலுக்கிவிட்டு பெருமூச்சுடன் தொடர்ந்தார்.‘‘மருந்தோட விளைவால என் வலது காது சுத்தமா கேட்காம போயிடுச்சு. இடது காது சுமாரா கேட்கும். மத்த குழந்தைகள் மாதிரி என்னால கேட்க முடியாம போனதால பேசற திறனும் போயிட்டுச்சு. அதாவது, நான் பேசவே மறந்துட்டேன்.

இதுக்கு பிறகு நாங்க ஹைதராபாத்துக்கு மாற்றல் ஆகி வந்தோம். ஒரு பள்ளில என்னை சேர்த்தாங்க. அங்க சேர்ந்த பிறகுதான் என் பிரச்னை என்னன்னே அப்பா அம்மாவுக்கு தெரிய வந்தது. உடனே பதறிப் போய் என்னை ஈ.என்.டி., ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போனாங்க. அந்த டாக்டர்தான் ஊசியோட பின்விளைவால எனக்கு இப்படி ஆகியிருக்குனு சொன்னாரு. அப்ப எனக்கு நாலு வயசு. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலை. அப்பா, அம்மா, அக்கா எல்லாம் ஏன் அழறாங்க? தெரியல. சும்மா அவங்களை வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தேன்.

ஒரு வருஷம் கழிச்சு நாங்க சென்னைக்கு வந்தோம். காது கேட்கும் திறனுக்கான சிகிச்சை ஒருபக்கம் நடந்துகிட்டே இருந்தது. மறுபக்கம் என்னை பள்ளில சேர்க்க பெற்றோர் முயற்சி செஞ்சாங்க. ஒருவழியா கடைசில ஒரு பள்ளில எனக்கு சீட்டு கிடைச்சது...’’ என்று தன் பால்யத்தை அசைபோட்ட அபிலாஷா, இதன் பிறகு பல இன்னல்களை சந்தித்திருக்கிறார். ‘‘முதல்ல அந்தப் பள்ளில என்னை அவங்க சேர்த்துக்கலை.

அப்பாவும் அம்மாவும் கெஞ்சி கேட்டுகிட்டதால போனா போகுதுன்னு சேர்த்தாங்க. ஆனா, என்னை மாற்றுத்திறனாளியாதான் ட்ரீட் செய்தாங்க. என் காதுல இருந்த ஹியரிங் எய்டை சக மாணவர்கள் வித்தியாசமா பார்த்தாங்க. கிண்டல் செஞ்சாங்க. என் மேல கல் எறிவாங்க. ஹியரிங் எய்டுல தண்ணீர் ஊத்துவாங்க. நான் பேசறதை கிண்டல் செய்வாங்க... மாணவர்கள்தான் இப்படீன்னா... டீச்சர்ஸும் இதே மாதிரி நடந்துகிட்டாங்க.

இதெல்லாம் என்னை ரொம்ப காயப்படுத்திச்சு. நாலு வயசு பொண்ணுக்கு எப்படி இருக்கும்னு நீங்களே நினைச்சுப் பாருங்க. வீட்ல சொன்னா அப்பா, அம்மா கஷ்டப்படுவாங்க. அதனால எனக்குள்ளயே பூட்டி வைச்சேன். ஒருவழியா வேற பள்ளில என்னை சேர்த்தாங்க. ஆனாலும் ஸ்கூலுக்கு போகவே எனக்கு பயமா இருந்தது. பழைய பள்ளி கொடுத்த அனுபவம்தான் காரணம்.

ஆனா, முதல் நாள் ஸ்கூலுக்கு போனப்ப யாரும் என்னை வித்தியாசமா பார்க்கலை. காது கேட்கற மெஷினை பார்த்து கிண்டல் செய்யலை. டீச்சர்ஸும் என்னை அள்ளி அணைச்சுகிட்டாங்க. உண்மையை சொல்லணும்னா எனக்குள்ள தன்னம்பிக்கை வந்தது அப்பதான். படிக்கிற ஆசையும் கொழுந்துவிட்டு எரிந்தது. என் அம்மாவும் அக்காவும்தான் எனக்கு குரு. ஒவ்வொரு சொல்லா என்னை உச்சரிக்க வைச்சது அவங்கதான். படிப்படியா நான் முன்னேற ஆரம்பிச்சேன்...’’ முகத்தில் பெருமை பொங்க சொல்கிறார் அபிலாஷா. அதற்கு காரணமும் இருக்கிறது. படிப்பைத் தவிர பரதம், ஓவியம் வரைதல், அபாகஸ்... என சகலகலாவல்லியாக இப்போது அவர் இருக்கிறார்.

‘‘பரதம் எனக்கு பிடிச்ச கலை. ஆனா, இசையை உணர்ந்து என்னால நடனமாட முடியுமான்னு கவலை. மத்தவங்க நடனம் ஆடறப்ப தரைல ஏற்படுகிற அதிர்வை வைச்சுதான் நான் உணர்வேன். இதையே இசையா மாத்திதான் நான் பரதம் கத்துகிட்டேன். இதேமாதிரிதான் அபாகஸ். பத்து லெவலையும் முடிச்சதும் வாய்விட்டு அழுதேன். குறைபாடுள்ள எந்தப் பெண்ணும் பத்து லெவலையும் முடிச்சதில்லை. நான்தான் முதல் ஆள்.

இந்த நேரத்துலதான் என்னால இப்படி சாதிக்க முடியறப்ப என்னைப் போலவே பாதிக்கப்பட்ட மத்தவங்களும் நிச்சயம் சாதிப்பாங்க. அதுக்கு ஊன்றுகோலா நாம ஏன் இருக்கக் கூடாதுன்னு தோணிச்சு. இந்த எண்ணத்தோட விளைவுதான் ‘வாய்ஸ் ஆஃப் த அன்ஹெர்ட்’ அமைப்பு...’’ என்ற அபிலாஷா, அது குறித்து விவரிக்கத் தொடங்கினார். ‘‘ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் இதை ஆரம்பிச்சோம். எங்ககிட்ட நிறைய திட்டம் இருக்கு. ஆனா, எல்லாத்துக்கும் முன்னாடி முதல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தணும். பலருக்கு இந்த குறைபாடு பத்தியே தெரியலை.

ஒரு சிலருக்கு காது கேட்காது. ஆனா, பேச முடியும். இவங்களுக்கு தேவை ஸ்பீச் தெரபி. பிறவியிலேயே கேட்க முடியாம போனவங்களை குணப்படுத்த முடியும்னு உறுதியா சொல்ல முடியாது. ஆனா, விபத்துனால இடைல கேட்கும் திறனை இழந்தவங்களுக்கு மறுபடியும் அதை பெற்றுத் தர முடியும். இதுக்கு முதல்ல பாதிக்கப்பட்டவங்க குறித்து தெரியணும். அதனால முதல்ல சமூக வலைத் தளத்துல எங்க அமைப்பு பத்தின செய்திகளை வெளியிட்டோம். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. நிறைய பேர் உதவ முன்வந்தாங்க.

வசதி இல்லாதவங்களுக்கு முடிந்த உதவிகளை செய்யறோம். குறிப்பா பெற்றோர்களுக்கும் கூட பிறந்தவங்களுக்கும் கவுன்சிலிங் தர்றோம். ஏன்னா, இவங்க சப்போர்ட்டா இருந்தாதான் அந்த குழந்தையால சாதிக்க முடியும். கூடிய சீக்கிரத்துல எங்க மாணவர்களை வைச்சு ஒரு நிகழ்ச்சி நடத்தப் போறோம். குறை உள்ளவங்கன்னு நீங்க ஒதுக்கின பிள்ளைகளுக்குள்ள எவ்வளவு திறமைகள் இருக்கு பாருங்கனு காட்டப் போறோம்.

இந்த நிகழ்ச்சி வழியா கிடைக்கிற நிதியை வைச்சு வசதி குறைவான பிள்ளைகளுக்கு ஸ்பீச் தெரபியும், ஹியரிங் எய்டும் வாங்கித் தரப் போறோம். நகரத்துல ஓரளவு கால் பதிச்ச பிறகு கிராமங்கள் நோக்கி செல்லப் போறோம்...’’ கண்களில் கனவு மின்ன சொல்லும் அபிலாஷா, இப்போது பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ப்ரியா

amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
lamisil crema lamisil pomada lamisil spray
lamisil crema lamisil lamisil spray
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil cialis pris cialis patent
flagyl perros flagyl vademecum flagyl precio
flagyl perros flagyl vademecum flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
vermox pret corladjunin.org.pe vermox prospect
vermox pret vermox prospect vermox prospect
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
cialis cialis nedir cialis tablet
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
priligy thailand priligy 60 mg priligy 30 mg
lamisil crema lamisil pastillas lamisil
cialis online coupon ambito20.it prescription discount coupons
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
buy naltrexone click what is ldn used for
naltrexone where to buy click naltrexone drug interactions
naltrexone alcohol open implant for opiate addiction
low dose ldn ldn benefits ldn online
trexan medication blog.aids2014.org naltrexone manufacturer
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்